சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

டீ கடை பெஞ்ச்

Added : ஜூலை 08, 2018 | கருத்துகள் (1)
Advertisement
டீ கடை பெஞ்ச்


கலெக்டர் பதவிக்கு காத்திருக்கும் இளம் அதிகாரிகள்!

''எல்லாருக்கும் நண்டு சூப் குடுத்து அசத்திட்டாரு பா...'' என, அரட்டை கச்சேரிக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

''யாரு வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.

''சட்டசபையில, சமீபத்துல, நண்டு சூப் பத்தி சூடான விவாதம் நடந்துச்சு... அதை, துணை சபாநாயகர் ஜெயராமன், சபை குறிப்புல இருந்து நீக்கிட்டாரு பா... ''மறுநாள் சட்டசபைக்கு வந்த, எம்.எல்.ஏ.,க்களுக்கு, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார், சொந்த செலவுல, நண்டு சூப் குடுத்திருக்கார்... கட்சி வித்தியாசம் இல்லாம, எல்லா, எம்.எல்.ஏ.,க்களும் நண்டு சூப் குடிச்சிட்டு, அமைச்சரை பாராட்டுனாங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''அரசு அலுவலகமா, பார்க்கிங் வளாகமான்னே தெரியல ஓய்...'' என, அலுத்து கொண்ட குப்பண்ணாவே தொடர்ந்தார்... ''சென்னை, மின்வாரிய தலைமை அலுவலகத்துக்கு, அதிகாரிகள், ஊழியர்கள், கான்ட்ராக்ட் நிறுவனங்களின் பிரதிநிதிகள்னு, தினமும் பல ஆயிரம் பேர், வாகனங்கள்ல வரா...

''வாரிய ஊழியர்களின் நண்பர்கள், உறவினர்கள்னு நிறைய பேர், வாரிய வளாகத்துல, வார கணக்குல வாகனங்களை, 'பார்க்' பண்ணிண்டு, வெளியூர் போயிடறா ஓய்... ''ஏற்கனவே இந்த மாதிரி பிராப்ளம் வந்தப்ப, 'வாரிய ஊழியர்கள், அதிகாரிகள் வாகனங்களை மட்டும் அனுமதிக்கணும்... அவங்களது, ஐ.டி., கார்டை பாதுகாவலர்கள் வாங்கி பார்த்துட்டு தான், 'அலவ்' பண்ணணும்'னு சொல்லியிருந்தா...

''ஆனா, பாதுகாவலர்கள், ஐ.டி., கார்டை கேட்டா, ஊழியர்கள் எடுத்து காட்டாம முறைக்கறா... இதனால, வாரிய வளாகமே பொது பார்க்கிங் மாதிரி ஆயிடுத்து ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''யாரும் நகராம இருக்கிறதால, நிறைய பேர் காத்து கிடக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன விஷயமுங்க...'' என்றார் அந்தோணிசாமி.

''தமிழகத்துல, கலெக்டர் அந்தஸ்துக்கு தகுதி பெற்ற நேரடி, ஐ.ஏ.எஸ்.,கள், 13 பேர், பதவி உயர்வுல, ஐ.ஏ.எஸ்., ஆன, 27 பேர்னு, 40 பேர், கலெக்டர் பதவிக்காக, பல வருஷங்களா காத்துட்டு இருக்காவ வே... ''ஏன்னா, சில, ஐ.ஏ.எஸ்.,கள், அஞ்சுல இருந்து, 10 வருஷம் வரை, பல மாவட்டங்கள்ல, மாறி மாறி கலெக்டராவே இருக்காவ...

''உதாரணமா, கோவை கலெக்டர் ஹரிஹரன், ஒன்பது வருஷங்களை தாண்டியும், திருப்பூர் - பழனிசாமி, ஏழு வருஷம், விழுப்புரம் - சுப்ரமணியம், ஏழு வருஷம், மதுரை - வீரராகவராவ், புதுக்கோட்டை - கணேஷ், அஞ்சு வருஷங்களை தாண்டியும், கலெக்டர்களாவே இருக்காவ வே...

''கலெக்டர் பதவிக்கு காத்துட்டு இருக்குற இளம் அதிகாரிகள், இது பத்தி, தலைமை செயலரிடம் புகார் பண்ணியிருக்காவ... அதுக்கு,'சீனியாரிட்டி முறையில தான் கலெக்டர் பதவி ஒதுக்குறோம்'னு சொல்லிஇருக்காங்க வே... ''ஆனா, 'கரூர் கலெக்டரான அன்பழகனுக்கு, 27 பேரை, 'ஓவர்லுக்' பண்ணி தான், அந்த பதவியை குடுத்திருக்காவ'ன்னு, இளம், ஐ.ஏ.எஸ்.,கள் புலம்புறாங்க...'' என, முடித்தார் குப்பண்ணா.

அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
09-ஜூலை-201808:26:11 IST Report Abuse
vasumathi ''ஆனா, பாதுகாவலர்கள், ஐ.டி., கார்டை கேட்டா, ஊழியர்கள் எடுத்து காட்டாம முறைக்கறா... இதனால, வாரிய வளாகமே பொது பார்க்கிங் மாதிரி ஆயிடுத்து ஓய்... . பெரிய போட்டோ ஸ்டிக்கர் கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால், தானியங்கி நம்பர் plate கேட் பொறுத்துங்கள் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X