பதிவு செய்த நாள் :
பலாத்கார புகார்
பாதிரியார்கள் விரைவில் கைது?

திருவனந்தபுரம் : கேரளாவில், பாலியல் பலாத்கார புகாரில் சிக்கிய, மூன்று பாதிரியார்களின் முன் ஜாமின் மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, அவர்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பலாத்கார புகார்,பாதிரியார்கள்,விரைவில்,கைது?,கேரளா


கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சில், கேரளாவைச் சேர்ந்த நான்கு பேரும், டில்லியைச் சேர்ந்த ஒருவரும், பாதிரியார்களாக உள்ளனர்.

பாவ மன்னிப்பு :


இந்நிலையில், கோட்டயம் மாவட்டம் திருவல்லாவைச் சேர்ந்த ஒருவர், சர்ச் நிர்வாகத்துக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாவது: என் மனைவியை, திருமணத்துக்கு முன், பாதிரியார் ஒருவர் பலாத்காரம் செய்துள்ளார். திருமணத்துக்கு பின், இதற்காக மற்றொரு பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்.

அந்த பாதிரியார், மேலும் மூன்று பாதிரியார்களிடம், இது பற்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து, நான்கு பாதிரியார்களும், என் மனைவியை மிரட்டி, பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நான்கு பாதிரியார்களையும், விடுமுறையில் செல்லும்படி, சர்ச் நிர்வாகம் உத்தரவிட்டது. பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியானதையடுத்து, பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர், போலீசில் புகார் செய்தார். நான்கு பாதிரியார்கள் மீதும், போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

முன் ஜாமின் கிடையாது :


வழக்கு பதிவு செய்யப்பட்ட நான்கு பாதிரியார்களில் இருவர், முன் ஜாமின் கேட்டு, கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடந்தது. மனுக்களை தள்ளுபடி செய்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

பாதிரியார்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு, முகாந்திரம் உள்ளது. எனவே, இவர்களுக்கு முன் ஜாமின் வழங்க முடியாது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, சம்பந்தபட்ட பாதிரியார்கள், எந்த நேரத்திலும் கைது செய்யப் படலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


விமான நிலையங்களில், 'உஷார்' :

கேரளாவைச் சேர்ந்த ஆசிரியை, பஞ்சாப் மாநிலம், ஜலந்தரில் உள்ள, கிறிஸ்தவ அமைப்புக்கு சொந்தமான பள்ளியில் பணியாற்றி வருகிறார். ரோமன் கத்தோலிக்க டயோசிஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளி, பாதிரியார், பிரான்கோ முலக்கல் தலைமையில் செயல்பட்டு வருகிறது. பாதிரியார் முலக்கல், 2014ல், கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், குருவிலங்காட்டில் உள்ள விருந்தினர் மாளிகையில், தன்னை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாகவும், அதன் பின், 13 முறை பலாத்காரம் செய்ததாகவும், அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை, கோட்டயம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பாதிரியார் முலக்கல், வெளிநாடுக்கு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியானது. இதையடுத்து, கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201809:16:08 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>பைபிளே என்னா சொல்லுது மதபோதகர்களே கண்ணுலே ஏவல் வாந்தாலும் அன்பவின்னா

Rate this:
Ramesh - Bangalore,இந்தியா
13-ஜூலை-201814:25:58 IST Report Abuse

Ramesh.If a way of living (religion) - Hinduism - is standing more than 23000+ years in this land, it says manything whereas many have come and gone and Sanatana Dharma is standing like Himalaya after so much of invasions as well.Christians(350+ years) and Muslims(800+ years) invasions have failed total conversion in this land only and no where in the world.It shows it's(hinduism) depth ness of concepts...Jai Hind Before 900 years in this land (India, Pakistan,Bangladesh and Afghanistan) all were following Sanatan Dharm or Buddhism or Jainism only..People have converted for money, facility, females, fear, death threats etc...Still 80% population is sticking to its original which will tell manything as well as everything

Rate this:
Kumar - Chennai,இந்தியா
12-ஜூலை-201821:26:22 IST Report Abuse

Kumarஒன்றிரண்டு தவறான நபர்கள் பாதிரிமார் ஆகிவிட்டதால் கிறிஸ்தவமே கேவலப்படுத்தப்படுகிறது. தவறான நபர்கள் இனியாவது உள்ளே நுழையாமல் பார்த்துக்கொள்வது கிறிஸ்து மதத்துக்கு அதன் எதிர்காலத்துக்கு நல்லது. கத்தலிக் கிறிஸ்து மதத்தில் பாதிரிமார் கல்யாணம் பண்ணிக்கொள்ள நடவடிக்கை எடுத்தால் நல்லது. அல்லது கல்யாணம் பண்ணிக்கொண்ட நல்ல கிறிஸ்தவர்கள் பாதிரி ஆனால் நல்லது. நல்லவர்களைகூட தப்பு செய்ய தூண்டும் அல்லது பழி வாங்க தூண்டும் பாவ மன்னிப்பு சடங்கு வேண்டவே வேண்டாம்.

Rate this:
மேலும் 70 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X