பொருளாதார நிலையில் இந்தியா முன்னேற்றம்! உலகளவில் 6ம் இடம் பிடித்து சாதனை Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பொருளாதார நிலை,இந்தியா,முன்னேற்றம்,உலகளவில்,6ம் இடம்,சாதனை

புதுடில்லி : சர்வதேச அளவில், பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகள் குறித்து, உலக வங்கி நேற்று வெளியிட்ட பட்டியலில், இந்தியா, ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. வல்லரசான பிரான்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளி, இந்தியா இந்த சாதனையை படைத்துள்ளது.

சர்வதேச அளவில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி, ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. இதன்படி, 2017ம் ஆண்டுக்கான பட்டியலை, உலக வங்கி நேற்று வெளியிட்டது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பட்டியல் :


கடந்த, 2017ம் ஆண்டில், பொருளாதார முன்னேற்றம் அடைந்த நாடுகளின் பட்டியலில், அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது; இரண்டாவது இடத்தை சீனாவும், மூன்றாவது இடத்தை ஜப்பானும் பிடித்துள்ளன. ஐரோப்பிய நாடுகளான, ஜெர்மனி நான்காவது இடத்திலும், பிரிட்டன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

இந்தியா, 2.59 லட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவிலான, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஆறாவது இடத்திற்கு

முன்னேறியுள்ளது. பிரான்ஸ், 2.58 லட்சம் கோடி டாலருடன், ஏழாவது இடத்தை பிடித்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், மந்தநிலையில் இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகள் மற்றும் சீர்திருத்தங்களால், மீண்டும் எழுச்சி அடைந்துள்ளது. நுகர்வோர் செலவினம் அதிகரித்ததால், தயாரிப்பு துறை பயன் அடைந்தது. இது, இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது.

எழுச்சி :


பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி., அறிமுகம் போன்றவற்றால், பொருளாதார வளர்ச்சி, சற்று குறைந்தது.

ஆசியாவில், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, மொத்த உள்நாட்டு உற்பத்தியை, இரு மடங்கு உயர்த்துவதில், இந்தியா நல்ல முன்னேற்றத்தை அடைந்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தனி நபர் வருவாய்!

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, தனி நபர் வருவாயில், இந்தியா, பிரான்சை விட, 20 மடங்கு பின்தங்கியுள்ளது; இதற்கு, இரு நாடுகளின் மக்கள் தொகையில் உள்ள வித்தியாசம் தான், காரணம். இந்தியாவின் மக்கள் தொகை, 134 கோடி; பிரான்சில், 6.70 கோடி பேர் மட்டுமே வசிக்கின்றனர்.

-உலக வங்கிஅறிக்கைஜி.எஸ்.டி.,யால் உயர்ந்த வளர்ச்சி விகிதம் :

இந்தியாவில், ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, 2017, ஜூலை, 1ல், அமல்படுத்தப்பட்டது. இது, அமல்படுத்தப்படும் முன், 2017 - 18 நிதியாண்டின், முதலாம் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக இருந்தது. அந்த ஆண்டின் சராசரி, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.74 சதவீதமாக இருந்தது. ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்டபோது, தொழில் துறையினர் அதற்கு பழக்கப்படாததால், உற்பத்தி விகிதம் சற்று குறைந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி., விகிதத்தில் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டதால், பொருளாதார வளர்ச்சி, வேகம் எடுத்தது. 2018 - 2019 நிதியாண்டில், ஜூனுடன் முடிந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக அதிகரித்து, வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 'இனி வரும் நிதியாண்டுகளில், பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்' என, பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், ஜி.எஸ்.டி., அமலால், பொருளாதாரத்தில் தேக்கம் ஏற்படும் என்று கூறப்பட்ட கருத்துகள் பொய்யாகி உள்ளன.Advertisement

வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
13-ஜூலை-201800:15:29 IST Report Abuse

