லாட்டரியில் போலீசார் 'லவட்டல்' 'சபா' பேரைச் சொல்லி ஆளுங்கட்சியினர் 'அலட்டல்'

Added : ஜூலை 10, 2018
Advertisement
ஆடி மாதம் துவங்கும் முன்னரே, காற்று பலமாக வீசிக்கொண்டிருந்த ஒரு காலை வேளை. சித்ராவும், மித்ராவும் அவிநாசி ரோடு வழியே சென்று கொண்டிருந்தனர்.பங்களா பஸ் ஸ்டாப்பில் வாகனங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. நிமிடங்கள் கரைந்தன. பொறுமையிழந்த மித்ரா, அங்கிருந்த டிராபிக் போலீசிடம், ''ஏன்... சார், என்ன ஆச்சு?'' என்றதும், ''இ.பி., போஸ்ட் மாத்தறாங்கம்மா.. அதான், இவ்வளவு
லாட்டரியில் போலீசார் 'லவட்டல்' 'சபா' பேரைச் சொல்லி ஆளுங்கட்சியினர் 'அலட்டல்'

ஆடி மாதம் துவங்கும் முன்னரே, காற்று பலமாக வீசிக்

கொண்டிருந்த ஒரு காலை வேளை. சித்ராவும், மித்ராவும் அவிநாசி ரோடு வழியே சென்று கொண்டிருந்தனர்.பங்களா பஸ் ஸ்டாப்பில் வாகனங்கள் வரிசை கட்டி நின்று கொண்டிருந்தன. நிமிடங்கள் கரைந்தன. பொறுமையிழந்த மித்ரா, அங்கிருந்த டிராபிக் போலீசிடம், ''ஏன்... சார், என்ன ஆச்சு?'' என்றதும், ''இ.பி., போஸ்ட் மாத்தறாங்கம்மா.. அதான், இவ்வளவு பிரச்னை,'' அலுத்து கொண்டே, ''சரி.. லெப்ட்டில் போங்கம்மா,'' என்றார்.அந்த ரோட்டிலும், வாகனங்கள் எறும்பு போல ஊர்ந்து கொண்டிருந்தன. அதற்கு மேல் வண்டியை ஓட்ட முடியாமல், அருகிலிருந்த பேக்கரிக்கு முன், பார்க் செய்த சித்ரா, ''மித்து... டீ குடிச்சுட்டு, வெயிட் பண்ணி பார்க்கலாம்,'' என்றாள்.அவளும், சரியென்று, ஆமோதிக்க இருவரும், கடைக்குள் சென்றனர். சமோசாவும், மசாலா டீயும் ஆர்டர் செய்தாள் மித்ரா. அப்போது, மொபைல் போனில், ஒருவரிடம் காரசாரமாக விவாதித்த சித்ரா, கோபத்துடன் இணைப்பை துண்டித்து, கைப்பைக்குள் போட்டாள்.''ஏங்க்கா... இவ்ளோ டென்ஷனா இருக்கீங்க. அப்படி யார் கூட பேசினீங்க?'' பரபரப்பாக கேட்டாள் மித்ரா.''ஏம்பா... திருப்பூரில் சனிக்கிழமை எவ்ளோ முக்கியமான நாளுன்னு எல்லாத்துக்கும் தெரியும். அந்தன்னைக்கு போயி, கம்பத்தை மாத்தலாமுன்னு சொல்லி வேலையை ஆரம்பிச்சு எத்தனை பேருக்கு பிரச்னை பாத்தியா?''''ஆமாங்க்கா... இப்ப பாருங்க அவிநாசி ரோட்டில், குமார் நகர் வரைக்கும், பி.என்.ரோட்டில் புதிய பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் வண்டி நிக்குது. பஸ்சை விட்டு, ஜனங்க, நடந்து போய் கஷ்டப்படறாங்க,'' ''மித்து. என்ன நடந்ததுன்னு கேளு. ஒப்பந்த ஊழியர் ஒருத்தர், மின்கம்பத்தின் மீது ஏறி, உச்சிக்கு சென்றவுடன் கம்பம் சாய்ந்துள்ளது. உடனே, கிரேன் மூலமாக முட்டு கொடுத்து, அவரை பாதுகாப்பா கீழிறக்கினர். ஒரு கம்பம் சாய்ந்தவுடன், அடுத்தடுத்து மூன்று கம்பம் சாய்ந்ததால், போலீசார் உடனே குமரன் ரோட்டில், டிராபிக்கை நிறுத்தினர்,''''இந்த குளறுபடிக்கெல்லாம், இ.