பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.1350 கோடி வரி ஏய்ப்பு செய்த சத்துமாவு நிறுவனங்கள்

Updated : ஜூலை 11, 2018 | Added : ஜூலை 11, 2018 | கருத்துகள் (7)
Advertisement
சத்துமாவு நிறுவனம், வரிஏய்ப்பு, வருமான வரித்துறை

சென்னை: வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கிறிஸ்டி பிரைடுகிரைன், அக்ரி உள்ளிட்ட நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.

தமிழக அரசுக்கு சத்துணவு பொருட்கள், முட்டை உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்து வரும் இந்நிறுவனங்களுக்கு சொந்தமான 70 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை, பெங்களூரு, சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் மற்றும் 10 கிலோ தங்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன

இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்நிறுவனங்கள் ரூ.1350 கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
11-ஜூலை-201817:42:52 IST Report Abuse
புதிய தமிழ்மைந்தன் காசு சேர்ந்தது குற்றம், எங்கள் கன்னியாஸ்திரிகளை கற்பழித்தது குற்றம், காசு கொடுத்து மதம் மாற்றினால் குற்றம், எங்களின் கல்வி நிறுவனங்களில் இட ஓதுக்கீடு கொடுக்காதது குற்றம், கேரளா அரசாங்கத்தை மிரட்டினால் குற்றம், சோனியாவிடம் ஆதரவு கேட்டால் குற்றம், பாதிரியார்கள் தி.மு.க விற்கு நிதி கொடுத்தால் குற்றம். இப்படி எது செய்தாலும் குற்றம் சொல்லும் மோடி அரசு ஒழிக.
Rate this:
Share this comment
Cancel
Sitaraman Munisamy - SALEM,இந்தியா
11-ஜூலை-201817:23:03 IST Report Abuse
Sitaraman Munisamy இவை அனைத்தும் கண் துடைப்பு நாடகமே. 2019 தேர்தலில் அ. தி.மு.க. கூட்டணிக்காக ஒரு மிரட்டல் நாடகம். இதுவரை நடந்த அனைத்து ஊழல்களும் வேற்று வெட்டாகிவிட்டது. 2G . கலைஞர் டீ.வி.யின் 200 கோடி பண பரிமாற்றம். மாறன் சகோதரர்கள் போன் இணைப்புகள் ஊர் அறிந்த ஒன்று. aircel நிறுவன வழக்கில் புஷ்வாணம் ஆகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
11-ஜூலை-201816:22:12 IST Report Abuse
Jaya Ram தமிழ் நாட்டு மக்களே இன்னும் நிறைய சித்துவிளையாட்டு எல்லாம் நடக்கும் பார்லிமென்ட் எலெக்ஷன் தேதி அறிவிக்கப்படும் வரை , அப்பதான் தனக்கு தேவையான கூட்டணியினை அமைக்க முடியும், ஏனப்பா வருமான வரித்துறையினரே உங்களுக்கு தெரியாதா இவர்கள் காலம் காலமாக முட்டை சப்லை செய்வது, இப்போ வடமாநிலத்தில் ஒரு பிஜேபி ஆளும் மாநிலத்தில் இந்த முட்டை போடும் திட்டம் அமுலுக்கு வரப்போகிறது அதற்கான டெண்டர் விடப்படுகின்றன அதில் கலந்து கொண்ட நிறுவனர்களில் இதுவும் ஒன்று இதற்க்கு போட்டியாக பிஜேபியினை சேர்ந்த ஒரு முக்கியஸ்தர் பங்குதாரர் ஆக உள்ள நிறுவனமும் உள்ளது அதன் தாக்கமும், இதில் அரசியல்வாதிகளுக்கு தொடர்பு உள்ளது என நன்கு தெரியும் அதனால் நான் முன்னர் கூறிய காரணத்திற்காகவும் இச்செயல் நடந்துள்ளது முடிவில் என்ன நடக்கும் அவர் வரியினை செலுத்திவிட்டார் அதனால் அவர்மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று ஒரு செய்தி இன்னும் ஒரு ஐந்தாறு வருடங்களில் வரும் அதனால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம், உணர்ச்சிவசப்படவேண்டாம், திமுகவுடன் கூட்டணி பேசிக்கொண்டு இருக்கும்போதே கலைஞர் டிவியில் சோதனை நடத்தவில்லையா ஆதாரங்கள் அள்ளிச்சென்றார்கள் என்று கூறப்படவில்லையா, இப்போ அதன் முடிவு என்ன ஆயிற்று டேக் இட் ஈஸி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X