'ஸ்டெர்லைட்'டை திறக்க கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஸ்டெர்லைட்'டை திறக்க கோரி
கலெக்டரிடம் கிராம மக்கள் மனு

துாத்துக்குடி : 'வாழ்வாதாரமும், குழந்தைகளின் படிப்பும் பாதிக்கப்படுவதால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்' என, ஆலையை சுற்றியுள்ள, மூன்று கிராம மக்கள், கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

ஸ்டெர்லைட்,திறக்க,கலெக்டரிடம்,கிராம மக்கள்,மனு


துாத்துக்குடி, ஸ்டெர்லைட் ஆலை மூடி, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. ஆலையைச் சுற்றியுள்ள தெற்கு வீரபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம்,

டி.குமாரகிரி கிராம மக்கள், நேற்று கலெக்டர் சந்தீப் நந்துாரியை சந்தித்து, மனு அளித்தனர்.

அதில், 'ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, ஆலையை உடனடியாக திறக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தனர்.

வீரபாண்டியபுரத்தைச் சேர்ந்த தீபா என்ற பெண் கூறியதாவது: நான், திருமணமாகி, வீரபாண்டியபுரத்திற்கு வந்து, ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு எந்த நோயும் இல்லை. ஆலை இயங்கிய வரை, எங்களுக்கு, ஆலை சார்பாக தண்ணீர் வழங்கப்பட்டது. இப்போது, ஒரு மாதமாக, கார்ப்பரேஷன் தண்ணீர் கூட வரவில்லை.

Advertisement

ஆலையால் கிடைத்து வந்த சின்ன வேலையும், இப்போது இல்லாததால், குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் கட்ட முடியவில்லை. எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், ஆலையை திறக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல, வேலை இழந்துள்ள லாரி உரிமையாளர்களும், ஆலையை திறக்கக் கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekar K D - Kudanthai,இந்தியா
10-ஜூலை-201818:54:17 IST Report Abuse

Rajasekar K Dஇது பிஜேபி மற்றும் அதிமுக மக்கள் வேற ஒன்னும் இல்ல

Rate this:
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
10-ஜூலை-201818:50:39 IST Report Abuse

Dr KannanWell, globally dangerous factories play all sort of tricks and abuse the innocent people and exploit the tem to make money. This is one of the trick played by Sterlite Innocent people are exploited and may be bribed and brain washed. Can we call this also as terrorist or social criminals? Sterlite will do all sort of dirty tricks with support of corrupt officials and politicians. Politicians get out votes to come to power and from the day one in power they sell their soul and voters interest for money that get as corruption. Our democrazy and religious morale are in jeopardy

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
10-ஜூலை-201815:33:27 IST Report Abuse

dandyஇன்றைய காலகட்டத்தில் ..மேற்கு நாடுகளில் மனிதர்களின் வாழும் வயது 90 +ஆசிய நாடுகளில் 60 + அனால் டாஸ்மாக் நாட்டில் இளமையில் சுவர்க்கம் போக விரும்புகின்றது மாக்கள்..வெளியில் கதிர் வீசிச்சு காற்று .நீர் ..உள்ளே தொழிலாளர்களுக்கு ..சுத்திகரிக்கப்படட நீர் ...காற்று இவர்கள் சுகமாக இருப்பது அதிசயம் அல்ல

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X