பதிவு செய்த நாள் :
திருமண செலவுகளை தெரிவிப்பதை
கட்டாயமாக்க சுப்ரீம் கோர்ட் யோசனை

புதுடில்லி : 'திருமண செலவுகளை, இருதரப்பினரும் வெளிப்படையாக தெரிவிப்பதை கட்டாயமாக்கினால், வரதட்சணை கொடுமை குறைய வாய்ப்புள்ளது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரதட்சணை கொடுமை,Court,Supreme Court,கோர்ட்,சுப்ரீம் கோர்ட்,நீதிமன்றம்,யோசனை


டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், விவாகரத்து வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், 'கணவர் வீட்டார், வரதட்சணை கேட்டு, என்னை கொடுமைப்படுத்துகின்றனர்' என,

தெரிவித்திருந்தார். ஆனால், அந்தப் பெண்ணின் கணவர் வீட்டார், இந்த குற்றச்சாட்டை மறுத்தனர்.

இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் கூறியதாவது: திருமணம் தொடர்பான பிரச்னைகளில், வரதட்சணை தான் முக்கிய பங்கு வகிக்கிறது. வரதட்சணை கொடுமையை குறைப்பதற்கான வழிகளை, நாம் தேட வேண்டும். திருமணச் செலவுகளை, இரு தரப்பினரும், திருமண பதிவு அதிகாரியிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகளால், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் சம்பவங்கள், எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளது. மேலும், திருமண செலவில் ஒரு பகுதியை, பெண்ணின் பெயரில், வங்கியில், 'டிபாசிட்' செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.

Advertisement

பிற்காலத்தில், பிரச்னைகள் ஏற்பட்டால், அதை சமாளிக்க, அந்த பெண்ணிற்கு, அந்தப் பணம் உதவியாக இருக்கும்.

இது தொடர்பாக, மத்திய அரசு, தன் கருத்தை தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில், நீதிமன்றத்துக்கு உதவி செய்யும்படி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
13-ஜூலை-201820:46:23 IST Report Abuse

sampath, kCourts should pass orders only based on the majority of public opinion and the views of individual should not be passed as rules and regulations

Rate this:
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
13-ஜூலை-201816:45:41 IST Report Abuse

Loganathan Kuttuvaபடித்து வேலையில் இருப்பவர்கள் சிலர் காதல் திருமணம்செய்து கொள்கிறார்கள்.இதை திருமண செலவு ஏற்படுவதில்லை வரதட்சணை பிறர்ச்சனையும் இல்லை.

Rate this:
Manian - Chennai,இந்தியா
13-ஜூலை-201819:35:44 IST Report Abuse

Manianஆனால் மனைவியின் வருமானத்தை வரதட்சினையாக வைத்து கொள்கிறார்கள் (விதி விலக்கு எத்தனை சதவிகிதம் என்று தெரியவில்லை)...

Rate this:
abdul rajak - trichy,இந்தியா
13-ஜூலை-201813:00:50 IST Report Abuse

abdul rajakதிருமணத்தில் பெண் மற்றும் அவரது வீட்டார் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் . எனவே மாப்பிள்ளை தான் பிற வீட்டு மண பெண் தன் வீட்டுக்கு வர , தச்சனை (மகர் ) குடுக்க வேண்டும் .

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X