பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மேட்டூர் அணை 2 நாளில் 6 அடி உயர்வு
கபினி நீர் திறப்பு 50 ஆயிரம் கன அடியாக நீடிப்பு

மேட்டூர் : கபினி உபரி நீர் திறப்பு, 50 ஆயிரம் கன அடியாக நீடிக்கும் நிலையில், மேட்டூர் அணை நீர்மட்டம், இரு நாட்களில், 6 அடி அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை,2 நாளில்,6 அடி,உயர்வு,கபினி,நீர் திறப்பு,50 ஆயிரம் கன அடி,நீடிப்பு


கர்நாடக மாநிலத்தில் உள்ள, ஹேரங்கி மற்றும் ஹேமாவதி அணைகள் நிரம்பினால் திறக்கப்படும் உபரி நீர், காவிரியில் கலந்து, நேரடியாக, கே.ஆர்.எஸ்., அணையை வந்தடையும். அங்கிருந்து திறக்கும் உபரி நீர், 182 கி.மீ., பயணித்து, மேட்டூர் அணைக்கு வரும்.

மைசூரு மாவட்டத்தில், காவிரியின் துணையாறுகளில் ஒன்றான கபிலா நதியின்

குறுக்கே, கபினி அணை கட்டப்பட்டு உள்ளது. அங்கு திறக்கப்படும் உபரி நீர், 241 கி.மீ., பயணித்து, மேட்டூர் அணைக்கு வந்து சேரும். கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்படும் உபரி நீர், டி.நரசிபுராவில் ஒன்றாக கலந்து, 140 கி.மீ., ஓடி, மேட்டூர் அணையை வந்தடைகிறது.
கபினி, ஹேரங்கி அணைகள் நிரம்பி, 50 ஆயிரம் கன அடி உபரி நீர், தமிழகத்திற்கு திறக்கப்படுகிறது. நேற்று, மேட்டூர் அணை நீர்மட்டம், 71.76 அடி, நீர் இருப்பு, 34.23 டி.எம்.சி.,யாக இருந்தது. வினாடிக்கு, 34 ஆயிரத்து, 426 கன அடி நீர் வந்தது.இரு நாட்களில், நீர்மட்டம், 6 அடி, நீர் இருப்பு, 6 டி.எம்.சி., அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் திறக்கப்படும் உபரி நீரால், ஒகேனக்கல் காவிரியாற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், நேற்று, நான்காவது நாளாக தடை விதிக்கப்பட்டது.

Advertisement

500 டன் காய்கறி உற்பத்தி பாதிப்பு :

மேட்டூர் அணை, 138.8 சதுர கி.மீ., சுற்றளவுடன், 34 ஆயிரத்து, 271 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. மொத்த நீர்மட்டம் 120 அடி. 60 அடிக்கு குறைவாக நீர்மட்டம் இருந்தால், அணையின் வறண்ட 10 ஆயிரம் ஏக்கரில் வெண்டை, கத்தரி, மிளகாய், வேர்க்கடலை, எள் ஆகியவற்றை விவசாயிகள் பயிரிடுவர். நடப்பாண்டு, முன்னதாகவே தீவிரமடைந்த பருவமழையால் ஜூன் 17 முதல் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர் வருகிறது. 17ம் தேதி, 40 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 72 அடியாக உயர்ந்தது. 26 நாட்களில் மளமளவென 32 அடி நீர்மட்டம் உயர்ந்ததால், நீர்பரப்பு பகுதியில் பயிரிட்ட வெண்டை, கத்திரி, வெங்காயம் உள்ளிட்ட பயிர்கள் அறுவடைக்கு ஒரு மாதத்துக்கு முன்பே நீரில் மூழ்கி விட்டன. இதனால், 500 டன்னுக்கு மேற்பட்ட காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sam - Bangalore,இந்தியா
13-ஜூலை-201811:26:11 IST Report Abuse

samNow fight for Cauvery. Like we do not want any water from Karnataka and by this time all water might have mixed with sea. Next year again politician will trigger the Cauvery issue.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-ஜூலை-201808:57:02 IST Report Abuse

Srinivasan Kannaiyaநூற்று இருபது அடி நமது இலக்கு...

Rate this:
CBE CTZN - Chennai,இந்தியா
13-ஜூலை-201807:24:36 IST Report Abuse

CBE CTZN8 வழிச்சாலை திட்டத்திற்கு காட்டும் வேகத்தை, நதி நீர் இணைப்பு மற்றும் நீர் கட்டமைப்பிற்கு காட்ட வேண்டும்.. இதுதான் விவசாயத்திற்கு தேவை... கேரளா கர்நாடக மாநிலக்களில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது... இந்தியா உலக அளவில் பொருளாதாரத்தில் 6 ம் இடத்தில் உள்ளது... இது நேற்றைய நம் தினமலர் செய்தி... விவசாயத்தில் நாம் எந்த இடத்தில இருக்கிறோம்.. அதையும் நம் சிறப்பு பத்திரிகை நிருபர் சொல்லலாம்...

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X