பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
தாய்லாந்து சிறுவர்களை மீட்க உதவிய
இந்தியர்களுக்கு குவியும் பாராட்டு

புனே : தாய்லாந்து குகையில் சிக்கிய, 12 சிறுவர்களை மீட்ட குழுவில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்களும் ஈடுபட்டது தெரியவந்துள்ளது; அவர்களுக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

தாய்லாந்து,சிறுவர்கள்,மீட்க உதவிய,இந்தியர்கள்,குவியும் பாராட்டு


தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின், தம் லுவாங் என்ற இடத்தில், மிகப் பெரிய குகை உள்ளது. உள்ளூர் கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 12 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் உட்பட, 13 பேர், ஜூன், 23ல், அந்த குகைக்குள் சென்றனர்.

எதிர்பாராத விதமாக பலத்த மழை பெய்ததால், குகைக்குள் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, 13 பேரும் குகைக்குள் சிக்கினர். சிறுவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், மீட்புப் பணி நிபுணர்கள் உட்பட ஏராளமானோர், தாய்லாந்தில் திரண்டனர். இவர்கள், சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'கிர்லோஸ்கர் பிரதர்ஸ்' என்ற நிறுவனம், 'மோட்டார் பம்புகள்' தயாரிப்பு பணியில் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. தேங்கி நிற்கும் தண்ணீரை, பம்ப் வழியே உறிஞ்சி வெளியேற்றுவதில், இந்த நிறுவனத்தின் இன்ஜினியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். எனவே, மீட்புப் பணியில் இவர்களை பயன்படுத்திக் கொள்ளும்படி, தாய்லாந்து அரசிடம், இந்திய துாதரகம் வலியுறுத்தியது.

இதையடுத்து, கிர்லோஸ்கர் நிறுவனத்தின் புனே கிளையைச் சேர்ந்த இரண்டு இன்ஜினியர்களும், அந்த நிறுவனத்தின் வெளிநாட்டு கிளைகளைச் சேர்ந்த ஐந்து இன்ஜினியர்களும், மீட்புக் குழுவுடன் இணைந்தனர்.

அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து, புனேயைச் சேர்ந்த இன்ஜினியர்கள், பிரசாத் குல்கர்னி மற்றும் ஷ்யாம் சுக்லா ஆகியோர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மழை தொடர்ந்து பெய்ததால், குகைக்குள் மழை நீரின் அளவு அதிகரித்தபடி இருந்தது. மின்சார சேவைக்கு, 'ஜெனரேட்டர்'கள் பயன்படுத்தப்பட்டன.

இதனால், சக்தி வாய்ந்த மோட்டார்களை பயன்படுத்த முடியாமல், சிறிய மோட்டார்களை பயன்படுத்தினோம். ஆனாலும், எங்களால் முடிந்த வரை, வேகமாக மழை நீரை, குகைக்குள் இருந்து

Advertisement

வெளியேற்றினோம்; இது, எங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திரைப்படம் தயாராகிறது!

தாய்லாந்து குகையில் இருந்து, 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம், ஹாலிவுட்டில் திரைப்படமாக தயாராகிறது. ஹாலிவுட்டைச் சேர்ந்த, 'ப்யூர் பிளிக்ஸ் என்டர்டெய்ன்மென்ட்' என்ற நிறுவனம், 400 கோடி ரூபாய் செலவில், இந்த சம்பவத்தை திரைப்படமாக தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான, மைக்கேல் ஸ்காட், மீட்புப் பணி நடக்கும்போது, அங்கேயே தங்கி இருந்துள்ளார்; மீட்புக் குழுவுக்கு உதவியும் செய்துள்ளார். பதற்றம் நிறைந்த அந்த நிமிடங்களையும், அங்கு அரங்கேறிய வீர தீர செயல்களையும் நேரடியாக பார்த்ததால், அதை திரைப்படமாக எடுக்க முடிவு செய்ததாக, அவர் தெரிவித்தார்.


மயக்க மருந்து கொடுத்து சிறுவர்கள் மீட்பு!

