அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அழகிரி எதிர்ப்பை சமாளிக்க கனிமொழிக்கு பதவி
ஸ்டாலின் திடீர் முடிவால் தி.மு.க.,வில் திருப்பம்

முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரிக்கு, அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் வகையில், லண்டனிலிருந்து சென்னை திரும்பியதும், தென் மண்டல, தி.மு.க., செயலர் பதவியை, கனிமொழிக்கு வழங்க, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் ஆலோசனை செய்துள்ள தகவல், கட்சி வட்டாரங்களில் வெளியாகி உள்ளது.

அழகிரி ,கனிமொழி, பதவி,ஸ்டாலின், தி.மு.க.,

முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகனுமான அழகிரி, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட பின், ஒதுங்கி இருந்தாலும், அவ்வப்போது, அதிரடியாக பேசி வருகிறார். லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலின் போது, அழகிரியும், அவரது ஆதரவாளர்களும், தி.மு.க.,வுக்கு எதிராக, தேர்தல் பணிகளில் ஈடுபட்டதால், தென் மாவட்டங்களில் சில தொகுதிகளில், தி.மு.க.,வின் வெற்றி பாதிக்கப்பட்டது. இதனால், அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களான செல்வி, செல்வம் போன்றவர்கள், தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், ஸ்டாலின் தரப்பில், கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில், தஞ்சாவூரில், தி.மு.க., இளைஞரணி துணை செயலர், மகேஷ் பொய்யாமொழியின் இல்ல திருமண



விழாவில், ஸ்டாலின் பேசினார். அப்போது, தன் தலைமை பதவியை, யாராலும் தட்டி பறிக்க முடியாது என, சவால் விட்டார். அழகிரியை மையப்படுத்தி, ஸ்டாலின் சவால் விடுத்து பேசியதால், அவருக்கு பதிலடி கொடுக்க, அழகிரி விரும்பினார். கடந்த, 5ம் தேதி, மதுரை, பாலமேடு அருகே உள்ள சத்திர வள்ளாலபட்டியில், தன் ஆதரவாளரும், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான, மதுரை வீரனின் இல்லத் திருமணத்தில், அழகிரி தன் மனைவி காந்தியுடன் பங்கேற்றார். மண விழாவில் பேசிய அவர், 'செயல்படுகிற வீரர்கள், இங்கு தான் உள்ளனர். இங்குள்ளவர்கள் யாரும் பதவிக்காக இல்லை. 'பதவிக்காக உள்ளவர்கள் எல்லாம், தலைவர்கள் தான். செயல்படாத தலைவர், செயல் தலைவராக, சென்னையில் உள்ளார்' என்றார். அழகிரியின் அதிரடி விமர்சனம், ஸ்டாலின் தரப்பினருக்கு, கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, லண்டன் பயணத்தை முடித்து, சென்னை திரும்பியதும், அழகிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க, ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.அதற்காக, தென் மண்டல தி.மு.க., செயலர் பதவியில், கனிமொழியை நியமிப்பது குறித்து, குடும்ப உறுப்பினர்களிடம், அவர் ஆலோசனை செய்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, தி.மு.க.,வட்டாரங்கள் கூறியதாவது: தன்னையும், தன் ஆதரவாளர்களையும், மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதையும் தீவிர அரசியலில் ஈடுபட, தயாராக இருப்பதையும் பறைசாற்றும் வகையில், அழகிரி யின் பேச்சு உள்ளது.லண்டனுக்கு ஸ்டாலின் செல்லும் நேரத்தில், அழகிரி, சென்னையில் முகாமிட்டுள்ளார்.

Advertisement

பெற்றோர் கருணாநிதி, தயாளுவை சந்தித்து, உடல் நலம் விசாரித்தார். சென்னையில், தன் பேரனை சந்திக்க, அழகிரி வந்துள்ளார் என, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தாலும், பா.ஜ.,வை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவருடன், ரகசிய பேச்சு நடத்தவே, அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த தகவல், ஸ்டாலினுக்கு தெரிய வந்ததால், அவர், அழகிரியின் எதிர்ப்பை சமாளிப்பதற்கும், தென் மண்டல தி.மு.க.,வில் சேதாரம் ஏற்படாமல் தடுக்கவும், கனிமொழிக்கு தென் மண்டல, அமைப்பு செயலர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாக, உட்கட்சி நெருக்கடியை சமாளிக்க, ஸ்டாலின் சில திட்டங்களையும் வகுத்து உள்ளார்.அழகிரியின் எதிர்ப்பை, கனிமொழி மூலம் சரிகட்ட முடியும் என, ஸ்டாலினிடம், அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், யோசனை தெரிவித்துள்ளார். எனவே, லண்டனுக்கு சென்று வந்த பின், கனிமொழிக்கு பதவி அளிப்பது குறித்து, அறிவிப்பு வெளிவரும்.இவ்வாறு கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (55)

Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஆக-201812:11:35 IST Report Abuse

Srinivasan Kannaiyaகுடும்ப அரசியல்... சேர்த்து வைத்த சொத்துக்கள் .... வாரிசுகளை பிரிக்கும் என்று எல்லாம் தெரிந்த மு க வுக்கு தெரியவில்லை...

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
15-ஆக-201808:11:16 IST Report Abuse

Pannadai Pandianஇந்த கனிமொழி மஹா டேஞ்சர். சுடலைக்கு ஒரு நாள் ஆப்பு வைக்கும். கோழிக்கு குளிர்காய்ச்சல் எடுக்கும் போது அதை சூப் வைத்து சாப்பிட தயங்க மாட்டார் கனிமொழி. காரணம் அப்பன் அப்படிப்பட்டவன்.....

Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-201803:52:57 IST Report Abuse

J.V. Iyerதி.மு.க. ஒரு குடும்ப கட்சி. தமிழ் நாட்டை ஆண்டது. இப்போது ஆள துடிக்கிறது. திரும்ப திரும்ப மக்கள் இவர்களுக்கு எப்படி வோட்டு போடுகிறார்கள்? எல்லா குடும்ப கட்சிகளை மக்கள் ஒதுக்க வேண்டும். அப்போதுதான் நாடு விளங்கும்.

Rate this:
Soosaa - CHENNAI,இந்தியா
15-ஆக-201808:33:15 IST Report Abuse

Soosaaஅதுவும் லண்டனும் தமிழ் நாடும் கொல்ல தலை மாடு மாதிரி போய் வருகிறார்கள். மக்கள் யோசிப்பதே இல்ல அதுவும் குறிப்பா தமிழ் மக்களை காரி துப்புகிறார்கள் வட நாட்டில் இப்படி யோசிக்காமல் இவர்கள் பின் கூட்டம் போகிறது. வோட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறது என்று ...

Rate this:
மேலும் 51 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X