sprஎல்லாம் சொல்லிவிட்டு மக்கள் கையில் காசு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம் .எப்படி அவர்கள் கையில் காசு வந்தது... அன்றாடச் செலவுக்கு மாதாமாதம் பட்ஜெட் போட்டு செலவழிப்பவருக்குத்தான் இதற்கான பதில் தெரியும் இந்தக் கேள்விக்குப் பதில் - money from credit cards bank loans etc. People started charging more for the same service for they require more money for their lavish spending.( exceeding the limits of reason or necessity). Even unemployed youth depending n his father's salary, wants a Harley Davidson Bikes bike costing a he lowest priced model at Rs. 5.25 lakh இதன் விளைவு “லஞ்சம், ஊழல் இன்னும் இதர தீய வழிகளில் பணம் பெருக்கும் முறைகள். Centre for Monitoring Indian Economy (CMIE), a think-tank that tracks business and economic data சொல்வது The number of jobseekers in India, rising steadily over the last few months, spiked to 7.1% in the week ended Feb. 25..................There are around 31 million unemployed Indians seeking jobs now (the number of job creation in 2018 is limited to an estimated 6,00,000.) —the highest since October 2016, according to a report published on Feb. 27 by the Centre for Monitoring Indian Economy (CMIE), a think-tank that tracks business and economic data..................After falling to a low of 3.4% in July 2017, unemployment rates have been rising gradually, the CMIE data show....................... படித்த படிப்புக்கு வேலை இல்லை படிப்பின் தரம் தாழ்ந்துவிட்டது பொறியியல் படிப்பு படித்தாலும் உடனடியாக அவர்களைப் பணிக்கு அமர்த்த இயலவில்லை ஒவ்வொரு நிறுவனமும் பல லட்சங்களை செலவழித்து அவர்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே அவர்களுக்கு பணி வாய்ப்பு தர இயலும். இது குறித்து பிரதமர் உட்பட எவரும் கவலைப்படவில்லை சாலை போடும் பணிக்கும் கட்டிடம் கட்டும் பணிக்கும் வாய்ப்பு கொடுத்தால் போதுமென்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுவிட்டனர். ஆனால், செலவு மட்டும் குறையவில்லை அதற்கு உதவுவது கிரெடிட் கார்டு வங்கிக்கடன் அல்லது அதீத அளவில் சேவைக்கட்டணத்தை உயர்த்துவது போன்றவை இன்று ஒரு மின்சாரப் பணிக்கோ பிளம்பர், கொத்தனார் சித்தாள் பணிக்கு குறைந்த பட்சம் ரு 250/- முதல் ரு 400/- வரை தர வேண்டியிருக்கிறது அது அவர் வாங்கும் இருசக்கர வண்டி வீட்டில் வைத்திருக்கும் டிஷ் தொலைக்காட்சி இவற்றுக்கான தேவை. செய்யும் பணி அதேதான் அதில் எதுவும் மாற்றமில்லை பணி நேரமோ குறைவு. அரசாங்கத்தின் வங்கி நிர்வாக முறைகள், கட்டுப்பாடுகள் குறைந்த வட்டிவிகிதம் இவற்றால் வங்கி சேமிப்பு குறைந்து விட்டது. பங்கு சந்தை சூதாட்டம் அதிகரித்துவிட்டது. திரு குருமூர்த்தி சொன்னபடி மக்களின் வங்கி சேகரிப்பே நாட்டை முந்திய அரசின் முட்டாள்தனமான நிதிக் கொள்கையின் தீய விளைவுகளிலிருந்து நாட்டைக் காப்பாற்றியது. இன்று அது இன்னமும் குறைந்து போகிறது. நிறுவனங்கள், விவசாயிகள் வாங்கும் கடன் அவர்களின் வியாபாரத்தை அதிகரித்து நாட்டுக்கு வருமானத்தை, அதன் வளத்தைப் பெருக்கிறது ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் தனிமனிதர் வாங்கும் கடன் திருப்பி அளிக்கப்படாத வகையில் நாட்டுக்கு இழப்பே. Higher spending (fuelled by potentially higher consumer debt) alongside lower savings will have long-term consequences on the less cash economy. What comes as a surprise to us is the total spends using Plastic Money at Point of Sale [PoS] and eCommerce. Credit Card users are heavy spenders at PoS & Online as mere 2 Crore Credit Card holders spend a whopping 17,186 Crore while 50 Crore Debit Card holders spent a meager 11,101 Crore. - இது நாட்டுக்கு நல்லதல்ல

Rate this:
12-ஜூலை-201823:18:45 IST Report Abuse

a.thirumalaiஇது மிக சரியான கணிப்பு உண்மைதான் அரசியல் வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் மிக பெரிய முதலாளிகள், கருப்பு பணமுதலைகள் ரவுடிகள் வளர்ச்சியில் இந்தியா ஆறாவது இடத்தில் கண்டிப்பாக இருக்கும்.

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
12-ஜூலை-201823:15:03 IST Report Abuse

Viswanathan இந்தியாவில் பாலும் , தேனும் பெருகி ஓடுகிறது , விளைச்சல் அமோகமாக உள்ளது மக்கள் தங்கள் கையில் உள்ள அபரிமிதமான பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது என முழிக்கிறார்கள் . பெட்ரோல் லிட்டர் 43 . 09 ரூபாய்க்கு விற்கிறது . தொழிற்சாலைகளில் கடை மட்ட ஊழியர் லட்சம் ஊதியம் வாங்குகிறார் . ஹோட்டல்களில் முழு சாப்பாடு gst வரி உட்பட ஐம்பது ரூபாய்க்கு கிடைக்கிறது .

Rate this:
மேலும் 63 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X