சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஸ்டெர்லைட்' ஆலையை மூட வெளிநாட்டு நிதி
தலைமை செயல் அதிகாரி, 'பகீர்' தகவல்

சென்னை: ''துாத்துக்குடியில் இயங்கும் மற்ற நிறுவனங்களிலிருந்து வெளியேறும், 'சல்பர் டை ஆக்ஸைடு' அளவை விட, 'ஸ்டெர்லைட்' ஆலையிலிருந்து வெளியேறும் அளவு, 1 சதவீதத்துக்கும் குறைவு,'' என, ஸ்டெர்லைட் நிறுவன தலைமை செயல் அதிகாரி, ராம்நாத் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட், ஆலை,வெளிநாட்டு நிதி


அவர் அளித்த பேட்டி:

ஸ்டெர்லைட் ஆலை குறித்து, பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அதில், எந்த உண்மையும் இல்லை. ஐந்து ஆண்டுகளாக, ஸ்டெர்லைட் ஆலையில், எந்தப் பிரச்னையும் இல்லை. சில மாதங்களாக, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, பல்வேறு பிரசாரங்கள் செய்யப்படுகின்றன.துாத்துக்குடி மக்களோடு மக்களாக தான், ஸ்டெர்லைட் ஆலை உள்ளது. துாத்துக்குடி மக்களையும், ஸ்டெர்லைட் ஆலையைப் பற்றி தெரியாத வெளிநபர்கள், வேண்டுமென்றே, எங்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்தினர்.தாமிர உற்பத்தியின்போது கிடைக்கும், சல்பர் டை ஆக்ஸைடை, 'சல்பியூரிக்' அமிலமாக மாற்றுகிறோம். அப்போது, ஐரோப்பிய நாடுகளின் விதிப்படி, 4 சதவீதம் வரை வெளியேற்றலாம். மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அளவுகோல், 2 சதவீதமாக உள்ளது.


ஆனால், ஸ்டெர்லைட்டை பொறுத்தவரை, 1 சதவீதம் மட்டுமே வெளியேற்ற வேண்டும் என, தமிழக அரசு நிபந்தனை விதித்து உள்ளது. ஆனால், அதற்கும் குறைவாகவே, சல்பர்டை ஆக்ஸைடு வெளியேறுகிறது. நிலக்கரியைப் பயன்படுத்தி, துாத்துக்குடியில் உற்பத்தி செய்யும் மின் நிலையங்களில், 50 சதவீதமும்; தனியார் மின் நிலையங்களில், 45 சதவீதமும்; ஸ்டெர்லைட் மின் நிலையத்திலிருந்து, 4 சதவீதமும், ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து, 1 சதவீதமும் வெளியேற்றப்படுகிறது.

அனல் மின் நிலையங்களுக்கு, சல்பர் டை ஆக்ஸைடை, எந்த அளவுக்கு வெளியேற்ற வேண்டும் என, எந்த வரையறையும் இல்லை. அவர்கள் தான் அதிகளவில், சல்பர் டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம், மின் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது. வரும், 2020ம் ஆண்டுக்குள், சல்பர் டை ஆக்ஸைடை வெளியேற்றும் அளவை நிர்ணயிக்கவும் உத்தரவிட்டுள்ளது.மேலும், புற்றுநோய் பாதிப்பில், தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களில், துாத்துக்குடியில் உள்ள பெண்கள், 25வது இடத்திலும், ஆண்கள், 15வது இடத்திலும் உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை தான் புற்றுநோய்க்கு காரணம் என்பது, முற்றிலும் தவறான தகவல்.


ஸ்டெர்லைட் ஆலையால், நிலத்தடி நீர், காற்று மாசுபாடு ஆகியவை ஏற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். இது, உண்மைக்குப் புறம்பான தகவல்கள். மாசு கட்டுப்பாடு வாரியம், மாதந்தோறும், ஸ்டெர்லைட் ஆலைக்கு வந்து, நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து, அறிக்கை தருகிறது.இந்த ஆய்வு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கப்பட்டுள்ளதுமேலும், மாசு கட்டுப்பாடு வாரியத்திலிருந்து, .

