ஜாதவ் விவகாரத்தில் 2வது பதில் மனு: பாக்., முடிவு

Added : ஜூலை 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தான், இந்தியா,  சர்வதேச நீதிமன்றம், ஜாதவ் விவகாரம்,  இந்திய கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவ் , குல்பூஷண் ஜாதவ் விவகாரம்,  பாகிஸ்தான் அரசு,
Gulbushan Jadhav, Pakistan, India, International Court of Justice, Jadhav affair, Indian Naval Officer Gulbushan Jadhav, Gulbushan Jadhav affair, Pakistan Government,  Pakistan, file counter, memorial, Jadhav ,

இஸ்லாமாபாத்: இந்திய கடற்படை வீரர் குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில், பாகிஸ்தான் இரண்டாவது பதில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது..


தடை

உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை பாகிஸ்தான் அதிகாரிகள் பிடித்தனர். தொடர்ந்து அவருக்கு கோர்ட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து, இந்தியா தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை விதித்துள்ளது.
இந்த விவகாரத்தில்,சர்வதேச நீதிமன்றத்தில் இரு நாடுகளும் பதில் மனு தாக்கல் செய்துள்ளன.


ஆலோசனை

இந்தியா சார்பில் ஏப்., 17 ல் பதில் மனு தாக்கல் செய்தது. இதற்கு பதில் அளிக்கும் வகையில், வரும் 17 ம் தேதி மற்றொரு மனுவை தாக்கல் செய்ய பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பிரதமருடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
ஜாதவ் விவகாரத்தில், அடுத்த ஆண்டு இறுதிகட்ட விசாரணை சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
12-ஜூலை-201817:25:29 IST Report Abuse
Indhuindian Pakistan administration does not seem to be worried about being shamed in international forum time and again. Better be known as Shamistan or Shamelessistan
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X