பொது செய்தி

இந்தியா

கற்பழிப்பு வழக்கில் பிஷப் கைதாகிறார்

Added : ஜூலை 10, 2018 | கருத்துகள் (170)
Advertisement
கேரளா கன்னியாஸ்திரி, பிஷப் பிரான்கோ, கன்னியாஸ்திரி கற்பழிப்பு, சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச், கற்பழிப்பு புகார், பிஷப் பிரான்கோ முல்லக்கல், குருவிலாங்காடு விடுதி, கன்னியாஸ்திரி கற்பழிப்பு புகார், 
Kerala Nanny, Bishop Franco, Nanny rape, Syriac Malabar Catholic Church, rape complaint, Bishop Franco Mullakal, Kuravilangad accommodation, Nanny Rape complaint,Kanniyastri,

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரியை, 13 முறை கற்பழித்த குற்றச்சாட்டின் கீழ் பிஷப் ஒருவரை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.


நடந்தது என்ன?

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலாங்காடு பகுதியில், சிரியோ மலபார் கத்தோலிக்க சர்ச்சுக்கு சொந்தமான விடுதி உள்ளது. இங்கு தங்கியுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் உள்ள பிஷப் மீது, கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் கற்பழிப்பு புகார் கூறியுள்ளார். அப்புகாரில் கடந்த, 2014ம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் தன்னை கற்பழித்தார். தொடர்ந்து, 13 முறை அந்த கொடூர செயல் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


இது குறித்து கோட்டயம் மாவட்ட போலீஸ் தரப்பு கூறுகையில், தான் கற்பழிக்கப்பட்டது குறித்து சர்ச் நிர்வாகத்திடம் அந்த கன்னியாஸ்திரி புகார் அளித்துள்ளார். ஆனால், சர்ச் நிர்வாகம் அதை பொருட்படுத்தாததால், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றனர்.

அதே நேரத்தில், பணியிட மாற்றம் செய்ததால் தன் மீது அந்த கன்னியாஸ்திரி அபாண்டமாக புகார் அளித்துள்ளார் என்று பிஷப் முல்லக்கல் தரப்பில், கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது.


அடுக்கடுக்கான ஆதாரங்கள்

இப்பிரச்னை குறித்து முதல் கட்ட விசாரணை நடத்திய போலீசார் கற்பழிப்பு நடந்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளனர். கன்னியாஸ்திரியை பரிசோதனை செய்த டாக்டரும், கற்பழிப்பு நடந்துள்ளதை உறுதி செய்துள்ளார். எனவே, இந்த வார இறுதிக்குள் பிஷப் பிரான்கோவை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். எனினும், கடும் நெருக்கடி தரப்பட்டால் கடைசி நேரத்தில் கைது நடவடிக்கை தவிர்க்கப்படலாம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. குருவிலாங்காடு விடுதிக்கு, 13 முறை பிஷப் வந்து தங்கி உள்ளார். அந்த நாட்களில் தான் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டுள்ளார். 13 முறை பிஷப் வந்து தங்கியதற்கு, விடுதியில் உள்ள வருகை பதிவேட்டில் ஆதாரம் உள்ளது. அவரது வருகையை அந்த விடுதியில் தங்கி உள்ள மற்ற கன்னியாஸ்திரிகளும் உறுதி செய்துள்ளனர். இதுதவிர கன்னியாஸ்திரி மீது பிஷப் அளித்த புகார் பொய்யானது என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (170)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
15-ஜூலை-201813:56:08 IST Report Abuse
Rangiem N Annamalai இந்த முடிவில் அரசு உறுதியாக இருக்க வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Indhiyan - Chennai,இந்தியா
11-ஜூலை-201815:04:31 IST Report Abuse
Indhiyan பெண்ணின் செயலிலும் சந்தேகம் இருக்கிறது. 2014 ல் நடந்தது, 13 முறை நடந்தது 2018 வரை சும்மா இருந்துள்ளார். பெண்ணின் சம்மதத்தோடு நடந்திருக்குமோ என்று தோன்றுகிறது. எனவே சேர்ந்தே செய்திருக்கிறார்கள். இவ்வளவு காலம் வேண்டியது கிடைத்திருக்கும், ஏதோ கிடைக்கவில்லை, புகார் கொடுத்திருக்கலாம். அல்லது பெரிய ஆள் என்பதால் உண்மையிலேயே வெளியே சொல்லமுடியாத அளவுக்கு அழுத்தத்தினால் கற்பழிக்கப்பட்டு ஒரு நிலையில் சீ போ என்று புகார் கொடுத்திருக்கலாம். விசாரிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
11-ஜூலை-201810:29:20 IST Report Abuse
Muthuraj Richard குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில், கடும் தண்டனை வழங்கப்படவேண்டும், இது ஒரு மதத்தின் மேல் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையே அசைத்து பார்க்கும் ஒரு விஷயம், உண்மையாக கடவுள் பணி செய்யும் துறவிகளுக்கு கூட தர்ம சங்கடமும் தலைகுனிவும் ஏற்படுத்தியிருக்கிறது, பாரபட்சமின்றி விசாரணை செய்து சமந்த பட்ட அனைவரும் தண்டிக்கப்படவேண்டும், இதுவே மற்றவர்களுக்கு பாடமாக அமையும், சர்ச் இதில் குறுக்கிடாது, இப்படிப்பட்ட நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் வாடிகனால் கடுமையாக தண்டிக்கப்பட்டதை கேள்விப்பட்டிருக்கிறோம். மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X