பி., அதிகாரிகள்தான் காரணமாம். 'மூன்று கம்பத்தை மாற்றுகிறோம்... டிராபிக் இடைஞ்சலாகும்,'ன்னு பக்கத்தில் இருக்கிற நார்த் ஸ்டேஷனில் கூட சொல்லலையாம். கம்பம் சாய்ந்ததற்கு அப்புறம், ஓடிப்போய் பதறியுள்ளனர். இதனால, இ.பி., அதிகாரிகளின் திட்டமிடாத செயல்தான், என்று போலீசார் கடுங்கோபத்தில் இருக்கின்றனராம். சரி... நேரம் வரட்டும், பார்த்துக்கலாமுன்னு அமைதியா இருக்காங்களாம்,'' என, சித்ரா படபடவென கூறினாள்.''பார்த்தீங்களா? வேலையை. சனிக்கிழமை செய்யறதுக்கு மத்தநாளில் செஞ்சா என்னவாம்? இதையெல்லாம், எம்.எல்.ஏ., வட்டம், மாவட்டம் யாருமே கேட்க மாட்டாங்களா?'' என்று மித்ரா கோபத்துடன் சொல்லவும், சமோசவும், டீயும் வந்தது.''சரி.. சரி... டென்ஷனாகாத மித்து. நாம பேசிக்கலாம். முதல்ல டீயை குடி,'' சமாதானம் செய்தாள் சித்ரா. அப்போது, பணியாளர் ஒருவர், டேபிள்மீது தாமிர செம்பில், தண்ணீர் வைத்து சென்றார்.அதைப்பார்த்த மித்ரா, ''அடடே... பரவாயில்லையே. ஒடம்புக்கு நல்லதுன்னு, இதுல தண்ணீர் கொடுக்குறாங்க,'' என்றதும், ''இந்த பாத்திரத்தை பார்த்ததும், ஒரு விஷயம் நினைவுக்கு வந்துடுச்சு... மித்து,'' என்றாள் சித்ரா.''ம்... ம்... சொல்லுங்க...'' ''கோவை பாரதியார் யுனிவர்சிட்டி, ஹாஸ்டல், கேண்டீனில் பயன்படுத்த 18 லட்சம் ரூபாய்க்கு பாத்திரம், அனுப்பர்பாளையத்தில் ஆர்டர் கொடுத்தாங்களாம். வேலை எல்லாம் முடிஞ்சுடுச்சு, இன்னும் டெலிவரி தரலையாம்,'' ''அந்த பில்லில், 'தனக்கு, 20 பர்சென்ட்' வெட்டணும்னு, முக்கிய நிர்வாகி கறார் காட்றாராம். அவருக்கு, கொடுத்தால், சங்கத்தை எப்படி நிர்வாகம் பண்றதுன்னு அதிகாரிகள் டென்ஷனாகிட்டாங்களாம். இந்த அக்கப்போரினால், பாத்திரம் டெலிவரி ஆகாம தேங்கி கெடக்குதாம்,'' என்றாள் சித்ரா.அப்போது, பேக்கரிக்குள் வந்த ஒருவரை பார்த்த, மித்ரா, ''அக்கா... அவரை பாருங்களேன். எங்க பாலசுப்ரமணியம் அங்கிள் மாதிரியே இருக்காரில்ல,'' என்றாள். ''அட... ஆமாம்,'' என்ற சித்ரா, பில் செட்டில் செய்துவிட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.இருவரும், பி.என்.ரோடு வழியே சென்றனர். ''ஆளுங்கட்சிக்காரர்கள், வி.ஐ.