பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இயற்கை வழியில் காய்கறிகளை
உற்பத்தி செய்யுங்கள்;
பொதுமக்களுக்கு கவர்னர் வேண்டுகோள்

சென்னை : ''வீடுகளில் சேரும் மக்கும் குப்பையை பயன்படுத்தி, இயற்கை உரம் தயாரித்து, அவற்றை பயன்படுத்தி, இயற்கை வழியில் காய்கறிகளை உற்பத்தி செய்ய வேண்டும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், கூறினார்.

இயற்கை வழி,காய்கறி,உற்பத்தி,பொதுமக்களுக்கு,கவர்னர், வேண்டுகோள்


கவர்னர் மாளிகையில், மரங்களிலிருந்து உதிர்ந்து விழும் இலைகளை பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது. இது குறித்து, சென்னையில் உள்ள, 70 பள்ளிகளின் மாணவ, மாணவி யருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பள்ளிதலைமை ஆசிரியர்களுக்கு, இலவசமாக மண்புழு உரம் வழங்கும் நிகழ்ச்சி, கவர்னர் மாளிகையில் நடந்தது.

கவர்னர் பன்வாரிலால் புரோஹித், தலைமை ஆசிரியர்களுக்கு, மண்புழு உரம் வழங்கி பேசியதாவது:

சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் மற்றும் செடிகளை வளர்த்து, மண், நீர், காற்று ஆகியவை மாசுபடாமல் தடுக்க வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் பழங்கள், காய்கறிகள், தானியங்கள் போன்றவற்றை உண்பதால், நோயின்றி, ஆரோக்கியமாக வாழ முடியும்.

தாவரங்களின் இலைகள் மற்றும் பண்ணைக் கழிவுகளை, மண்ணில் மக்கச் செய்து, அவற்றுடன், ஆடு, மாடுகளின் சாணக்கழிவுகளை கலந்து, நிழற்பாங்கானப் பகுதிகளில் வைத்து, மண்புழுக்களை விட்டால், நல்ல மண்புழு உரம் கிடைக்கும். இதை, நிலத்தில் இடுவதால், மண்ணில் உள்ள ரசாயனத்தின் அளவு குறைக்கப்பட்டு, மண்ணின் உயிர் தன்மை மேம்படுகிறது. மண்ணிலுள்ளநுண்ணுயிர் களின் அளவு அதிகரிக்கிறது.

மண்புழு உரம், மண்ணின் கடினத் தன்மையை குறைத்து, செடிகளின் வேர்கள் நன்கு வளருவதற்கான காற்றோட்டம், நீர் பிடித்தன்மை போன்றவை மேம்படுத்துகிறது.

மண்புழு உரத்தில், பயிர் வளர்ச்சி ஊக்கிகளான, அமினோ அமிலங்கள், ஆக்சின், ஜிப்ரலின் போன்றவை அதிகம் உள்ளதால்,

Advertisement

பயிர்கள் நன்கு செழித்து வளர்வதுடன்,விளைச்சலும் அதிகரிக்கும்.

ரசாயன இடுபொருட்களின் பயன்பாட்டை குறைத்து, மண்புழு உரங்களை பயன்படுத்தி, இயற்கை வழியில் உணவு உற்பத்தி செய்து, நம் தேக ஆரோக்கியம் மற்றும் சந்ததிகளை காப்போம். வீடுகளில் சேரும் மக்கும் குப்பைகளை பயன்படுத்தி, அவரவர் வீடுகளில், இயற்கை உரங்களை பெற்று, இயற்கை வழியில், காய்கறிகளை உற்பத்தி செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கவர்னரின் கூடுதல் தலைமை செயலர், ராஜகோபால், சென்னை மாநகராட்சி துணை கமிஷனர், மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-ஜூலை-201821:18:15 IST Report Abuse

balநல்ல யோசனை...ஆனால் பல மடையர்கள்...இந்த ஜோதிகா படத்தை பார்த்துவிட்டு...தங்கள் மொட்டை மடியில் பல செடிகள் வளர்க்கிறார்கள்....இல்லை வளர்ப்பது போல் மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறார்கள்...இதனால் பல கட்டிடங்கள் சேதமாகின்றன....இப்படியே போனால் இன்னும் பத்து வருடங்களில் பல கட்டிடங்கள் விழுவது ஊர்ஜிதம்...எதற்கும் ஒரு இடம் பொருள் ஏவல் வேண்டும்...என் வீட்டுக்காரன் கச்சேரிக்கு போனான் என்று செய்யக்கூடாது...

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஜூலை-201819:52:42 IST Report Abuse

Manianகவர்னர் சொல்வது முற்றிலும் சரியே. பிரச்சினை என்னவென்றால் (1 ) மக்கள் கேளிக்கை, வெளியில் ஓடடல்களை உண்பது, போனவற்றிற்கு செலவு செய்வதுபோல் அதிக விலை உள்ள இயற்ற்கை உணவுகளை வாங்குவதில்லை (2 ) தண்ணீர் பர்றரக்குறையால் சாக்கடை தண்ணீரில் விளைந்து பச்சை பசேல் ஏன்னு இருக்கும் விலை குறைந்த கீரை, காய்கறிகளை (அதன் விளைவு மூலம் பற்றி தெறியாமல்) வாங்குகிறார்கள். (3 ) இயற்கை உரம் தயாரிக்க பொதுவாக யாரும் இடம் தரமாடார்கள். பினாமி நிலம் என்று மக்களின் பொது நிலங்களை அரசியல் வியாதிகள் படடா போடடு விற்றத்தால் தற்போது உரதாயாரிப்பு (பெரிய அளவில்) இடம் எங்கே? (4 ) இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் கிராமங்களை வழி காட்டிகள் இல்லை. கடையில் வாங்கி தெளிக்கும் உரம் இருக்கும்போது, இதை எல்லாம் யார் செய்வார்கள் என்ற சோம்பேறித்தனம் அதிகம். விவசாயிகளை திருத்துவது மிக கடினம். மேல்தட்டு மாக்கள் இயற்கை உரத்தில் விளைந்த பொருள்களை உண்ணுவதலாலேயே, அவர்கள் பிள்ளை அமெரிக்க பொய் பணக்காரார்கள் ஆகிறார்கள் என்று இரண்டு மூன்று சினிமாவில் காட்டினால் நாடே திருந்தும். சினிமா பொய்களை நம்பும் கிராமத்தார் 70 -80 % ஓடடை விற்பவர்கள் மாறினால்தான் இயற்கை உணவு தினசரி வாழ்வில் வரும். பன்வாரிலால் அதுத்துணை உசிரோடு இருப்பாரா?

Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
13-ஜூலை-201817:52:32 IST Report Abuse

g.s,rajanAgriculture is dying day by day in India ,India was an Agricultural country previously but not now,soon India will import all agricultural products, veges, groceries from abroad.This is going to happen dam sure with in few years. g.s.rajan, Chennai.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X