அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறிவாலயத்தில் அர்ச்சனை நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை

Updated : ஜூலை 08, 2018 | Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (7)
Advertisement
அறிவாலயம், அர்ச்சனை ,நிர்வாகிகளுக்கு, எச்சரிக்கை

கொங்கு மண்டல, தி.மு.க., நிர்வாகிகளை, அறிவாலயத்திற்கு அழைத்து, தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் எச்சரித்து அனுப்பியுள்ளார்.
சென்னை, அறிவாலயத்தில், 6ம் தேதி, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட செயலர்கள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகளை, ஸ்டாலின், தனித்தனியாக சந்தித்து பேசினார்.கட்சி நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுக்களை, மாநில நிர்வாகிகள் விசாரித்தால், நியாயமான நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்ற புகார், ஸ்டாலினுக்கு வந்துள்ளது. அதனால், அவரே நேரடியாக புகார் மனுக்களை விசாரித்து, சம்பந்தப்பட்ட நிர்வாகியை அழைத்து, எச்சரித்து அனுப்புகிறார்.

இது குறித்து, கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:சென்னைக்கு, நேற்று முன்தினம் வந்த அழகிரி, தன் பக்கம் தான் தொண்டர்கள் உள்ளனர் என, 'கொளுத்தி' போட்டதால், ஸ்டாலின் கடும் அதிருப்தியில் இருக்கிறார். சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்ட செயலர்கள், ஆத்துார் ஒன்றிய, நகர நிர்வாகிகள், ஈரோடு வடக்கு, தெற்கு மாவட்ட செயலர்கள், கோவை மாவட்ட நிர்வாகிகளிடம், ஸ்டாலின் பேசினார்.

அப்போது, நிர்வாகிகள் சிலரிடம் ஸ்டாலின், 'பூத் கமிட்டிகளை உடனே அமையுங்கள். அவர்களை முறையாக வேலை வாங்குங்கள். கோஷ்டி பூசலில் ஈடுபடாதீர்கள். அனைவரையும் அரவணைத்து செல்லுங்கள்.'நீங்கள் நடத்தியுள்ள நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மக்கள் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளியுங்கள். 'கட்டப்பஞ்சாயத்து நடவடிக்கைகளில் ஈடுபடாதீர். அ.தி.மு.க., அரசின் அவலங்களை, பொதுக்கூட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்த வேண்டும்' என்றார்.

சேலம் மாவட்ட தி.மு.க.,வில், சேலம் கிழக்கு, மேற்கு, மத்தி என, மூன்று மாவட்ட செயலர்கள் உள்ளனர். தொகுதி மறுசீரமைப்பின் அடிப்படையில், இரண்டு மாவட்டங்களாக குறைக்கப்படுகின்றன.தற்போது, தேர்தல் பிரிவு செயலராக உள்ள, முன்னாள் அமைச்சர், செல்வகணபதிக்கு, மாவட்ட செயலர் பதவி வழங்கப்பட உள்ளது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
08-ஜூலை-201823:41:41 IST Report Abuse
mindum vasantham கொங்கு நாட்டில் திமுக நுழைய தடை
Rate this:
Share this comment
Cancel
Arasu - Ballary,இந்தியா
08-ஜூலை-201821:41:20 IST Report Abuse
Arasu இவர்கள் கட்சி நடத்துகிறார்களா அல்லது குடும்ப பிசினெஸ்ஸா, போலி மதவாதம், போலி நாத்திகம் ஒழியாதவரை இந்த கட்சி தேறாது, கிழ நடிகர்கள் இவர்களின் வோட் வங்கியை நாசம் செய்வார்கள், பா ம க , ஜி கே வாசன், வந்தால் ஒரு மாற்றம் வரும்
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
08-ஜூலை-201821:11:41 IST Report Abuse
Baskar இவர் முகத்தை பார்த்தால் யாருக்கும் அர்ச்சனை செய்வது போல் இல்லை. யாரிடமோ அர்ச்சனை வாங்குபவர் போல் தெரிகிறது.பாவம் சுடாலின்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X