பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
'நீட்' தேர்வு , மாணவர்கள்,மகிழ்ச்சி

புதுடில்லி: ''சி.பி.எஸ்.இ.,யால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்த, 'நீட்' மருத்துவ நுழைவுத் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, 'நெட்' தேர்வுகளை, என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பு இனி நடத்தும்,'' என, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார். ஆண்டுக்கு இரு நீட் தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறுஅறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'உயர் கல்விகளுக்கான நுழைவுத்தேர்வுகளை, தன்னாட்சி அதிகாரம் பெற்ற சிறப்பானதொரு அமைப்பின் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்' என, மத்திய நிதி அமைச்சர் பதவி வகித்து வந்த அருண் ஜெட்லி, 2017 - 18பட்ஜெட்டில் அறிவித்தார். இதையடுத்து, இந்த தேர்வுகளை நடத்த, தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டது.இது தொடர்பாக, 2017, நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், தேசிய தேர்வு முகமை என்ற தனி அமைப்புக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான, நீட் தேர்வு, ஐ.ஐ.டி., படிப்புகளுக்கான, ஜே.இ.இ., மற்றும் பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான,'நெட்' எனப்படும், தேசிய தகுதி தேர்வு ஆகியவற்றை, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தி வந்தது. 'இந்த தேர்வுகளை, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள

தேசிய தேர்வு முகமை என்ற அமைப்பு நடத்தும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக, மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இதுவரை, ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் நடத்தப்பட்டு வந்த நீட், ஜே.இ.இ., தேர்வுகள், இனி, ஆண்டுக்கு, இருமுறை நடத்தப்படும்.நீட் தேர்வுகள், பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் நடத்தப்படும். மாணவர்கள் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகின்றனரோ, அதுவே ஏற்கப்படும். ஜே.இ.இ., தேர்வுகள், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். பல்கலை பேராசிரியர் பணிகளுக்கான, நெட் தேர்வுகள், டிசம்பர் மாதம் நடத்தப்படும். இந்த தேர்வுகள் அனைத்தும் கணினிமயமாக்கப்படுகின்றன. இதற்காக, அனைத்து

நகரங்கள்,கிராமங்களில் உள்ள பள்ளிகள், கல்லுாரிகளில், அரசு கணினி பயிற்சி மையங்கள் துவங்கப்பட உள்ளன. இந்த மையங்களில், மாணவர்கள் ஆண்டு முழுவதும், இலவச பயிற்சி பெறலாம். இதன் மூலம், கிராமப்புறங்களில் வசிக்கும் மாணவர்கள், நீட் தேர்வுக்கு முன், தங்களை சிறப்பாக தயார் செய்து கொள்ள முடியும். இந்த மையங்கள், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் செயல்படும். விருப்பம் உள்ள அனைவரும், இதில் சேர்ந்து பயிற்சி பெறலாம். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் இருந்து,இலவச கணினி பயிற்சி மையங்கள் செயல்பட துவங்கும். இதுகுறித்த விரிவான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். ஒவ்வொரு தேர்வும், நான்கு அல்லது ஐந்து நாட்களில் நடத்தப்படும். இதில், பாடத்திட்டம், கேள்வி வடிவம் மற்றும்

தேர்வு எழுதும் மொழியில் மாற்றம் எதுவும் இல்லை. வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள நெட் தேர்வு,புதிதாக உருவாக்கப்பட்டுள்ள,தேசிய தேர்வு முகமை மூலம், முதல் முறையாக நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகள், பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த மென்பொருள் மற்றும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்படும். சர்வதேச தரத்தில் நடைபெறும் புதிய தேர்வு முறையில், கேள்வித்தாள் வெளியாவது போன்ற முறைகேடுகள் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.இவ்வாறு அவர் கூறினார். ஆண்டுக்கு இரு, 'நீட்' தேர்வு, எதில் அதிக மதிப்பெண் பெறுவரோ, அது ஏற்கப்படும்; ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நிபுணர்கள் குழு தயார்!


புதிய தேர்வு நடைமுறையை, சிறப்பாக செயல்படுத்த, கல்வி நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள், புள்ளியியல் ஆய்வாளர்கள், உளவியல் நிபுணர்கள் ஆகியோரை, அரசு நியமனம் செய்ய உள்ளது. இவர்களின் உதவியுடன், தேர்வு முறையில் எதிர்கொள்ளப்படும் நடைமுறை சிக்கல்கள் சரி செய்யப்படும்.வினா தாள்களை வடிவமைக்க, நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. கேள்விகளை தயார் செய்வதில், அவர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பர்.நிபுணர் குழுவுக்கான உறுப்பினர்கள், தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும், அவர்கள் விரைவில், தேசிய தேர்வு முகமையில் இணைந்து பணியாற்றுவர் என்றும் கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிரபு - மதுரை,இந்தியா
08-ஜூலை-201822:53:29 IST Report Abuse

பிரபுமத்திய அரசுக்கு நீட் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். பீசு கட்டி பரீட்சை எழுதுறவன் இங்கே. பரீட்சை எழுதாமலே சீட்டு வாங்குறவன் அங்கே.

