கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
எட்டு வழி சாலை திட்ட வழக்கு
18ம் தேதி விரிவான விசாரணை

சென்னை: சென்னை - சேலம் எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை, வரும், 18ம் தேதிக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

எட்டு வழி சாலை ,வழக்கு, விசாரணை

பசுமை வழி சாலை திட்டத்துக்கு, நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், தர்மபுரி மாவட்டம், பள்ளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், மனு தாக்கல் செய்தார்.திட்டத்தை அமல்படுத்தும் முன், நிபுணர்கள் குழுவை நியமித்து, சுற்றுச்சூழல் பாதிப்பு ஆய்வை மேற்கொள்ளக் கோரி, வழக்கறிஞர், ஏ.பி.சூரியபிரகாசம், பொது நல மனு தாக்கல் செய்தார். 'பூவுலகின்

நண்பர்கள்' அமைப்பின் நிர்வாகி, சுந்தரராஜன், சுரேஷ்குமார் ஆகியோரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், திட்ட அமலாக்கப் பிரிவு இயக்குனர், பி.டி.மோகன் சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன் பதில் மனு தாக்கல் செய்தார்.நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனு தவிர்த்து, மற்ற மூன்று மனுக்களும், நீதிபதிகள், டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தன. மத்திய அரசு சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், ஜி.ராஜகோபால், உதவி சொலிசிட்டர் ஜெனரல், ஜி.கார்த்திகேயன், மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர்கள் வி.பாலு, ராதாகிருஷ்ணன், அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண், சிறப்பு பிளீடர், திருமாறன் ஆஜராகினர்.

அப்போது, மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி சார்பில், வழக்கறிஞர் கே.சக்திவேல் ஆஜராகி, ''எங்கள் மனு, விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை; ஆனால், டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணையில் உள்ள வழக்குகளுடன், எங்கள்

Advertisement

மனுவையும் இணைத்து, நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவு பிறப்பித்தார்,'' என்றார்.அதற்கு, நீதிபதிகள், 'மூன்று மனுக்கள் தான், விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன. அதில், உங்கள் மனு இல்லை. அதையும் சேர்த்து விசாரிப்பதற்கு, மனுவை பட்டியலிட, பதிவுத் துறைக்கு உத்தரவிடுகிறோம்' என்றனர்.
உடனே, வழக்கறிஞர் சக்திவேல், ''நிலம் கையகப்படுத்துவதற்கு முன், சுற்றுச்சூழல் பாதிப்புக்கான ஆய்வை நடத்த வேண்டும் என்பதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உள்ளது,'' எனக் கூறி, அதன் நகலை தாக்கல் செய்தார்.'வழக்கில், விரிவான விசாரணையை, வரும், 18ம் தேதி வைத்துக் கொள்ளலாம்' என, நீதிபதிகள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Ganesan - Chennai,இந்தியா
14-ஜூலை-201809:02:13 IST Report Abuse

Narayanan Ganesanஉயர் மட்ட சாலை அமைக்க யாரும் எதிர்ப்பு கூற வில்லை.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஜூலை-201809:01:50 IST Report Abuse

Srinivasan Kannaiyaவழக்குதானே... சாலைகள் நீதிமன்ற பாதுகாப்புடன் போட்டு முடியற வரைக்கும் நடக்கும்...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
14-ஜூலை-201807:47:32 IST Report Abuse

ஆரூர் ரங்பழைய சேலம் சென்னை சாலைகளை விரிவாக்க நாற்பதாயிரம் வீடுகள் வழிபாட்டுத்தலங்கள் கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இடிக்க வேண்டியிருக்கும் புதிய சாலையை எதிர்ப்பவர்கள் அந்த 40000 பேரிடமும் அவற்றில் பணிரிபவர்களிடமும் அனுமதி வாங்கித் தந்துவிட்டு போராடலாம். ஐந்து லட்சம் பேர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்கப்படுவர் . அவர்களுக்கு மாற்றுவழி செய்துவிட்டுத்தான் விரிவாக்கம் செய்ய வேண்டுமென்றால் நஷ்டஈடு மட்டுமே ஐம்பதாயிரம் கோடியைத்தாண்டும் .பழைய சாலைகளையொட்டியுள்ள அரசு நிலங்களை எடுக்கப்போனால் ஆக்கிரமித்துள்ளவர்கள் நிச்சயம் விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு ஒரு பைசா நட்டயீடும் கிடைக்காது . ஆகமொத்தம் நாடு முன்னேறவிடக்கூடாது என்பதற்காகத்தான் போராட்டமே

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X