பதிவு செய்த நாள் :
பாராட்டு!
மகளிர் சுய உதவி குழுவினருக்கு பிரதமர் மோடி..
'நமோ மொபைல் ஆப்' மூலம் கலந்துரையாடல்

புதுடில்லி : ''மகளிர் சுய உதவிக் குழுக்களால், பெண் தொழில் முனைவோர் உருவாகி வருகின்றனர். இதுபோன்ற சுய உதவிக் குழுக்கள் மூலம், பெண்கள் பொருளாதாரத்தில் வலிமை அடைந்து வருகின்றனர். பெண்களுக்கு அதிகாரம் அளிக்க, மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.

மகளிர் சுய உதவி குழு,பிரதமர் மோடி,Modi,Narendra modi,நரேந்திர மோடி,மோடி,பாராட்டு,நமோ மொபைல் ஆப்,கலந்துரையாடல்நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுவினருடன், 'நமோ மொபைல் ஆப்' மூலம், பிரதமர் மோடி, நேற்று கலந்துரையாடினார்.


சவால் :இந்நிகழ்ச்சியில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்; அவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெண்கள் அதிகாரமிக்கவர்களாக இருந்தால், அந்த குடும்பம் வளர்ச்சியடையும்; முன்னேற்றம் அடையும். ஏனெனில், பெண்களுக்கு தான், எந்த சவாலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் திறமை அதிகம். பெண்கள் அதிகாரமிக்கவர்களாக இருக்க, அவர்களுக்கு நிதி சுதந்திரம் மிகவும் அவசியம்.


பெண்களுக்கு, எதையும் கற்று கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. வாய்ப்புகளை தான், ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்த பெண்கள் பலர், சிறந்த தொழிலதிபர்களாக உருவெடுத்துள்ளனர்.


கல்வியறிவு :நாட்டின் வளர்ச்சியில், பெண்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அதனால் தான், மத்திய அரசு, பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒரு பெண், கல்வியறிவு பெற்றிருந்தால், அந்த குடும்பத்தினர் அனைவரும், கல்வியறிவு பெற்றவர்களாக மாறிவிடுவர்.


பெண்களை தெய்வமாக, இயற்கையின் வடிவமாக பார்ப்பது, நம் கலாசாரம். அதனால் தான், நதிகள், மரங்கள் அனைத்தையுமே பெண் வடிவமாக பார்க்கிறோம். 'கிராமங்கள் வளர்ச்சியடைந்தால் தான், நாடு வளர்ச்சி அடையும்' என, மஹாத்மா காந்தி கூறினார்.


கிராமங்கள் வளர்ச்சியடைவது, பெண்களின் கைகளில் தான் உள்ளது. மேலும், சமூக வளர்ச்சியிலும், சமூக மாற்றத்திலும், பெண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதனால் தான், பெண்கள், அதிகாரம் பெறும் வகையில், பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.


நிதி சுதந்திரம், பெண்களை அதிகாரமிக்கவர்களாகவும், திறமைசாலிகளாகவும் மாற்றுகிறது. நிதி அதிகாரம் பெற்ற பெண்களால் மட்டுமே, சமூக கொடுமைகளுக்கு எதிராக, அரணாக நிற்க முடியும்; அந்த கொடுமைகளை அகற்ற முடியும்.


கிராம முன்னேற்றம் :கிராம முன்னேற்றங்களில், மகளிர் சுய உதவி குழுக்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன. கடந்த, 2014ல், மத்தியில், பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், இதுவரை, 20 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2.25 கோடி குடும்பங்கள், இந்த சுய உதவி குழுக்களின் கீழ் வந்துள்ளன.


தற்போது, நம் நாட்டில், 55 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள், ஐந்து கோடி பெண்களின் பங்கேற்புடன், சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மகளிர் சுய உதவி குழுக்களால், பெண் தொழில் முனைவோர் உருவாகி வருகின்றனர். இதுபோன்ற சுய உதவிக் குழுக்கள் மூலம், பெண்கள் பொருளாதாரத்தில் வலிமை அடைந்து வருகின்றனர்.


கிராம பொருளாதார வளர்ச்சியில், விவசாயமும், கால்நடை பராமரிப்பும் தான், முக்கிய பங்கு வகிக்கின்றன; இவை இரண்டையும், பெண்கள் இல்லாமல் செயல்படுத்த முடியாது. வீடுகளில், மாடு, ஆடு போன்ற கால்நடைகள் வளர்ப்பது, கிராம பெண்களின் தொழிலாகவே உள்ளது.


பால் உற்பத்தி மற்றும் விவசாய வளர்ச்சியில், பெண்களுக்கு பெரும் பங்கு உள்ளது.

Advertisement

பெண் குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் கல்வி முன்னேற்றத்துக்காகவும், இந்த அரசு தொடர்ந்து செயல்படும்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள், சுய உதவி குழுக்கள் செயல்பாட்டில், தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை, பிரதமருடன் பகிர்ந்தனர்.

புகைப்படம் எடுக்க தடை ஏன்?

