சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,வை யாரும் பார்க்கவில்லை
அப்பல்லோ நர்ஸ், 'திடுக்' தகவல்

சென்னை : ''மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை, சசிகலா, அவரது உறவினர் டாக்டர் சிவகுமார் தவிர, வேறு யாரும் பார்க்கவில்லை,'' என, அப்பல்லோ நர்ஸ், ஹெலனா தெரிவித்து உள்ளார்.

Jayalalithaa,ஜெயலலிதா,ஜெ.,,யாரும் பார்க்கவில்லை,அப்பல்லோ நர்ஸ்,திடுக் தகவல்


ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன், விசாரித்து வருகிறது. ஜெ.,க்கு சிகிச்சை அளித்த, டாக்டர் ஷில்பா, நர்ஸ் ஹெலனா ஆகியோர், நேற்று விசாரணை கமிஷனில் ஆஜராகினர்.

கேள்வி :


அவர்களிடம், நீதிபதி ஆறுமுகசாமி, வழக்கறிஞர்கள் பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ஜெ.,க்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

மயக்கவியல் நிபுணரான, ஷில்பா, 2016 அக்., 7ல், அப்பல்லோ மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்; ஜெ., இறக்கும் வரை பணியில் இருந்துள்ளார். 'நான் பணிக்கு வந்தபோது,

ஜெ., உடல்நிலை மோசமாக இருந்தது. அவருக்கான நோய் பாதிப்புகள், சிகிச்சைகள் குறித்தும் தெரிந்து கொண்டேன்' என, ஷில்பா தெரிவித்து உள்ளார். 'இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாரா' என்ற கேள்விக்கு, 'ஆம்' என, பதில் அளித்துள்ளார்.

'டிச., 4ல், ஜெ.,க்கு மாரடைப்பு ஏற்பட்டது. பகலில், டாக்டர் ரமா பணியில் இருந்தார். நான் இரவு பணிக்கு வந்தபோது, அவரது இதயம் செயலிழந்து இருந்தது. 'அதை செயல்பாட்டிற்கு கொண்டு வர, பல முயற்சிகள் செய்து, இறுதியாக எக்மோவில் இணைத்திருந்தனர்' என, விசாரணை கமிஷனில், ஷில்பா தெரிவித்துள்ளார்.

நர்ஸ் ஹெலனா, 2017 அக்டோபரில் இருந்து, ஜெ., இறக்கும் வரை பணியில் இருந்துள்ளார். 'நான் பணியிலிருந்தவரை, ஜெ.,வை, சசிகலா, டாக்டர் சிவகுமார் தவிர, வேறு யாரும் பார்க்கவில்லை. கண்ணாடி வழியே கூட யாரும் பார்க்கவில்லை. ஜெ.,க்கு இனிப்பு கொடுக்கப்படவில்லை.

மூச்சு திணறல் :


'பழங்கள் சாப்பிட்டதாக ஆவணங்கள் இருந்தால், அது தவறு. எனக்கு தெரிந்தவரை, எந்த பழமும், இனிப்பும் கொடுக்கப்படவில்லை' என, ஹெலனா தெரிவித்து உள்ளார். மேலும், 'டிச., 2 அன்று, மூச்சு திணறல் காரணமாக, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டது. மறுநாள் காலை, 11:00 மணி வரை தொடர்ந்தது.

Advertisement


'மீண்டும், பிற்பகல், 1:00 மணிக்கு வென்டிலேட்டரில் இணைக்கப்பட்டார். பின், இதயம் செயலிழக்கும் காலம் வரை, வென்டிலேட்டரில்தான் இருந்தார். டிச., 2க்கு பின், திட உணவு வழங்கப்படவில்லை' என்றும், விசாரணை கமிஷனில், ஹெலனா தெரிவித்துள்ளார்.

முரண்பட்ட தகவலால் குழப்பம் :

ஆறுமுகசாமி விசாரணை கமிஷனில், டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் வாக்குமூலம், ஒன்றுக்கொன்று முரணாக உள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தகவல்களை, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். ஜெ.,க்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறி உள்ளனர். அவ்வாறு செய்திருந்தால், 'எம்பார்மிங்' செய்வது சிரமமாக இருந்திருக்கும். அதேபோல், ஒருவர், 'ஜெ., இனிப்பு சாப்பிட்டார்' எனக் கூற, மற்றொருவர், அதை மறுக்கிறார். முரண்பட்ட தகவல்கள், விசாரணையில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
13-ஜூலை-201812:55:17 IST Report Abuse

muraliகூடா நட்பு கேடாய் முடியும் - உண்மை

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
13-ஜூலை-201812:54:39 IST Report Abuse

narayanan iyerசசிகலா 2012 ல் மீண்டும் ஜெயாவிடம் வந்தது. எனது சொந்தங்கள் யாரும் வரமாட்டார்கள் என்று உத்திரவாதம் ஜெயாவிற்கு கொடுத்துவிட்டு அவரின் உடலின் நிலையை சரியச்செய்து நல்லவள் மாதிரி நடந்து சொந்தகாரன் சிவகுமாரை கொண்டுவந்து சிகிச்சை அளிக்க சொல்லி ஒரு திட்டமிட்ட கொலை நடந்திருக்கிறது .ஜெயாவை மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லும் போது மத்திய அரசின் கறுப்பு பூனை படை எங்கே போனது? அவர்களை விலக்கியது யார்?அந்த அதிகாரம் யார் யாருக்கு கொடுத்தார்கள்? வீடு மற்றும் மருத்துவமனையில் இருந்த கேமிராக்கள் ஏன் அகற்றப்பட்டது?மோடியே தான் ஏதோ ஜெயாவின் நண்பர் என்று சொன்னார் . நண்பருக்கு ஒரு ஆபத்து என்னும் போது அவரின் நடவடிக்கை ஏன் இப்படி வேடிக்கை பார்க்கும் நிலையிலேயே இருந்தது? சசிகலாவை பாதுகாக்கவே சிறையில் இட்டுஇருக்கிறார்கள் . மொத்தத்தில் பெரிய சதி நடந்திருக்கிறது .ஜெயா செய்த மாபெரும் தவறு சசியை மீண்டும் 2012 ல் சேர்த்தது. சசியை மோடியுடன் பேசவைத்தது .இப்போ நடக்கும் விசாரணை கமிஷன் மூலம் ஒன்றும் நடந்துவிடபோவதில்லை . மக்களை ஏமாற்றும் ஒரு நிகழ்வு.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஜூலை-201819:55:18 IST Report Abuse

Manianஒரு புது திரில்லர் கதைதான். இதுபோல நடக்கவும் செய்யலாம். அனைத்தும் சசிகலாவிற்கே வெளிச்சம்....

Rate this:
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
14-ஜூலை-201813:30:59 IST Report Abuse

Needhiyin Pakkam Nil இப்போது அதிகாரத்தில் இருப்பது யார் மோடிஜி தானே, ஏன் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத சாதாரண சசியை கைது செய்து விசாரித்து உண்மையை வெளியில் கொண்டு வர கூடாது, அவருக்கு ஏன் தண்டனை வாங்கி கொடுக்க கூடாது,...

Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
13-ஜூலை-201812:52:12 IST Report Abuse

dandyஅப்போலோ ரொட்டியை முன்னாள் ரஷ்யா KGB பாணியில் விசாரித்தால் உண்மை வெளிவரும் ..டாஸ்மாக் நாட்டில் எந்த குடிமகனுக்கும் திராணி இல்லை

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X