கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொய் வழக்கில், 'மாஜி' ராணுவ வீரர் கைது : * இன்ஸ்., மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவு

Added : ஜூலை 07, 2018
Share
Advertisement

சென்னை: முன்னாள் ராணுவ வீரரை, பொய் வழக்கில் கைது செய்து, அடித்து துன்புறுத்திய இன்ஸ்பெக்டர் மீது, துறை ரீதியான விசாரணை நடத்த, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம், நாங்கூரை சேர்ந்த, முன்னாள் ராணுவ வீரர் ராஜதுரை. இவர், மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு: ராணுவத்தில், 17 ஆண்டுகள் பணியாற்றிய பின், நாங்கூரில் உள்ள, நாராயண பெருமாள் கோவிலில், இரவு காவலராக பணியில் சேர்ந்தேன். அங்கு, 2013ல், பணியில் இருந்த போது, திருவெங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,ராஜராமன் ஆகியோர், அகோரமூர்த்தி என்பவர் புகார் கொடுத்திருப்பதாக கூறி, காவல் நிலையத்துக்கு அழைத்தனர். நான், 'பணியை முடித்து விட்டு வருகிறேன்' என்றேன். ஏற்க மறுத்து அவர்கள், வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு புகார் கொடுத்த, அகோரமூர்த்தி என்னை அடித்தார். போலீசார் என்னை அநாகரிகமாக பேசி, அடித்து துன்புறுத்தினர். பின், சீர்காழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது தான், அகோரமூர்த்தியை நான் அடித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து, நீதிபதியிடமும் கூறினேன். பின், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தேன். என்னை அடித்து துன்புறுத்திய இன்ஸ்பெக்டர் மற்றும் எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த, நீதிபதி ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்கள் மற்றும் சாட்சிகளை பார்க்கும் போது, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் எஸ்.ஐ., ராஜராமன் தவறு செய்திருப்பது தெரிய வருகிறது. எனவே, மனுதாரருக்கு, ஒரு மாதத்தில், 1.50 லட்சம் ரூபாயை, தமிழக அரசு வழங்க வேண்டும். அந்த தொகையை, இன்ஸ்பெக்டரிடம் இருந்து, ஒரு லட்சம் ரூபாய், எஸ்.ஐ.,யிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் சம்பளத்தில் பிடித்து கொள்ளலாம். மேலும், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்ஸ்பெக்டர் செந்திகுமார் மீது, தமிழக டி.ஜி.பி., துறை ரீதியான விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X