ஊழல்; பாக்., மாஜி பிரதமர் நவாஸ், மகளுக்கு சிறை

Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (17)
Advertisement
நவாஸ் ஷெரீப்,  ஊழல்,  சிறை

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறையும், அவரது மகளுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஊழல் பணத்தில் லண்டனில் 4 குடியிருப்புகளை வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. இந்த குழு, விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது.

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர், இன்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மகள் மரியம் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. தற்போது, நவாசும் அவரது குடும்பத்தினரும் லண்டனில் தங்கியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
06-ஜூலை-201823:51:45 IST Report Abuse
மலரின் மகள் அறிவாலும் உழைப்பாலும் முன்னேறிய தேசம். பின்னாளில் அங்கிருந்து பெரும்பாலான அறிவாளிகள் பெரியண்ணன் தேசத்திற்கு சென்றுவிட்டதாலும், இந்த தேசத்தில் அறிவாளிகள் சற்று புறம் தள்ளப்பட்டதாலும் வளர்ச்சியில் சருக்கம். அவர்களால் முன்போல் முன்னணியில் இருக்க முடியவில்லை. ஆகையால் அவர்களுக்கே உரித்தான சில தந்திரம் சூழ்ந்த நிர்வாக நடவடிக்கை மூலம் இன்னமும் முன்னணியில் இருப்பதாக வைத்து கொள்கிறார்கள். பிற நாட்டு சொத்துக்களை கொள்ளை அடித்து மியூசியம் மற்றும் அவர்கள் அரண்மனையில் பதுக்கியது போல இன்று அதை வேறு விதமாக செய்கிறார்கள். முன்பு போல அரசாங்கமே கொள்ளை அடிப்பது இல்லை. யுத்தம் செய்ய முடியாது. பொருளாதாரத்தில் தாழ்ந்து விடுவார்கள். ஆகையால் கோடான கொடிகளை கொள்ளை அடித்தவர்கள் அதை முதலீடு செய்து மல்லையா போன்ற ராஜ கம்பீர வாழ்க்கை வாழ அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது சட்டப்படி பாதுகாப்பு தருகிறது. நிலைக்குமா? எந்த தேசத்தவர்களாக இருந்தால் என்ன, அவர்கள் சமபாதித்த சொத்து அந்த தேசத்தின் சட்டப்படியான சொத்துக்கள் என்றால் மட்டுமே அதற்கு அனுமதித்திருக்க வேண்டும். ஆனால் சேவகித்து வேறு. திருட்டுகள் மாபெரும் திருடர்களாக இருந்தால் வாருங்கள் இரத்தின கம்பளம் என்ற நிலையில் இருக்கிறதா?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
06-ஜூலை-201823:48:57 IST Report Abuse
Pugazh V பாகிஸ்தான் நீதிபதிகள் தைரியம் மிகுந்தவர்கள்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
06-ஜூலை-201822:08:53 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நிச்சயம் நமது நாட்டு சட்டத்துறை, நீதிமன்றங்கள் பாகிஸ்தானிடமிருந்தும் கற்று கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு பெரிய ஊழல் வழக்கிற்கும் 30 வருஷங்களுக்கு குறையாமல் எடுத்து நீதியை காலம் தாழ்த்தும் நமது நீதிமன்றங்கள், தலைகுனியத்தான் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X