பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
குடியரசு தின விழா: டிரம்பிற்கு அழைப்பு

புதுடில்லி: இந்திய குடியரசு தின விழாவில், தலைமை விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

குடியரசு தின விழா, டிரம்ப், அழைப்பு

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவுடன், மத்திய அரசுக்கு சிறப்பான நட்புறவு நிலவியது. ஆனால், தற்போதைய அதிபர், டொனால்டு டிரம்ப், இந்தியா உட்பட பல நாடுகளுடன் இணக்கமான உறவை பின்பற்றவில்லை.

அமெரிக்கா எதிர்ப்பு : ஈரானிடம் இருந்து, இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.'ஈரானிடம் இருந்து, எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக

பொருளாதார தடை விதிக்கப்படும்' என, அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.அதேபோல், ரஷ்யாவிடம் இருந்து, எஸ் - 400 ஏவுகணைகளை, இந்தியா வாங்குவதும், அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.இதனால், டொனால்டு டிரம்பின் முன்னுரிமை பட்டியலில், இந்தியா உள்ளதா என்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டில் நடக்கவுள்ள குடியரசு தின விழாவில், தலைமை விருந்தினராக பங்கேற்கும்படி, டொனால்டு டிரம்பிற்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.அதை தொடர்ந்து, அமெரிக்காவுடனான உறவை சுமுகப்படுத்துவதற்கு, பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு தரப்பில் எடுக்கப்பட்டு உள்ளன.


பரிசீலனை :

குடியரசு தின விழாவில், டிரம்ப் பங்கேற்பது பற்றிய உறுதியான தகவல்,அமெரிக்க அரசு தரப்பில் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த அழைப்பை, சாதகமான முறையில் அமெரிக்க அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.'மத்திய அரசின் அழைப்பை ஏற்று, டிரம்ப் இந்தியா வந்தால்,

Advertisement

2015ல், முந்தைய அதிபர் ஒபாமாவின் வருகையை விட, மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் விஷயமாக அது இருக்கும்' என,அதிகாரிகள் கூறுகின்றனர். குடியரசு தின விழா கொண்டாட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக, உலக தலைவர்கள் அடுத்தடுத்து பங்கேற்று வருகின்றனர். 2015ல், குடியரசு தின விழாவில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா பங்கேற்றார்.

எதிர்பார்ப்பு : கடந்த, 2016ல், பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹாலண்டேவும், 2017ல், அபுதாபி இளவரசர், முகம்மது பின் ஸயத் அல் நஹ்யானும், குடியரசு தின விழாக்களில் பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
14-ஜூலை-201818:36:03 IST Report Abuse

rsudarsan licஇவர் வர வேண்டிய அவசியம் என்ன? வெளியில போற ஓணானை எடுத்து காது குடைஞ்சா மாதிரி

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201808:59:06 IST Report Abuse

Srinivasan Kannaiyaநமக்கு முக்கியமாக விசா விஷயங்களை பேசி தீர்க்கவேண்டும்...

Rate this:
Palanisamy Sekar - Jurong-West,சிங்கப்பூர்
14-ஜூலை-201804:34:48 IST Report Abuse

Palanisamy Sekarகோமாளித்தனம் நிறைய எதிர்பார்க்கலாம். குடியரசு விழாவை எல்லோரும் தொலைக்காட்சி வழியாகத்தான் பார்க்க நேரிடும். ராணுவமும் போலீசும் மட்டுமே இந்த ஆட்சியாளர்களோடு காணப்படுவார்கள். பொதுமக்களுக்கு இடமிருக்காது. வலியவர்களை வலிய சென்று கூப்பிடுவது எதற்க்கோ?

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X