குழந்தை விற்பனை: கன்னியாஸ்திரி கைது

Added : ஜூலை 07, 2018
Advertisement

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் செயல்பட்டு வரும் குழந்தைகள் காப்பகத்தில், குழந்தைகளை விற்ற பிரச்னையில் 2 கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர்.ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த 3 குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளை தலைவி கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார்

தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X