பொது செய்தி

இந்தியா

கேரளாவுக்கு கனமழை எச்சரிக்கை

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (4)
Advertisement
கேரளா, கனமழை, வானிலை மையம், எச்சரிக்கை

கொச்சி : நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் கேரளாவில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சுற்றுலா பயணிகள், மீனவர்கள் உள்ளிட்டோர் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை ஜூலை 13 ம் தேதி முதல் பல பகுதிகளில் 14 முதல் 20 செ.மீ., வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மணிக்கு, 35 முதல் 60 கி.மீ., வேகத்தில் மேற்கு நோக்கி காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், சுற்றுலா பயணிகள் கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதால் மலைப்பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு மலப்புரம், கன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும்

இதனால் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13 முதல் அனைத்து தாலுகா கட்டுப்பாட்டு அறைகளும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mal - Madurai,இந்தியா
12-ஜூலை-201817:00:58 IST Report Abuse
Mal Once "Gods own land" attributed to lord Parashuramar... Now in the grip of "Against (Hindu) god " activists... Only Anantha Padmanabha can save...else....??
Rate this:
Share this comment
Cancel
Mayuram Swaminathan - Chennai,இந்தியா
12-ஜூலை-201816:46:54 IST Report Abuse
Mayuram Swaminathan நாடு முழுவதும் பரவலாக கனத்த மழை பொழிய வேண்டும். அப்போதுதான் உணவு பொருள்கள் விலை கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
12-ஜூலை-201817:41:03 IST Report Abuse
sethuநல்லா சொன்னீங்க ஆனால் செயற்கையாக உணவை பதுக்கிவைத்து ,விலை குறையாமல் பார்த்துக்கொள்ள வியாபாரிகளுக்கும்,பதுக்கல் காரர்களுக்கும் தெரியும்,உதாரணம் ரேஷன் அரிசி 2 ரூபாய்தான் தமிழகத்தில் ஆனால் அரசு அதை மத்திய அரசிடம் 20 ரூபாய் / kg வாங்குது ,ஆனால் அது முறையாக மக்களுக்கு கிடைக்கவிடாமல் இந்த பதுக்கல் காரர்கள் களவாடிச்செல்வது இன்றளவூம் நடக்கிறது.அதனால நாம் என்னதான் நினைத்தாலும் வழிப்பறி நக்காது என நிச்சயம் சொல்லமுடியாத காலம் இது....
Rate this:
Share this comment
Cancel
ravichandran - avudayarkoil,இந்தியா
12-ஜூலை-201811:09:25 IST Report Abuse
ravichandran கன மழை பெய்யனும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X