பதிவு செய்த நாள் :
'ஹிந்து பாகிஸ்தான்' பேச்சு
சசி தரூருக்கு காங்., கண்டிப்பு

புதுடில்லி : 'பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஹிந்து பாகிஸ்தானை உருவாக்கிவிடுவர்' என, கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை, காங்., கண்டித்துள்ளது.

ஹிந்து பாகிஸ்தான்,பேச்சு,சசி தரூர்,காங்., கண்டிப்பு


மத்தியில், மன்மோகன் சிங் தலைமையில், காங்., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர், சசி தரூர். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: சகிப்புத் தன்மை இல்லாத மத்திய அரசு, புதிய அரசியல் சட்டத்தை உருவாக்குகிறது. இதனால், நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

ஹிந்து அரசை உருவாக்குவதிலும், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ள

சலுகைகளை பறிப்பதிலும் தான், தற்போதைய, மத்திய அரசின் சிந்தனை உள்ளது.

அடுத்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல் போன்ற தலைவர்களின் கனவை சீர்குலைத்து, நம் நாட்டை, 'ஹிந்து பாகிஸ்தானாக' மாற்றி விடுவர். இவ்வாறு சசிதரூர் பேசினார்.

சசி தரூரின் இந்த பேச்சுக்கு, பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்தது. 'பாகிஸ்தான் உருவாக, காங்கிரஸ் தான் காரணம். இந்தியாவில் வசிக்கும் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மனம் புண்படும்படி, காங்., தலைவர்கள் பேசுகின்றனர். 'இதற்காக காங்., தலைர் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, பா.ஜ., தரப்பில் கூறப்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்து, சசி தரூர் கூறியதாவது: ஹிந்து ராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பது, பா.ஜ.,வின் தாய் அமைப்பான, ஆர்.எஸ்.எஸ்.,சின் லட்சியம். பா.ஜ.,வின் முந்தைய அமைப்பான ஜனசங்கத்தின் தலைவராக இருந்த,

Advertisement

தீன்தயாள் உபாத்யாயாவின் கொள்கை மற்றும் சிந்தனைகளை, பா.ஜ.,வினர் பின்பற்ற வேண்டும் என, பிரதமர் மோடி கூறுகிறார்.

தீன்தயாள், இந்திய அரசியல் சட்டத்தை ஏற்காதவர். பா.ஜ.வினர், இந்தியா, ஹிந்து தேசமாக மாற்றப்பட வேண்டும் என, ஆசைப்படுகின்றனர்; இதை ஒரு போதும், பிரதமர் மோடி மறுத்தது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், 'பொது நிகழ்ச்சிகளில் பேசும் போது, மிகவும் கவனத்துடனும், கட்டுப்பாட்டுடனும் பேச வேண்டும்' என, சசிரூரை, காங்., மேலிடம் கண்டித்துள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
புதிய தமிழ்மைந்தன் - Dindigul India,இந்தியா
14-ஜூலை-201800:18:35 IST Report Abuse

புதிய தமிழ்மைந்தன்சசி தரூர் சொல்வது எல்லாம் கேட்க வேண்டியது இல்லை காரணம் அவன் மனைவியை கொன்ற கொலை கேசில் மாட்டிக் கொண்டு உள்ளான் எனவே என்ன பேசுகிறோம் என தெரியாமல் உளறுகிறார்

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-ஜூலை-201815:42:01 IST Report Abuse

இந்தியன் kumar1947 இல் இந்தியாவை பிரிக்கும் போதே பாக்கியஸ்தான் முஸ்லீம் நாடு என்றும் இந்தியா இந்து நாடு என்று அறிவித்திருக்க வேண்டும் நேரு செய்த தவறு காந்தி அவர்களுக்கு இந்தியாவை பிரிப்பதில் உடன்பாடு இல்லை .

Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
13-ஜூலை-201817:00:24 IST Report Abuse

Jaya Ramஅப்போது அவர் காதல் மயக்கத்தில் இருந்தார் எனவே அவர் இந்தியாவை ஹிந்து நாடு என்று அறிவிக்க தயங்கினார், மேலும் அவரின் மாப்பிளை ஓர் பார்சி இப்படி பலமதங்களின் கலப்பினால் தான் இந்த நாடு மத சார்பற்ற நாடு அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் நேருவுக்கு...

Rate this:
Snake Babu - Salem,இந்தியா
13-ஜூலை-201813:56:43 IST Report Abuse

Snake Babuயாரும் எந்த கடவுளும் யாருக்கும் சோறுபோடுவதில்லை, கடவுள் என்றால் உள்ளத்தை கடப்பவர், உள்ளத்தை கிடப்பவர்கள் வெளியில் நடப்பதில்லை அது உள்ளுக்குள் நடப்பது ஆகையால் வெளியில் இருந்து யாரும் கடவுள் அது உள்ளுக்குள் இருப்பது. அவரவர் உழைப்பில் அவரவர் உண்கிறார்கள்,

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X