பி., பெயரில் நடத்தும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது பார்த்தாயா,'' என்றாள் சித்ரா. ''நானும் கேள்விப்பட்டேன். அவிநாசி -- சேவூர் குளத்தில் சில நாட்களாக பகிரங்கமாக மணல் திருட்டு நடக்கிறது. இதற்கு ஆளுங்கட்சி பிரமுகர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களாம். மணல் திருட்டு நடப்பது குறித்து வருவாய்த்துறையினர் சென்று ஆய்வு செய்தால், சபாநாயகர் பெயரை கூறி, மிரட்டுகின்றனராம். இது அவருக்குத் தெரியுமா? என்பதுதான் கேள்வியே. கலெக்டர், சப்-கலெக்டர் இதில் நேரடியாக கவனம் செலுத்தினால் மட்டுமே ஏதாவது நடவடிக்கை இருக்கும்,'' என்றாள் மித்ரா. ''சரியாக சொன்னாய். இதேபோல, அவிநாசி ஒன்றியத்திலுள்ள 'டாஸ்மாக்' கடைகளில், தினமும் ஆயிரம் ரூபாயை ஆளுங்கட்சியை சேர்ந்த ஒரு பிரமுகர் வசூலிக்கிறாராம். ஊழியர்கள் கேட்டதற்கு, 'சபாநாயகருக்கு கொடுக்கோணும்,' என்று மட்டும் பதில் வருகிறதாம். இப்படி, அவர் பேரை சொல்லி, இவங்க அடிக்கிற கொள்ளை, எதில் போய் முடியுமோ?'' என்ற சித்ரா, 'செந்தில்' டீ ஸ்டால் வழியே வண்டியை ஓட்டினாள்.''ஏங்க்கா... விவசாயிகளிடம் கலெக்டர் காரசாரமா பேசினாராம்,'' என்று மித்ரா முடிப்பதற்குள், ''அப்படியா, இதெங்க நடந்தது?'' என்றாள் சித்ரா.''விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், அரசு விடுதிகள், சத்துணவு திட்டம், அம்மா உணவகங்களில், தேங்காய் எண்ணெய சமையலுக்கு பயன்படுத்தினால், விவசாயிகளுக்கு நன்மை கிடைக்கும்'னு சிலர் பேசினாங்களாம். கலப்படம் பத்தியெல்லாம் உங்களுக்கு தெரியுமா? விஞ்ஞானி மாதிரியெல்லாம் பேசக்கூடாது,''''தேங்காய் எண்ணெயில் கொழுப்பு சத்து அதிகம், அதை எப்படி சமையலுக்கு பயன்படுத்தறது?'ன்னு, கலெக்டர் காரசாரமா சொல்லிட்டாராம்,'' என்றாள் மித்ரா.''அந்த நேரத்தில, கலெக்டருக்கு என்ன கோபமோ? தெரியலை. அதே கூட்டத்தில், பழைய பஸ் ஸ்டாண்டுக்கு எதிரிலுள்ள ரவுண்டானாவில், காளை மாடு சிலை வையுங்கன்னு,'சிலர் சொன்னதற்கு, 'அதெல்லாம், ஈரோட்டிலே வைச்சாச்சு,'ன்னு 'கடுகடு'ன்னு சொன்னாராம்,''''ஆமாங்க்கா. நீங்க, சொன்னது சரிதான். ஆனா, எம்.ஜி.ஆர்., - ஜெ., சிலை வைக்கோணும்னு ஆளுங்கட்சியில இருந்து, முதல்வருக்கு ஏகப்பட்ட லெட்டர் போயிருக்காம். என்ன பண்றாங்கன்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.திருப்பூரிலுள்ள முட்டுச்சந்துக்குள் எல்லாம் வண்டியை ஓட்டிய சித்ரா, ''அப்பா... போதும்டா... சாமி. மித்து இறங்குப்பா,'' என்று சலித்து கொண்டாள்.''அக்கா... உள்ளே வாங்க. காபி குடிச்சுட்டு போலாம்,'' என்று மித்ரா கூப்பிடவே, உள்ளே சென்றாள் சித்ரா.ஓரிரு நிமிடத்தில், மித்ராவின் அம்மா காபி கொண்டு வரவே, ''தேங்க்ஸ் ஆன்ட்டி'' என்று டம்ளரை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்.''