Rate this:
Rajesh Rajan - bangalore,இந்தியா
08-ஜூலை-201822:31:22 IST Report Abuse

Rajesh Rajanமாதாமாதம் நடத்தினால் இன்னும் அதிகமாக அரசு சம்பாதிக்கலாம் (பீஸ் 1500 )

Rate this:
ராம.ராசு - கரூர்,இந்தியா
08-ஜூலை-201821:08:05 IST Report Abuse

ராம.ராசு தனிப்பெரும்பான்மை இருக்கிறது என்பதால் விருப்பத்திற்கு திட்டத்தை மத்தியில் ஆள்பவர்கள் உருவாக்குகிறார்கள். பல்வேறு புவி அமைப்பு, பல மொழிகள், மதங்கள், ஆயிரக்கணக்கான் சாதிப்பிரிவுகள் கொண்ட நமது நாடு பலதரப்பட்ட கலாசாரத்தை உள்ளடக்கியது. அதனாலதான் மொழிவாரியான மாநிலம் முந்தைய அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. வேண்டுமானால் அனைத்து மாநில கலாச்சாரத்தை படிக்கின்ற ஒரு பாடப்பிரிவை உருவாக்க மாநிலங்களுக்கு அறிவுத்தலாம். அதை விடுத்து மாநில அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுவான தேர்வு என்பது தேவையற்ற குழப்பத்தையே உருவாக்கும். இப்படியான ஒன்றுபட்ட தேர்வுகள் நடத்துவதால் மாணவ சமுதாயத்தை மட்டும் அல்ல பெற்றோர்களுக்கும் ஒருவிதமான பதட்டத்தையே உருவாக்கும். மாநில அளவில் பள்ளிகளில் மேல் நிலைப் படிப்பு முடித்த பிறகும், அறிவியல் சார்ந்த பாடங்களைப் படித்த பிறகும், மாநிலம் தழுவிய பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று... அதற்குப் பிறகும் மருத்துவ, பொறியியல் படிப்பிற்குத் தனிப்பட்ட தேர்வுகள் என்பது தேவையில்லாத ஒன்றுதான். ஒவ்வொரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது அந்தந்த மாநிலத்தில் இருக்கின்ற அரசின் திட்டங்களால் வருவது. அந்த வகையில் தமிழ் நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்கள், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நல்ல வளர்ச்சியையே பெற்றுள்ளது. அந்த வகையில் வட மாநிலங்கள் வேண்டுமானால் தென் மாநிலங்களின் திட்டங்களைப் பின்பற்றலாம. ஆனால் அதற்க்கு மாறாக இன்னும் வளரும் நிலையில் இருக்கின்ற வட மாநிலக் கொள்கைகளை திணிப்பது, மத்திய ஆளும் கட்சியின் தனிப்பெரும்பான்மை நிலைநிறுத்தவே. வேண்டுமானால் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அறிவியல் பாடங்களை கட்டாயப்படுத்தலாம். அப்படி நடத்தப்பட்டால் தேவையில்லாமல் மருத்துவ, பொறியியல் படிப்பிற்குத் தனியாக தேர்வுகள் என்பது தேவையில்லாமல் போகும். இப்படித் தனியான தேர்வு என்பது மாணவர்களுக்கு தேவையற்ற மனச் சுமையாக, பாடச் சுமையாக இருக்கும். எதிர்ப்பு என்பது கூட இல்லாமல் போகும் நிலை வரும். எப்படிப் பார்த்தாலும் தனித் தேர்வு என்பது அவசியம் இல்லாதது. ஆனால் என்ன... மத்திய ஆட்சியாளர்கள் முடிவெடுத்துவிட்டால் அதை நிறைவேற்றுவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் அது... பண மதிப்பிழைப்பாகட்டும், GST ஆகட்டும், இப்படியான தேர்வு முறையாகட்டும் எதிலும் மக்களின் எண்ணங்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. வேறு வழி இல்லை. மக்கள் அதற்குப் பழக்கிக்கொள்ள வேண்டும்.

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X