பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
பொருளாதாரத்தில் இந்தியா, பிரிட்டனை விஞ்சும்
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கணிப்பு

புதுடில்லி: ''அடுத்த ஆண்டு, சர்வதேச அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளில், பிரிட்டனை விஞ்சி, ஐந்தாவது இடத்திற்கு இந்தியா முன்னேறும்,'' என, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம், இந்தியா,பிரிட்டன்,அருண் ஜெட்லி

உலக நாடுகளின் கடந்தாண்டு பொருளாதார நிலவரம் குறித்த ஆய்வறிக்கையை, உலக வங்கி இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், இந்தியா, 2.59 லட்சம் கோடி டாலருடன், பிரான்சை விஞ்சி, ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.பிரிட்டன், 2.62 லட்சம் கோடி டாலருடன், ஐந்தாவது இடத்தில் உள்ளது.


இது குறித்து, அருண் ஜெட்லி முகநுாலில் கூறியுள்ளதாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம், மதிப்பீட்டின்படி தொடர்ந்தால், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில், 2019ல், இந்தியா, பிரிட்டனை விஞ்சி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறும்.எனினும், அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையும், சர்வதேச வர்த்தகப் போர் அபாயமும், நமக்கு சவால் விடுப்பவையாக இருக்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. அதனால், அடுத்த, 10 ஆண்டுகள், பொருளாதார விரிவாக்கத்தை நாம் காண முடியும்.


விருப்ப தேர்வு : ஏற்கனவே, சுலபமாக தொழில் துவங்கும் வசதி கொண்ட நாடுகளில், இந்தியா, குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறியுள்ளது. இதன் காரணமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பமான தேர்வாக, இந்தியா உள்ளது.இதை, கச்சா எண்ணெய் விலையேற்றம், சர்வதேச வர்த்தகப் போர் போன்ற சவால்களுக்கு மத்தியில், தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு, அனைத்து வளங்களை கிராமப்புறங்களும், அடித்தட்டு மக்களும் பெற முன்னுரிமை அளிக்கிறது.இத்துடன், திட்ட நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கும்போது, அடுத்த, 10 ஆண்டுகளில், கிராமப்புற மக்களின் மேம்பாடு, குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும் எனலாம்.


வறுமையை ஒழிப்போம் :

காங்., 1970 மற்றும் 1980களில், வலுவான கொள்கையின்றி, ஏழைகள் நலனுக்கு உண்மையாக செலவிடாமல், கவர்ச்சியான முழக்கங்களை எழுப்புவதில் தான், கவனம் செலுத்தியது.அவற்றுள் ஒன்றான, 1971ல் அறிவித்த, 'வறுமையை ஒழிப்போம்' என்ற கோஷம், நாட்டில் செல்வத்தையும், வளங்களையும் உருவாக்குவதற்கு பதிலாக, வறுமையை மீண்டும் அதிகரிக்கவே உதவியது.இந்த தவறான அணுகுமுறையால், ஏழை மக்களின் வாழ்வாதாரம் குறிப்பிடத்தக்க வகையில் உயராமல் போனது.

Advertisement

இதற்கு நேர்மாறாக, பிரதமர் மோடி, சொல்லிலும், செயலிலும் திடமான மனிதராக திகழ்கிறார்.அவர் அறிவித்த திட்டங்களும், நிர்ணயித்த கடுமையான இலக்குகளும், துவக்கத்தில் செயல்படுத்த முடியாத விஷயங்களாக தோன்றின. ஆனால், அவர், உண்மையான அக்கறையுடன் அவற்றை செயல்படுத்தி, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய் பெருகியுள்ளது : மத்திய அரசின், ஊரக மேம்பாட்டு திட்டங்களால், இன்று கிராமப்புற மக்களின் வருவாய் பெருகியுள்ளது. சமூக பாதுகாப்பு அதிகரித்துள்ளது. வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது. வேளாண் துறையில், அதிக வருவாய் கிடைக்கிறது. ஆரோக்கிய பராமரிப்பு வசதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசு பொறுப்பேற்றது முதல், பொருளாதார வளர்ச்சியின் பயன்கள், கிராமப்புற மக்களை சென்றடைவதற்காக பாடுபட்டு வருகிறது. அத்துடன், குறிப்பிடத்தக்க வகையில், புதிய நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்கவும், வறுமையில் இருந்து மக்களை மீட்கவும் உறுதி பூண்டுள்ளது!


Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
OUTSPOKEN - CHENNAI,இந்தியா
14-ஜூலை-201820:54:54 IST Report Abuse

OUTSPOKENமொதல்ல வறுமை, பசி, பட்டினி, வேலை இல்லாத தேசமா இந்தியா வ மாத்திட்டு பிறகு இந்த பெருமையை பேசுங்க

Rate this:
baskaran A.C - al Jubail ,சவுதி அரேபியா
14-ஜூலை-201819:29:08 IST Report Abuse

baskaran A.Cபொதுவாக சொல்கிறேன் மோடி மாதிரி ஒரு பிரதமரை இந்தியா கண்டதுண்டா அவரை புகழ வேண்டாம் குறைந்த பட்சம் இகழாமல் மட்டுமாவது இருங்கள்

Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14-ஜூலை-201818:27:58 IST Report Abuse

Mirthika Sathiamoorthiஉங்கள் கருத்தில் இருந்து நான் மறுபடுகிறேன் திரு அக்னி சிவா அவர்களே... இங்கு நாம் ,மோடியைக்குறை சொல்லவில்லை..நாங்கள் கேட்பதெல்லாம் இந்த வளர்ச்சியின் பலன் சமச்சீராக அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்திருக்கிறதா என்கிற கேள்வி..இதுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்..நாங்க வெறுமனே இந்த கேள்வியை கேக்கலை சில நியாயமான காரணங்கள் உள்ளன..நாம் ஒட்டுமொத்த GDP பேசுகிறோம். ஆனா இந்தியாவின் அதிகரித்த மக்கள்தொகையின் காரணமாக தனி மனித ஜி.டி.பி. குறியீடு மிக குறைவாக உள்ளது..இங்கு நான் குறிப்பிடும் மனித வளர்ச்சிக் குறியீடு என்பது தாய்-சேய் நலம், சராசரி கல்வி அறிவு, குழந்தைகள் ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டது. உலகின் ஆறாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியாவில் டிப்படை வசதிகளே இல்லாத நிலையும், சுகாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையும்காணப்படும் முரண் குறித்து எங்கள் கேள்வி.. இந்தியாவில் ஏறத்தாழ 35.7% குழந்தைகள் எடை குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதேபோல அவர்களில் 38.4% பேர் வயதுக்கேற்ற உயரமில்லாதவர்களாகக் காணப்படுகிறார்கள். இதை ஸ்சன்டெட்' வளர்ச்சி என்று கூறுவார்கள். 15 முதல் 49 வயதுடைய பெண்களில், 22.9% பேர் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையில்லாதவர்களாகவும், போதுமான உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர். 2016-ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் ரத்த சோகையாலும், உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் விகிதம் 15.6%. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாகவும், சர்க்கரை நோய், இதய நோய் போன்ற பாதிப்புகளை உடையவர்களாகவும் காணப்படுகிறார்கள்…. இந்த புள்ளி விவரம் நமக்கு சந்தோசமான ஒன்ற? மேலோட்டமான பொருளாதாரத்தில் ஒரு நாடு வளர்ச்சி அடைந்திருந்தாலும், அந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் ஊட்டச்சத்து இல்லாதவர்களாகவும், கல்வித்தரமற்றவர்களாகவும், வேலை வாய்ப்பு இல்லாதவர்களாகவும் இருந்தால், அந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிரந்தர வளர்ச்சியாக எப்படி இருக்கும்? குறிப்பாக, சுகாதார அளவிலான வளர்ச்சி காணப்படாவிட்டால் பொருளாதார வளர்ச்சி என்பது மாயை.. எதற்கெடுத்தாலும் இந்தியாவையும் மற்ற நாடுகளையும் ஒப்பிடுவதில் அர்த்தமில்லை..ஒரு சிறு உதாரணம் அப்படி நீங்க ஒப்பிட்டேங்கன்னா அங்கே வழங்கப்படும் பொதுமக்களுக்கான போக்குவரத்துக்கு வசதி நம்நாட்டில் நாம் குடுக்கிறோமா? கார் இருசக்கர வாகனம் வாங்கும் வசதி பெருகிவிட்டது..எதனால் இதெல்லாம் நாம் வாங்கினோம்..அரசு போக்குவரத்துக்கு துரையின் நிலை நம்மை இந்த நிலைக்கு தள்ளியுள்ளது.. மிக சிறந்த அரசு போக்குவரத்து சேவை இருந்தால் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்க நாம் கார் பைக் வாங்குவோம்? சமீபத்தில் சென்னையில் இருந்தபோது ஏன் மனதில் எழுந்த கேள்வி.. பல ஆயிரம் கோடி செலவு செய்து மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவந்தோம்..ஏன் அந்த பணத்தை கொண்டு சென்னையின் பேருந்துகளை தரமானதாக மாற்றும் முயற்சி செய்யவில்லை? நான் மெட்ரோ திட்டத்தை எதிர்க்க வில்லை..எனது ஆதங்கத்தை இங்கு காட்டுகிறேன்..அதே மாதிரி பல ரயில் நிலையங்களில் பல கோடி செலவு செய்து இலவச வைஃபை ஏற்படுத்திய நம்மால் அந்த பணத்தைகொண்டு ஏன் சுகாதாரமான சுத்தமான இலவச கழிவறைகளை ஏற்படுத்த முடியவில்லை? நமக்கு தேவை வைஃபையா கழிவறையா? உலகக் கோடீஸ்வரர்கள் பலர் இந்தியாவில் உருவாகி இருக்கிறார்கள் என்பதிலும், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்பதிலும் பெருமிதம் கொள்வதில் தவறில்லை. ஆனால், அந்தப் பொருளாதார வளர்ச்சி அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி, அடிப்படை சுகாதார, மருத்துவ, வேலைவாய்ப்பு, மனிதவள மேம்பாட்டு வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதா என்கிற கேள்வியை கேக்கிறோம். மறுபடியும் சொல்கிறேன் நாங்கள் மோடிக்கு எதிரானவர்கள் அல்ல...

Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X