Advertisement

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியாகும், சல்பர் டை ஆக்ஸைடு அளவையும் அறிந்து கொள்ள முடியும்.இதுபோன்று, மாசு ஏற்படுவதைக் குறைக்க, பல கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு நவீன கருவிகள், ஆலையில் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, தாமிரபரணி ஆற்றிலிருந்து, 30 சதவீதம் தண்ணீர் மட்டுமே எடுக்கிறோம்; 70 சதவீத தண்ணீரை, மறு சுழற்சி முறையில் பயன்படுத்துகிறோம். எங்கள் ஆலையை மூடியதால், தற்போது, தாமிரத்தின் விலை உயர்ந்துள்ளது. மேலும், இந்த ஆலையை மூடிவிட்டு, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்ற நோக்கில், பலர் செயல்படுகின்றனர். இதற்காக, வெளிநாடுகளிலிருந்து, எங்களுக்கு எதிராக செயல்பட, நிதி உதவி கிடைக்கிறது. இதற்கு, அரசு ஒத்துழைக்கக்கூடாது. தற்போது, நேரடியாக, 10 ஆயிரம் ஊழியர்களும், மறைமுகமாக, 30 ஆயிரம் பேரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதர நிறுவனங்கள், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எங்கள் நிறுவனத்தை சுற்றி இருந்த கடைகள் மூடப்பட்டுள்ளன. எங்கள் தரப்பில், தவறுகள் இல்லை என்பதை நிரூபிக்க, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில், வழக்கு தொடர்ந்துள்ளோம். எங்களுக்கு சாதமாக தீர்ப்பு வரும் என, நம்பிக்கையுடன் உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (74)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Kannan - Yaadum Voorae,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-201816:36:05 IST Report Abuse

Dr KannanWell, some of the readers commented on my posting, to provide with research evidence of disastrous health hazard caused by Sterlite. Please note that Globally copper smelters (Sterlite) is classified as the dangerous and number one disastrous industries. Here below is the source and hope you will all get fully informed. Source: “Health Status and Epidemiological Study Around 5 km Radius of Sterlite Industries (India) Limited, Thoothukudi.” Department of Community Medicine, Tirunelveli Medical College, 2008: The findings of the study are revealing: 1. Iron content in the groundwater in Kumareddiapuram and Therku Veerapandiapuram, the site of the ongoing protests, were 17 and 20 times higher than permissible levels prescribed by the Bureau of Indian Standards for drinking water. Chronic exposure to iron through drinking water could result in chronic fatigue, joint pain, and abdominal pain. 2. At 13.9%, respiratory diseases were significantly more prevalent in the areas surrounding the factory than in areas without industry and this was much higher compared to the state average. The incidence of asthmatic bronchitis is 2.8%, more than double the state average of 1.29%. Bronchitis is an inflammation of the airways lining caused by long-term exposure to environmental irritants such as tobacco smoke, dust or chemicals. Asthma is a condition where the muscles around the airways get tight resulting in the narrowing of the airways. Asthmatic bronchitis is a condition where asthma and bronchitis occur together. The report finds that “The increased prevalence rate of asthma and respiratory infections are due to the air pollution caused by industries and automobiles in the area.” 3. The study also found that there were more people suffering from Ear, Nose, Throat (ENT) disorders near the factory. Among the ENT diseases, pharyngitis and sinusitis were very high. “Climatic conditions and atmospheric pollution could be the cause for the prevalence of ENT morbidity,” the report concluded. 4. Myalgia, or general body pain, was another widely reported symptom in the study area closer to the factory. 5. “Women in the [study] area had more menstrual disorders, like menorrhagiae and dysmenorrhagiae. . .it needs an in-depth study,” the report stated. This study has disturbing findings, since the high incidence of respiratory diseases found in 2007 was at a time when Sterlite was running at less than half its current production levels. Respiratory diseases are an indicator of air pollution which has been identified as the “world's largest single environmental health risk” by the World Health Organisation. WHO reports that in 2012, around 7 million people died - one in eight global deaths - as a result of air pollution exposure.

