பொது செய்தி

இந்தியா

சென்செக்ஸ் ‛ஜிவ்..'': புதிய உச்சத்தில் உட்கார்ந்தது

Updated : ஜூலை 12, 2018 | Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (37)
Advertisement
பங்குச்சந்தைகள், சென்செக்ஸ் சாதனை, இந்திய பங்குச்சந்தை, நிப்டி , சென்செக்ஸ், stock market, Sensex record, Indian stock market, Nifty, Sensex, NSE ,BSE,

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவிற்கு சென்செக்ஸ் அதிரடியாக உயர்ந்து புதிய வரலாறு படைத்துள்ளது.


400 புள்ளிகள்:

காலையில் 180 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை துவக்கிய சென்செக்ஸ், முக்கிய பெரு நிறுவன பங்குகளின் உயர்வால் பிற்பகல் வர்த்தகத்தின் போது 400 புள்ளிகள் வரை அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் மட்டும் ரூ.6,86,604 கோடிகள் வரை வர்த்தகமானது. மும்பை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், எச்டிஎப்சி மற்றும் எச்டிஎப்சி வங்கி நிறுவன பங்குகள் உயர்வால் மட்டும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது.

பகல் 12 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 413.89 புள்ளிகள் உயர்ந்து 36,679.82 புள்ளிகளாக உயர்ந்தது. இதற்கு முன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 29 ம் தேதி 36,444 புள்ளிகள் எட்டியதே புதிய சாதனையாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. நிப்டி 123.20 புள்ளிகள் உயர்ந்து 11,071.50 புள்ளிகளாக இருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivan - Palani,இந்தியா
15-ஜூலை-201808:35:19 IST Report Abuse
sivan பூங்குழலி ""மகிழ்ச்சி.... பெட்ரோல் விலை குறையுமா......??.. ""குறையாது. ஆனால் என்ன விலையாக இருந்தாலும் அதை வாங்கும் சக்தி பெருகும்...."" சபாஷ் வெங்கடேஸ்வரன் சார் சரியாக சொன்னீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
R Sanjay - Chennai,இந்தியா
12-ஜூலை-201818:36:02 IST Report Abuse
R Sanjay அது என்ன "ஜிவ்" BSEல ஒரு 30 கம்பனிகள் NSEல ஒரு 50 கம்பெனிகள், இந்த 80 கம்பனிகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் நிகழ்வுகள் மட்டுமே பங்குச்சந்தை நிலவரம் அல்ல. இந்திய பங்குசந்தையில் ஐய்யாரியத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன அதில் தினமும் குறைந்தது 2500றில் இருந்து 2900 வரையான நிறுவனங்கள் வர்த்தகங்கள் செய்கின்றன. வெறும் 80 நிறுவனத்தில் பல நிறுவனங்கள் இன்றைக்கு நல்ல லாபத்தை கொடுத்துவிட்டு என்று கூறி இந்திய பொருளாதாரம் மேலேறிவிட்டது என்று கூறினால் கேலிக்கூத்தானது. கடந்த ஓராண்டாகவே BSE NSE குறியீடுகளின் மதிப்பிற்க்கேற்ப மற்ற பெரும்பானமையான நிறுவங்கங்களின் பங்குகள் ஏற்றம் காணவில்லை என்பதே உண்மை. அதிலும் SMALL & MIDCAP பங்குகளின் நிலை அதாலாபாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. தற்போது பங்குசந்தையானது BUILDING BASEMENT WEEK என்ற நிலையில் தான் உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் மிகப்பெரும் வீடழி என்று வரும்போது இந்திய பொருளாதாரம் வளர்கிறது என்று கூறுங்கள் நன்றாக இருக்கும். தற்போதைய நிலையில் LARGE CAPITALIZATION பங்குகள் தவிர மற்ற எல்லா பங்குகளும் அடிவாங்கிக்கொண்டு இருக்கிறது. உங்களுக்கு தெரிந்த நபர்கள் பங்குவர்த்தகத்தில் ஈடுபாட்டுக்கொண்டு இருந்தால் அவரிடம் சென்று கேளுங்கள் இன்று உச்சத்தை தோட்ட உங்களது வர்த்தகம் எப்படி என்று. நொந்து பொய் பதில் சொல்வார்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201820:26:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//SMALL & MIDCAP பங்குகளின் நிலை அதலபாதாளத்திற்கு சென்று கொண்டு இருக்கிறது. தற்போது பங்குசந்தையானது BUILDING BASEMENT WEEK என்ற நிலையில் தான் உள்ளது. அடுத்த ஒரு வருடத்தில் மிகப்பெரும் வீழ்ச்சி என்று வரும்போது இந்திய பொருளாதாரம் வளர்கிறது என்று கூறுங்கள் நன்றாக இருக்கும். // அடுத்த வருட தேர்தலில் பாஜகவை மக்கள் நிச்சயம் தூக்கியடித்திருப்பார்கள். வீழ்ச்சிக்கு காரணம் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் தான் என்று காவிகள் போராட்டம் செய்து கொண்டிருப்பாரக்ள்....
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
12-ஜூலை-201817:48:31 IST Report Abuse
Kuppuswamykesavan /////J.V. Iyer - Singapore,சிங்கப்பூர் 12-ஜூலை-2018 16:42 பங்கு சந்தை உயர்வு நல்லது. சில அறிவுகெட்ட ஜென்மங்களுக்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாமல் நக்கல் அடிப்பார்கள். வோட்டிற்கு நோட்டு வாங்கியே பழக்கம் உள்ள இவர்கள் புரியாமல் கருத்தை பதிவு செய்வது தெரிந்ததே.///// - சார், வோட்டிற்கு நோட்டாக, 20-ரூபாவை டோக்கனாக வாங்கிட்டு, அதை நம்பி ஓட்டும் போட்டுட்டு, பிற்பாடு, மீதி பணம் கைக்கு வராம, தாங்கள் ஏமாந்தது அறிந்து, வீதிக்கு வந்து கூப்பாடு வேற போடறாங்களே, சார், நம்மூர் வோட்டர்கள். என்னன்னு சொல்றது, நமது தமிழக சில பல வோட்டர்களை?.
Rate this:
Share this comment
12-ஜூலை-201820:55:25 IST Report Abuse
பாமரன்குப்புசாமி... உங்களை போன்ற காப்பி பேஸ்ட் ஜால்ரா அடி பார்ட்டிகளுக்கு உரைக்கும் படி மேலே சஞ்சய் அழகா பதிஞ்சிருக்கார். நமக்கு எட்டாத / வெளங்காத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்கறது நலம்னு சொல்லலாங்க சக வாசகரே.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X