சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முட்டை, சத்துமாவு சப்ளையில்
ரூ.5,000 கோடி ஊழல்!
'வாங்கிய' ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு
வருகிறது சிக்கல்

முட்டை, சத்துமாவு சப்ளையில், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என, வருமானவரி துறையினர் கணக்கிட்டுள்ளனர்.

முட்டை, சத்துமாவு,சப்ளை,ரூ.5000 கோடி,ஊழல்,ஐ.ஏ.எஸ்., அதிகாரி,சிக்கல்


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த வட்டூரைச் சேர்ந்தவர் குமாரசாமி. ஆண்டிபாளையத்தில், 'கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி' என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம், தமிழகம் முழுவதும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில், சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு ஆகியவற்றை சப்ளை செய்து வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரை அடுத்து, 5ம் தேதி காலை முதல், ஆண்டிபாளையத்தில் உள்ள இந்நிறுவனம், குமாரசாமி வீடு உள்ளிட்ட, தமிழகம், வெளிமாநிலங்களில், ஒரே நாளில், 76 இடங்களில், வருமான வரித் துறையினர், சோதனை மேற்கொண்டனர். ஆண்டிபாளையத்தில், ஐந்தாவது நாளாக நேற்றும் சோதனை நடந்தது.

இதற்கிடையில், மத்திய பிரதேசத்தில் பிடிபட்ட குமாரசாமியை, பெங்களூரு அழைத்துச்

சென்று விசாரணை நடத்திய, வருமானவரித் துறையினர், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு, திருச்செங்கோடு அழைத்து வந்தனர். தொடர்ந்து, ஆடிட்டர், வக்கீல் வீடுகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின், ரகசிய இடத்தில் வைத்து, குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட, 'பென்டிரைவ்'வில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், விசாரணை நடத்தினர். அப்போது, முட்டை கொள்முதலில், நாமக்கல் முன்னாள் உயரதிகாரி உட்பட, பல, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கோடிக் கணக்கில் கமிஷன் கொடுக்கப்பட்டிருப்பது தெரிந்தது. அவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக, சம்மன் அனுப்ப, வருமானவரித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேலும், திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும், குறைந்த கல்வித் தகுதி கொண்டவர்களில், 50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறும், 50க்கும் அதிகமான பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் மூலமே, பல்வேறு வகையில் பணம் கொடுக்கல், வாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது விசாரணையில் தெரிந்துள்ளது. இதேபோல், இந்நிறுவனத்துக்கு சொந்தமான பவுண்ட்ரி, நிட்டிங், கார்மென்ட்ஸ் போன்ற நிறுவனங்களில், முட்டை மற்றும் சத்துமாவு சம்பந்தமாக, அதிகாரிகளுக்கு லஞ்ச பரிவர்த்தனை நடந்துள்ளதும், அம்பலமாகி உள்ளது.

Advertisement



கிறிஸ்டி நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு அலுவலகங்களில், வெளிநாட்டு கரன்சிகள், கோடிக்கணக்கில் ரொக்கம், தங்க பிஸ்கட், கணக்கிட முடியாத அளவுக்கு ஆணவங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் அடிப்படையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பெண் அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அவற்றை எழுத்துபூர்வமாக எழுதி தரும்படி அதிகாரிகள் கேட்டதற்கு, மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

முட்டை கொள்முதல், சத்துமாவு சப்ளையில், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என, வருமானவரி துறையினர் கணக்கிட்டுள்ளனர். இதனால், விசாரணையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
10-ஜூலை-201820:39:02 IST Report Abuse

Rameshஈவேரா சொன்னது சரியோ.. தமிழன் காட்டுமிராண்டி முட்டாள்கள் என்று

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
10-ஜூலை-201820:10:54 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்ஜெயலலிதா தலைமையில் ஐவர் குழுன்னு, ஈப்பீஸ், ஓப்பீஸ்ன்னு பல டம்மி பீசுங்களை வச்சி ஊழலை மையப்படுத்தி புரட்சி பண்ணாரு. அப்போ ஆரம்பிச்சது... அந்த அஞ்சு எழுதிட்டு நெறைய முட்டை போட்டுருக்காங்க.. எல்லாம் ஊழல் டைனசோர் முட்டைங்க.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
10-ஜூலை-201816:11:39 IST Report Abuse

Malick Rajaஇது உலகறிந்த உண்மை .. ஆனால் ஊழல் நிரூபிக்கப்படவில்லை என்று ...தி மன்றம் சொல்லிவிடும் .. அப்புறம் என்ன விசாரணை . செலவுகளில் இதனிடையில் எழவுகள் எட்டுக்கல் என அணைத்து கர்மாதிகளும் முடிந்துவிடும் அதற்க்கு முடியுமா காரணம் என்பதையும் உலகெங்கும் உள்ள அனைத்துமக்களும் தெளிவாக அறிவார்கள்

Rate this:
மேலும் 34 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X