Rate this:
Darmavan - Chennai,இந்தியா
16-ஜூலை-201817:38:56 IST Report Abuse

Darmavanyou have nowhere gave specific coplaint abut sterlite.and asthmais due to pollution of industry means which industry and automobiles.can yu give the share of thesetwo.if so which is major.can you stop automobile polution inth same way..you have nowher given which of the polluting atter from sterlite in specific is giving this and how much.I an extend this to all points yu have raised.your comments and reports are very general in nature and not specific to sterlite.just like other anti national forces you want to misgide with this report w/o any quantifiable facts adversly affecting the air by sterlite.Many said it is causing cancer your report didnot mention that.so any report must be specific to sterlite with quantitative facts to prove sterlite at fault..people living around say are not affected by any disease.this type of report misleads.also whether these pollution problems are surmoun you report didnot explain. Do not spoil the livelyhood of thousands by this generalised report.. . ...

Rate this:
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
14-ஜூலை-201821:03:03 IST Report Abuse

ஆ.தவமணி,   சிகரெட் புகைப்பதால், புகைப்பவருக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ளவர்களுக்கும் புற்று நோய் ஏற்படுகிறது .. சிகரெட் ஆலைகளை மூடச்சொல்லி ஏன் யாரும் போராடவில்லை.. ஸ்டெரிலைட் ஆலை தாமிரம் தயாரித்து மின்சாரம் உள்ளிட்ட இதர தொழில்களின் வளர்ச்சிக்கு உதவியது. ஆனால், இந்த சிகரெட் தயாரிப்பது புற்றுநோய் வளர்ச்சிக்கு மட்டுமின்றி வேறு எந்த தொழிலின் வளர்ச்சிக்கு உதவுகிறது ?... சிகரெட் குத்தகை கோமான் வைகோ. அண்ட் குழுவினர்கள் ஏன்.. புற்றுநோயை அபரிமிதமாக உருவாக்கும் இந்த சிகரெட் ஆலைகளை மூடச்சொல்லியும், அவற்றை தமிழ்நாட்டில் விற்பனை செய்யக்கூடாது என்றும் போராடவில்லை ?

Rate this:
Anandan - chennai,இந்தியா
15-ஜூலை-201800:45:54 IST Report Abuse

Anandanஅட மடசாம்பிராணி. ...

Rate this:
jagan - Chennai,இந்தியா
14-ஜூலை-201818:50:24 IST Report Abuse

jaganகீதா ஜீவன் எங்கே என்றால், மிஷநரி வேலை நன்றாக முடித்தற்காக வெளிநாடு உல்லாச சுற்றுலா (காசு எங்கிருந்து வந்திருக்கும் என்று இப்போ எல்லாருக்கும் தெரியும்) சென்றிருக்கினார் ...லாஸ் வேகாஸ் என்று கேள்வி

Rate this:
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
14-ஜூலை-201821:00:31 IST Report Abuse

Giridharan Srinivasanகுற்றம் புரிந்த கீதா ஜீவன் பயத்தில் வெளி நாடு சென்று இருக்கிறார். கண்டிப்பாக அவள் இந்தியா திரும்பும் பொழுது கைது செய்யப் பட்டு உள்ளெ தள்ளப்படுவாள். மற்றோரு விஷயம் அவள் அவ்வாறு போலீஸ் பிடியில் சிக்கும் பொழுது ஸ்டாலின், இரண்டு ஜி வழக்கில் உள்ள கனிமொழி, திருமாவளவன், ஜாமீனில் உள்ள வேல்முருகன், கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ள வைகோ, தேடப்படும் குற்றவாளி சீமான், தீவிரவாதி முத்தரசன், ஜாமீனில் கேட்டு உள்ள பாரதிராஜா, வைரமுத்து,,.. யாரும் அவளுக்கு வக்காலத்து வாங்கமாட்டார்கள். ஏன் என்றால் இந்த விஷமிகளும் கடும் பயத்தில் உள்ளனர், மேலும் இவர்களும் எப்பொழுது வேண்டுமானாலும் நிரந்தரமாக சிறைக்கு செல்லலாம் என்ற பயத்தில் உள்ளனர். இவர்கள் எல்லாம் தனி நபர் சுதந்திரம் என்ற போர்வையில் செய்த அராஜக செயல்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதன் பிறகு தமிழகம் அமைதி பூங்காவாக கண்டிப்பாக மாறும். ...

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X