சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முட்டை மோசடி நிறுவனம்
ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு

சென்னை : தமிழக அரசுக்கு பருப்பு, முட்டை, சத்துமாவு வழங்கும், 'கிறிஸ்டி பிரைடு கிராம்' என்ற ஒப்பந்த நிறுவனம், 1,350 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது, வருமான வரித்துறை சோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனம், பல்வேறு நாடுகளில், பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முட்டை மோசடி,நிறுவனம்,ரூ.1350 கோடி,வரி ஏய்ப்பு


நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த, வட்டூரைச் சேர்ந்தவர், குமாரசாமி, 55. ஆண்டிப்பாளையத்தில், கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில், முட்டை, சத்து மாவு மற்றும் ரேஷன் கடைகளுக்கான பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

இந்நிறுவனத்தின் மீது, வரி ஏய்ப்பு புகார் எழுந்ததைத் தொடர்ந்து, குமாரசாமி வீடு, அலுவலகம், ஆடிட்டர், கேஷியர், உறவினர்களின் வீடுகள் என, பல்வேறு இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள், ஜூலை, 5 முதல் சோதனை நடத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள, அக்னி எஸ்டேட் பவுண்டேஷன், பிளேம் விளம்பர நிறுவனம், அக்னி கல்லுாரி, விஷ்ணு சூரியா லாஜிஸ்டிக் நிறுவனம் உட்பட, பல்வேறு அலுவலகங்களிலும், வருமான வரி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதுதவிர, நுங்கம்பாக்கம், கிரீம்ஸ் சாலையில் உள்ள, கிறிஸ்டி அலுவலகம், திருவான்மியூரில் உள்ள, கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி வீட்டிலும் சோதனை நடந்தது. மேலும், கோட்டூர்புரத்தில் உள்ள, அக்னி குழுமத்தின் கீழ் உள்ள, பாலாஜி அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர், ஜெயப்பிரகாஷ் வீடுகளிலும் சோதனை நடந்தது.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள வாணிப கழக மேலாண் இயக்குனர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுதா தேவி வீடு உட்பட, தமிழகம் மற்றும் பெங்களூரு என, 76 இடங்களில் வருமானவரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, மத்திய பிரதேசத்தில் இருந்த, கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியை, பெங்களூரு அழைத்து வந்து, வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். பின், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிற்கு அழைத்துச்சென்றும் விசாரணை நடத்தப்பட்டது. குமாரசாமியிடம் மட்டும், 19 மணி நேரத்துக்கும் மேலாக, வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஐந்து நாட்களாக தொடர்ந்த இந்த சோதனையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பின், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, நிறுவனத்தின் சொத்து மதிப்பு, வரி ஏய்ப்பு மற்றும், வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் ஆராயப்பட்டன. இரண்டு நாள் இடைவெளியில், கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், வரி ஏய்ப்பு விபரங்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்களிடமிருந்து, கணக்கில் காட்டப்படாத, 19 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

மேலும், பல்வேறு போலியான நிறுவனங்கள் துவங்கி, முறைகேடு செய்ததும், சிங்கப்பூர், மலேஷியா உட்பட, பல்வேறு நாடுகளில், இந்நிறுவனம் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்கள் கணக்கின் படி, இதுவரை, 1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது; ஆய்வுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆவணங்களை பட்டியலிட்டுள்ள வருமான வரித்துறை, இதில் தொடர்புடைய மேலும் பலரிடமும் விசாரணை நடத்துவர் எனவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடக்கும்

Advertisement

எனவும் கூறப்படுகிறது. இதனால், கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய, அதிகாரிகள் முதல், அமைச்சர்கள் வரை, அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.

முட்டை டெண்டருக்கு எதிர்ப்பு; 6 விண்ணப்பங்களும் நிராகரிப்பு:

சத்துணவு திட்டத்திற்கு, தினமும், 50 லட்சம் முட்டை வழங்க, ஆண்டுக்கு, 480 கோடி ரூபாய்க்கு, சமூக நலத்துறை டெண்டர் கோரியிருந்தது. இந்த டெண்டரில், வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளான, கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த, கிறிஸ்டி கிஷான், நேச்சுரல் புட், ஸ்வர்ணபூமி என, மூன்று நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளி வழங்கி இருந்தன. இது தவிர, ஸ்ரீமாருதி அக்ரோவ், நாமக்கல் சொசைட்டி ஆகிய நிறுவனங்களும், ஆந்திராவை சேர்ந்த, ஸ்ரீதர்பாபு என்பவரும், ஒப்பந்தப்புள்ளி கொடுத்திருந்தனர். டெண்டர் திறப்பு, சென்னை, தரமணியின் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் நேற்று நடந்தது. டெண்டர் திறக்கப்பட்டபோது, 'வருமான வரித்துறையின் பிடியில் சிக்கியுள்ள, கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை பரிசீலிக்கக் கூடாது' என, மற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டு, அதிகாரிகள் செய்வதறியாது தவித்தனர். மாலையில், ஒவ்வொரு நிறுவனத்தினரையும் தனித்தனியே அழைத்து, அதிகாரிகள் பேசினர். பின், 'டெண்டரில் பங்கேற்ற ஆறு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டு விட்டன; விரைவில், மறு டெண்டர் கோரப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-201817:02:56 IST Report Abuse

Niranjanமோசடி நடக்கும் இடங்களில் இலவச மற்றும் விலை இல்லாத பொருட்களுக்கு முதல் இடம். இலவசங்களை முதலில் தடை செய்ய வேண்டும்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201810:44:01 IST Report Abuse

இந்தியன் kumarவரி கட்டாத நிறுவன்கள் எல்லாம் வரி கட்டினால் இந்தியா செழிக்கும்.. மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்புக்கு உரியது.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
12-ஜூலை-201810:42:44 IST Report Abuse

இந்தியன் kumarதமிழ்நாட்டில் மோசடி இல்லாத துறையே கிடையாது , எல்லா துறையிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது , மக்கள் தான் இந்த ஊழல் கலகங்களை விரட்ட வேண்டும் . வோட்டுக்கு காசு வாங்கமாட்டேன் என்று உறுதி மொழி எடுத்து கொள்ள வேண்டும்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X