ஏங்க்கா... இந்த போலீஸ்காரங்க. எத்தனை சம்பளம் வாங்கினாலும், ஓசியில, பொருள் வாங்குறது குறையவேயில்லை, பார்த்தீங்களா?''''யாரை சொல்கிறாய்? தெளிவா சொல்லு?''''கண்ணணின் வேறு பெயரை வைத்துள்ள அனுப்பர்பாளையம் எஸ்.எஸ்.ஐ., ஒருத்தர், காங்கயம் ரோட்டில் 'பேட்ரால்' வாகனத்தில் ரோந்து பணி மேற்கொண்ட போது, ஒரு பேக்கரி முன் நின்று, சத்தம் போட்டாறாம். கடைக்காரர் பயந்தபடி, 'என்ன சார்?' என்றதற்கு, 'நாலு பெரிய வாட்டர் பாட்டில் கொடு'ன்னு, காசு கொடுக்காம வாங்கிட்டு போயிட்டாராம். இவர், இதே மாதிரி எந்த பொருள் வாங்கினாலும், காசு கொடுக்க மாட்டாராம். மீறி கேட்டா, மிரட்டுகிறாராம்,'' ''ஆமாண்டி, அவர் மட்டுமா? வீரபாண்டி மற்றும் சவுத்ல உள்ள இரண்டு எஸ்.ஐ.,கள் எந்த கேஸ் போட்டாலும், 'வரி' போடாம விடறதேயில்லையாம். வர்ற ஆளை பொறுத்து, 500 முதல் 2 ஆயிரம் வரைக்கும் வசூல் செய்கின்றனராம். அதிலேயும், இரண்டெழுத்து சவுத் எஸ்.ஐ., ரொம்ப மோசமாம். 'சூஸைட்' கேஸ் வந்தாலும் கூட, பணத்தை கறந்திடறாராம். இவங்களை எல்லாம், யார் கண்டிப்பாங்கன்னு தெரியலையே,'' ''நானும் கேள்விப்பட்டேன். வீரபாண்டி 'லேடி' எஸ்.ஐ,. வெச்சதுதான் சட்டமுன்னு, ஏட்டுகளே புலம்பறாங்காங்க்கா,''''ஏம்பா... தமிழ்நாடு கவர்மென்ட் ஒழிச்சாலும், போலீஸ்காரங்க ஒழிக்க மாட்டேங்கறாங்க. நான், இந்த லாட்டரியை சொன்னேன். பாண்டியன் நகர், பெருமாநல்லுார், டி.கே.டி., ஸ்டாப்பிங் இப்படி மூன்று இடங்களில், லாட்டரி பிஸினஸ் ஓேஹான்னு நடக்குதாம். போலீசுடன், ஆளுங்கட்சி ஆட்கள் கூட்டணி போட்டதில், லட்சக்கணக்கில் பணம் விளையாடுதாம். இதிலுள்ள பெரிய ஆட்களை பிடிக்காமல், சும்மா விளையாட்டுக்கு, ரெண்டு, மூணு பேரை புடிச்சு கேஸ் போடறாங்க,''''ஆமாங்க்கா... லாட்டரி மாதிரியே, சென்ட்ரல் எல்லையில், கே.வி.ஆர்., நகரில், 'கஞ்சா' துாள் பறக்குதாம். கொஞ்ச காலமாக ஒதுங்கி இருந்த ஒரு வியாபாரி, களத்தில் மீண்டும் குதிச்சுட்டாராம். இது, அந்த ஸ்டேன்ஷன் அதிகாரிக்கு தெரிஞ்சும்கூட, வழக்கம் போல, 'வாங்கிட்டு' விட்றார்,'' என்று மித்ரா ஆதங்கப்பட்டாள்.''இந்த மாதிரி சிட்டியிலுள்ள ஸ்டேஷன்களில், சிலரோட நடவடிக்கையால், மற்றவங்களுக்கு கெட்டபேரு. அதனால, பெரிய அதிகாரி 'மனோ'திடத்துடன், சீக்கிரமா 'களை' எடுத்தால் மட்டும்தான், சிட்டி தப்பிக்கும்,'' என்ற சித்ரா, ''ஓ.கே., மித்து. நேரமாச்சு. நான் கிளம்பறேன்,'' என்றவாறு, ஹெல்மெட்டுடன் புறப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X