நிர்பயா வழக்கு: அப்பீல் மனுக்கள் மீது நாளை தீர்ப்பு

Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (10)
Advertisement
நிர்பயா வழக்கு: அப்பீல் மனுக்கள் மீது நாளை தீர்ப்பு

புதுடில்லி: டில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மேல்முறையீட்டு வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகிறது.
புதுடில்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். . ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், திகார் சிறையில் தற்கொலை செய்துகொண்டான். 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே 4-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் நாளை மேல் முறையீட்டு மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு தீர்ப்ப அளிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
08-ஜூலை-201812:42:30 IST Report Abuse
Pugazh V அடப்பாவமே இந்த வழக்கு இன்னுமா முடியவில்லை? நம்ம ஜி.கே. குறைஞ்சுடுச்சுப்பா. அனைத்து நீதிமன்றங்கள்/ நீதியரசர்கள்/ ஏன் தேசத்திற்கே வெட்கக்கேடு. அதிர்ச்சியாக இருக்கிறது. இந்த கொடூரர்களுக்காகவும் ஒரு வக்கீல் வாதடறாரே அதுதான் மாபெரும் கொடுமை.
Rate this:
Share this comment
Cancel
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
08-ஜூலை-201811:25:42 IST Report Abuse
Needhiyin Pakkam Nil டெல்லி உயர்நீதிமன்றம், சுப்ரிம் கோர்ட், நீங்கள் சொன்ன தீர்ப்பு சரியா தவறா என்று மறு சீராய்வு செய்ய வேண்டும் என்று குற்றவாளிகள் மனு செய்துள்ளனர், இந்த மனுவால் நீதிமன்றங்களுக்கு தான் அவமானம், மக்களை கொஞ்சம் கொஞ்சமாக முட்டாளாக்குவதற்கு பதிலாக ஒரேடியாக இவர்களின் தூக்கு தண்டனையை 100 ஆண்டுகளுக்குள் விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு சொல்லி இருக்கலாம்..........
Rate this:
Share this comment
Cancel
08-ஜூலை-201811:13:16 IST Report Abuse
ஸாயிப்ரியா இந்த மாதரி குற்றவாளிகளுக்கு ஜாமீன,கருணை மனு நிராகரிக்கப் பட வேண்டும்.விவரம் தெரிந்தசிறுவனாக இருந்தால் ஆயுள் தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X