பொது செய்தி

இந்தியா

மிச்சம் மீதி இருந்தா போடுங்கய்யா., புண்ணியமா போகும்

Updated : ஜூலை 08, 2018 | Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (23)
Share
Advertisement
மும்பை, ரொட்டி வங்கி, மஹாராஷ்டிரா, டிஜிபி, உணவு வங்கி, பசி,Roti Bank,  food satiates, hunger, poor

மும்பை: வீடு மற்றும் உணவகங்களில் மிச்சமாகும் உணவை சேகரித்து, பசியால் வாடும் மக்களுக்கு அதனை விநியோகித்து வரும் முன்னாள் போலீஸ் டிஜிபியை பலரும் பாராட்டி வருகின்றனர்.


தொழிலதிபர் உதவி

மஹாராஷ்டிர மாநில டிஜிபியாக இருந்து 2011ல் ஓய்வு பெற்றவர் டி.சிவாநந்தன். இவர், வீடு, உணவு விடுதி, கேளிக்கை விடுதி மற்றும் நிகழ்ச்சிகளில் மிச்சமாகும் உணவுகளை சேகரித்து, சாலையோரங்களில் உணவில்லாமல் பசியால் வாடும் ஏழைகளுக்கு விநியோகம் செய்து வருகிறார். இதற்காக, அவர் மும்பையில் பிரபலமான டப்பாவாலாக்கள் உதவியுடன் ரொட்டி வங்கி என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இங்கு பணிபுரிபவர்கள், மிச்சமாகும், சப்பாத்தி, அரிசி, காய்கறிகள், பருப்பு வகைகளை மக்களிடமிருந்து வாங்கி, அதனை, 60 முதல் 90 நிமிடங்களில் விநியோகம் செய்து விடுகின்றனர். இந்த அமைப்பிற்கு, மும்பையில் பிறந்து லண்டனில் குடியேறிய நிதின் கனாபுர்கர் என்ற தொழிலதிபர், இலவச தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.


மக்கள் ஆதரவு

இது தொடர்பாக சிவாநந்தன் கூறியதாவது: இந்தியா முழுவதும் தினமும் 1.8 லட்சம் டன் உணவுகள் வீணாகின்றன. ஆனால், நாடு முழுவதும், 20 கோடி மக்கள் பசியால் வாடுகின்றனர். இதில் மும்பையில் அதிகம். உணவகங்களில் மிச்சமாகும் உணவை, வெளியாட்களுக்கு கொடுப்பதில் சிக்கல் உள்ளதால், எங்களது தொண்டு நிறுவனம் மூலம் அதனை முறைப்படுத்தி வினியோகம் செய்கிறோம். ரொட்டி வங்கி அமைப்பிற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஜிபிஆர்எஸ் சாதனம் பொருத்தப்பட்ட இரண்டு வேன்கள், உணவுகளுடன் மருத்துவமனை மற்றும் குடிசைப்பகுதியில் சுற்றி சுற்றி வரும். அங்கு தேவைப்படுவோருக்கு உணவு விநியோகம் செய்யப்படும். இதன் மூலம், ஏழை சிறுவர்கள் குற்றசெயலில் ஈடுபடுவது தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
09-ஜூலை-201800:44:34 IST Report Abuse
Makkal Enn pakam இந்த தலைப்பு அந்த நல்ல உள்ளங்களை கேவலப்படுத்துவதாக உள்ளது, தினமலர் கொஞ்சம் பொறுப்புடன் தலைப்பை வைப்பது நன்று .....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
08-ஜூலை-201822:49:16 IST Report Abuse
Nallavan Nallavan தலைப்பில் அவர்கள் ஏதோ பிச்சை எடுப்பது போலக் குறிப்பிட்டுள்ளீர்கள் ...... அது பிச்சையல்ல .... சேவை ..... டுமீளர்களுக்கு எல்லாம் விபரீதமாகவே தெரியும் ......
Rate this:
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
08-ஜூலை-201821:29:22 IST Report Abuse
Mannai Radha Krishnan இலவசம் மக்களை சோம்பேறியாக்கிவிடும். காட்டு மிருகங்கள் கூட தேடி-தேடி உணவு உண்டால் தான் பலம் உள்ளதாகவும், புத்தி கூர்மை உள்ளதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வருகிறது. ஊணமுற்றவர், மிகவும் வயதானவர்கள் விடயம் வேறு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X