புதுடில்லி: பார்லிமென்டை சுமூகமாக இயக்க ஒத்துழைப்பு வழங்குவது அனைத்து எம்.பி.,க்களின் கடமை என லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார்
புனிதத்தன்மை
இது தொடர்பாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து எம்.பி.,க்களுக்கும் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: எம்.பி.,க்கள் மற்ற கட்சிகளை சுட்டி காட்டி அமளியில் ஈடுபட்டால், பார்லிமென்டின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவது தொடரும். அவை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு வழங்குவது எம்.பி.,க்களின் தார்மீக கடமை. பார்லிமென்ட் மற்றும் ஜனநாயகத்தின் பெருமையை முன்னெடுத்து செல்லவதற்காக என்ன தேவை என்பதை மறு ஆயுவு செய்ய நேரம் வந்துவிட்டது. ஜனநாயகத்தின் கோயில் எனப்படும் பார்லிமென்டின் பெருமை மற்றும் புனிதத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.
எதிர்பார்ப்பு
எம்.பி.,க்களின் செயல்பாடுகளை, அந்தந்த தொகுதி மக்கள் கவனிக்கின்றனர். எம்.பி.,க்களின் செயல்பாடுகள் குறித்து மீடியாவும் மக்களுக்கு அறிக்கை அளிக்கின்றன. எம்.பி.,க்கள் மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். நாடு மற்றும் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பை எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல், நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவதுடன், ஜனநாயகத்தை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE