ஆப்கன் தேர்தல்: பலியான சீக்கியரின் மகனுக்கு வாய்ப்பு| Slain Sikh leader's son in Afghanistan poll fray | Dinamalar

ஆப்கன் தேர்தல்: பலியான சீக்கியரின் மகனுக்கு வாய்ப்பு

Added : ஜூலை 09, 2018 | கருத்துகள் (6)
Share
 ஆப்கன்,தேர்தல்,பலியான,சீக்கியரின்,மகனுக்கு,வாய்ப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தேர்லில் போட்டியிட வெடிகுண்டு சம்பவத்தில் பலியானவரின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இந்தாண்டு இறுதிக்குள் பார்லிமென்ட்டிற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சீக்கியர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் சீக்கிய தலைவர் அப்டார் சிங் கல்சா என்பவர் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.
கடந்த 1-ம் தேதி ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் சீக்கியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதில் வேட்பாளர் அப்டார் சிங் கல்சாவும் ஒருவராவார். இந்நிலையில் இவருக்கு பதிலாக மகன் நரிந்தர் சிங் கல்சாவுக்குவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக அவருக்கு குறிப்பிட்ட சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து வேட்பாளர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆப்கான் நாட்டின் கஜினி, ஜலாலாபாத் காபூல் நகரில் வசித்து வரும் சீக்கிய குடும்பங்களை மறுசீரமைப்பதற்காக பல்வேறு நாடுகளில் முறையீடு செய்ய வேண்டும்.
கடந்த 1988-ம் ஆண்டுகளில் ஒருலட்சத்திற்கும் குறைவான சீக்கிய மக்களை கொண்டிருந்த ஆப்கானில் தற்போது 2 ஆயிரத்து 500 ஆக குறைந்து விட்டது.தற்போது உள்ள சீக்கிய குடும்பங்களின் குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கு சென்றால் இன பாகுபாடு காண்பிக்கப் படுவதாகவும், தனியார் பள்ளிகளுக்கு அனுப்பும் அளவிற்கு பண வசதி இல்லை எனவும் தான் வெற்றி பெறும் பட்சத்தில் அவர்களுக்காக ஒரு பள்ளி திறக்க உள்ளதாகவும் வேட்பாளர் நரிந்தர சிங் கல்சா தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X