இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா| Dinamalar

இலங்கை அமைச்சர் விஜயகலா ராஜினாமா

Added : ஜூலை 06, 2018 | கருத்துகள் (4)
இலங்கை, அமைச்சர், ராஜினாமா

கொழும்பு: விடுதலை புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து சர்ச்சைக்குள்ளான இலங்கையின் சிறுவர் மற்றும் மகளிர் விவகாரத்துறை அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகலா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், பதவிவிலகுமாறு யாரும் என்னை கோரவில்லை. எனக்கெதிரான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவே பதவி விலகினேன். ராஜினாமா கடிதத்தை நேற்றே அதிபர் மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் பதில் கிடைக்கவில்லை என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X