பொது செய்தி

இந்தியா

ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்

Added : ஜூலை 09, 2018 | கருத்துகள் (13)
Advertisement
குழந்தை கடத்தல், மத்திய உள்துறை அமைச்சகம்

புதுடில்லி : இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYARAMAN - CHENNAI,இந்தியா
10-ஜூலை-201800:40:07 IST Report Abuse
JAYARAMAN ஒரு ஸ்கூட்டர் காணாமல் போனால் கண்டுபிடிக்க ஏதோ ஒரு app இருக்கிறது என்று படித்தேன். அதே போல குழந்தைகளுக்கும் ஒரு app கண்டுபிடிக்க முடியுமா .
Rate this:
Share this comment
Cancel
S.Kumar - chennai,இந்தியா
09-ஜூலை-201812:34:44 IST Report Abuse
S.Kumar என்ன கொடுமை நடக்குது நாட்டில் வருடத்திற்கு இவ்ளோ குழந்தைகளை கடத்துகிறார்களா? மக்கள் வரி பணத்தில் மாத மாதம் சம்பளம் வாங்கும் போலீஸ் என்ன செய்து கொண்டு இருக்கிறது? தின்று தின்று தொப்பையை தான் வளர்த்து கொண்டு இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
09-ஜூலை-201811:48:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்த கணக்கில் அனாதை ஆசிரமங்களில் இருந்து விற்கப்படும் குழந்தைகள் எண்ணிக்கை அடங்கி இருக்கிறதா ?
Rate this:
Share this comment
தலைவா - chennai,இந்தியா
09-ஜூலை-201812:45:24 IST Report Abuse
தலைவா நரபலி கணக்கில் வருகிறதாம்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X