தாய்லாந்து குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் அனைவரும், 11 - 16 வயதுக்கு உட்பட்டவர்கள்; அவர்களை மீட்டு அழைத்து வரும்போது, பயப்படாமல் இருக்கவும், அவர்களது நரம்புகளை தளரச் செய்து, முழு ஒத்துழைப்பு பெறவும், அவர்களுக்கு சிறிய அளவில் மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன்பின், அவர்களை, 'ஸ்ட்ரெச்சரில்' படுக்க வைத்து, வெளியே கொண்டு வந்ததாக, மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். மயக்க நிலையில் இருந்த சிறுவர்களில் சிலர், மீட்புப் பணியின் போது, விரல்களை மட்டும் அசைத்ததாகவும், சிலர் முற்றிலும் மயங்கி விட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர். தாய்லாந்து கடற்படையினர் வெளியிட்டுள்ள, 'வீடியோ'வில், இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜூலை-201822:05:47 IST Report Abuse

dandyநீர் நிரம்பிய குகைக்குள் ( சில இடங்களில் உதைபந்தாடட மைதானம் அளவில் ) உயிரை பயணம் வைத்து பணியாற்றியவர்கள் நூறு பேர் ..இறந்தது ஒரு தாய்லாந்து நாட்டு கடல் படை வீரர் ...முதலில் சிறுவர்களை கண்டுபிடித்த பிரிட்டிஷ் பிரஜை சத்தம் போடாமல் சொந்த நாட்டிற்கு போய் விட்டார் கடைசியாக வெளியே வந்த ஆஸ்திரேலியா நாடு மருத்துவர் ( 30 வருடங்கள் நீரில் மூழ்கி தேடும் அனுபவம் உள்ளவர் ) வெளியே வந்ததும் சொல்லப்படட செய்தி இவரின் தகப்பனார் மரணம் ,,ஹி ஹி ஹி இந்தியர்கள் நீரை இறைத்தார்களாம் வெளியே நின்று ...இதனால் பிள்ளைகள் காப்பாற்றப்படார்களாம் ..உலகின் 4 வைத்து பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் இந்தியா ஒரு நீரில் மூழ்கி தேடும் வீரனை அனுப்பவில்லை ..சிறிய நாடான LAOS அனுப்பியது ...தாய்லாந்து நாடே இது எங்கள் வெற்றி அல்ல உங்கள் வெற்றி என்று அமைதியாக சொல்லிவிட்டது ..அனால் இந்தியாவில் இருந்து தண்ணீர் இறைக்க என்ஜினீயர் அனுப்பினர்களாம் இவர்கள் இல்லாவிட்டால் சிறுவர்களை காப்பாற்றிருக்க முடியாது போல

Rate this:
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
12-ஜூலை-201819:00:02 IST Report Abuse

Swaminathan Chandramouliஅய்யாமார்களே தயவுசெய்து நம் இந்திய பொறியியலாளர் ஒன்று சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டதை அரசியல் ஆக்காதீர்கள் அவர்கள் ஆறு போல் தேங்கியிருந்த நீரை பம்புகளால் வெளியேற்றி உள்ளே சிக்கியிருந்த சிறுவர்களையும் அவர்கள் கூட இருந்து உதவி புரிந்த மேலாளரையும் மீட்க பேருதவி செய்தனர் . இந்த மீட்பு பணி தனியொருவரால் செய்யப்பட்டதல்ல .கூட்டு முயற்சியே காரணம் . மீட்கப்பட்டவர்களுக்கு நமது அன்பு . மீட்டவர்களுக்கு நமது நன்றி

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
12-ஜூலை-201822:19:41 IST Report Abuse

dandyஅப்படியானால் அங்கு water pump இருக்கவில்லை உங்கள் இந்தியர்கள் வரும்வரை ....???? டாஸ்மாக் கடை அருகே சொன்னால் நம்புவார்கள் ...

Rate this:
Makizhselvam - Marakkanam,இந்தியா
12-ஜூலை-201814:48:00 IST Report Abuse

Makizhselvamசிறுவர்கள் அனைவரையும் நீண்ட நாட்கள் கழித்து உயிரோடு மீட்கப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி. உயிரை பணயம் வைத்து இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Rate this:
மேலும் 27 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X