டில்லியில், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையின், புதிய தலைமை அலுவலக கட்டடத்தை, பிரதமர் மோடி, நேற்று திறந்து வைத்தார்; அப்போது அவர் பேசியதாவது: நம் நாட்டின் நினைவுச் சின்னங்கள் மீது, மக்கள் பெருமைப்பட வேண்டும்; இல்லாவிடில், இந்த நினைவுச் சின்னங்கள் மதிப்பு இழந்துவிடும். மக்களின் பங்கு இல்லாமல், தொல்பொருள் ஆய்வு வெற்றி பெற முடியாது. நினைவுச் சின்னங்களை பராமரிப்பதில், நம் அனைவருக்கும் பங்கு உள்ளது. இதில், கார்ப்பரேட் நிறுவனங்களையும் பங்கேற்க வைக்க வேண்டும். நம் நாட்டில், 100க்கும் அதிகமான நகரங்களில், வரலாற்று நினைவுச் சின்னங்கள், இடங்கள் உள்ளன. இவை பற்றிய தகவல்கள், பள்ளி பாட புத்தகங்களில் இடம் பெற வேண்டும். அதன் மூலம், வரலாற்று நினைவிடங்கள் மீதான ஆர்வத்தை, மாணவர்களிடம் அதிகரிக்க முடியும். சில நினைவுச் சின்னங்களை புகைப்படம் எடுக்க, மக்களுக்கு, தொல்பொருள் ஆய்வுத்துறை தடை விதித்துள்ளது, ஆச்சர்யம் அளிக்கிறது. நவீன தொழில்நுட்பத்தின் உதவியால், பல ஆயிரம், கி.மீ.,க்கு அப்பால் இருந்து, செயற்கைக்கோள்கள் படம் எடுக்க, அனுமதிக்கிறோம். ஆனால், புகைப்படம் எடுக்க, மக்களுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன்? இந்த தடையை நீக்குவது பற்றி, தொல்பொருள் ஆய்வுத்துறை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201811:03:23 IST Report Abuse

Nallavan Nallavan\\\\ சில நினைவுச் சின்னங்களை புகைப்படம் எடுக்க, மக்களுக்கு, தொல்பொருள் ஆய்வுத்துறை தடை விதித்துள்ளது, ஆச்சர்யம் அளிக்கிறது. //// பிரதமர் அலுவலகம் அத்துறையை விளம்பரப்படுத்தாமல் கேள்வி கேட்க முடியாதா ????

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:43:41 IST Report Abuse

Srinivasan Kannaiyaகிராம பொருளாதார வளர்ச்சியில், விவசாயமும், கால்நடை பராமரிப்பும் தான், முக்கிய பங்கு வகிக்கின்றன இவை இரண்டையும், பெண்கள் இல்லாமல் செயல்படுத்த முடியாது. வீடுகளில், மாடு, ஆடு போன்ற கால்நடைகள் வளர்ப்பது, கிராம பெண்களின் தொழிலாகவே உள்ளது..... ஏதோ கனவு கண்டு விட்டார் போல உள்ளது... இவர் சொல்லுற வீடு மட்டும்தான் இருக்கிறது... விவசாயம்,,, கால்நடைகள் அருகிவருகிறதது... இனி இவரே ஆண்டால் அவற்றை மீயூசியத்தில்தான் காணலாம்...

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
13-ஜூலை-201811:58:13 IST Report Abuse

வல்வில் ஓரிஅட அரைவட்டு... உன் கருத்தில் பாதி பிரதமர் சொன்னதில் இருந்து சுட்டு விட்டு மீதி பாதி அவரை இகழ்கிறது... அவரும் அதை தானேடா சொன்னாரு..? ...கால்நடையை வெட்டி திங்காதீங்கடா.. அது பெருகட்டும் ன்னு சொன்னாலும் தப்பு...அப்புறம் கால்நடைகள் அருகி வருகிறது ன்னும் இங்க வந்து புலம்பு... .என்னதான்டா கணக்கு..?...

Rate this:
தமிழ் செல்வன் - Salem,இந்தியா
13-ஜூலை-201806:52:11 IST Report Abuse

தமிழ் செல்வன்AAP Started against Congress Now Joined Hands to defeat Modi. Mamtha Started TMC against Congress & CPM Now Joined Hands to Defeat Modi. Sharad pawar Started NCP Against Congress Now Joined Hands to Defeat Modi. Mayawati Started BSP to defeat SP, Vice Versa Now they Joined Hands to Defeat Modi. RJD Started against Congress now Joined Hands to defeat Modi. TDP started Against Congress Now Joined hands to Defeat Modi. TRS Started against TDP & Congress now Joined hands to defeat Modi. DMK started against Congress now joined hands to defeat Modi. Deva Gowda started JDS to defeat Congress now joined Hands to defeat Modi. CPM started against Congress now joined hands to defeat Modi. Shiv Sena Started against Congress Now Joined Hands to defeat Modi. Once against congress, now all Media channels, Intellectuals, Bollywood stars joined hands to defeat Modi. Modi should be defeated if he is an Individual, Organization or party but he is not. He is the hope & Aspiration of Millions of Indians. பெண்கள் இந்த நாட்டின் கண்கள்.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X