பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜெ.,சிகிச்சை அறையில் விசாரணை கமிஷன் ஆய்வு

சென்னை: சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அறையில், விசாரணை கமிஷன் வழக்கறிஞர்கள், வரும், 29ல், ஆய்வு செய்ய உள்ளனர்.


ஜெயலலிதா, சிகிச்சை, அறை, விசாரணை கமிஷன், ஆய்வு

இதற்கு, நீதிபதி ஆறுமுகசாமி அனுமதி அளித்து உள்ளார்.ஜெ., மரணம் குறித்து, நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை கமிஷன் சார்பில், வழக்கறிஞர்கள், பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், ஆஜராகி வருகின்றனர். அவர்கள், அப்பல்லோ மருத்துவமனையில், ஜெ., தங்கியிருந்த அறையில், ஆய்வு மேற்கொள்ள, அனுமதி கோரி, விசாரணை கமிஷனில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, ஜூலை, 29ல், ஆய்வு நடத்த அனுமதி அளித்து, நேற்று உத்தரவிட்டார். அவரது உத்தரவின்படி, வழக்கறிஞர்கள், பார்த்தசாரதி, நிரஞ்சன் ஆகியோர், 29ம் தேதி, அப்பல்லோ மருத்துவமனையில், பார்வையாளர்கள் நேரம் முடிந்த பின், இரவு, 7:00 மணியில்

இருந்து, 7:45 மணி வரை, ஆய்வு நடத்த, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அவர்களுடன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் இருவர் செல்வர். மருத்துவமனையில், ஜெ., தங்கி சிகிச்சை பெற்ற அறைகள்; உடல் பதப்படுத்தப்பட்ட அறை; மருத்துவக் குழு தங்கியிருந்த அறை; அதிகாரிகள் தங்கிய அறை; சசிகலா தங்கியிருந்த அறை; அமைச்சர்கள் தங்கிய அறை ஆகியவற்றில், ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

'நோயாளிகளுக்கு தேவையற்ற தொந்தரவு ஏற்படுவதை தவிர்க்க, ஆய்வின்போது, அப்பல்லோ டாக்டர்களிடமோ, நிர்வாகத்திடமோ, எவ்வித கேள்வியும் எழுப்பக் கூடாது' என, நீதிபதி தெரிவித்துஉள்ளார்.மேலும், ஜெ., அனுமதிக்கப்பட்டிருந்த அறை எண், 2008ல், ஆய்வு செய்யப்படுவதால், வருவாய் இழப்பு ஏற்படும் என, மருத்துவமனை கருதினால், இழப்பீடு தர, கமிஷன் தயாராக உள்ளது என்றும், அப்பல்லோவுக்கு உத்தரவாதம் தரப்பட்டுள்ளது.எந்த காரணத்தை கொண்டும், ஆய்வு நேரமும், தேதியும் மாற்றம் செய்யப்படாது. ஜெ.,க்கு உணவு தயாரிக்கப்பட்ட அறையை, வெளிப்புறமிருந்தபடி ஆய்வு செய்வர். மேலும், வழக்கறிஞர்களுடன், பத்திரிகையாளர் சார்பில், ஒரு புகைப்படக்காரர் அனுமதிக்கப்படுவார். அவர், 10 புகைப்படங்கள் வரை எடுக்க, அனுமதி அளிக்கப்படும் என்றும், நீதிபதி தெரிவித்துஉள்ளார்.

Advertisement


அப்பல்லோ டாக்டர் ஆஜர் :

விசாரணை கமிஷனில், நேற்று அப்பல்லோ டாக்டர், பத்மா, நர்ஸ், மகேஸ்வரி ஆகியோர் ஆஜராகினர். நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் கேட்ட கேள்விகளுக்கு, அவர்கள் பதில் அளித்தனர்.அடுத்த கட்டமாக, ஜூலை, 16ல், ஆம்புலன்ஸ் டிரைவர், சுரேஷ்குமார், போயஸ் கார்டன் முன்னாள் ஊழியர், ஞானசேகரன்; 17ம் தேதி, நீரிழிவு நோய் சிகிச்சை டாக்டர் வெங்கட்ராமன், அப்பல்லோ மருத்துவமனை ஆவண காப்பக மேலாளர் கோவிந்தராஜன் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.ஜூலை, 18ல், ஆடிட்டர் குருமூர்த்தி, அப்பல்லோ மருத்துவமனை நர்ஸ் காயத்ரி விஜயன்; 19ல், நர்ஸ் சாமூண்டிஸ்வரி ஆகியோர் ஆஜராகின்றனர். 20ம் தேதி, குறுக்கு விசாரணைக்கு, ஜெ., உதவியாளர், பூங்குன்றன், சசி உதவியாளர், கார்த்திகேயன் ஆகியோரும், மறு விசாரணைக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ராமலிங்கமும் ஆஜராகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanatha Jagannathan - puducherry,இந்தியா
14-ஜூலை-201812:47:56 IST Report Abuse

Devanatha Jagannathanஜேயா போட்ட செருப்பு கிடைத்தால் மன்னார்குடி கும்பலையும் இப்போ இருக்கிற தலைவர்களையும் அடிக்கலாம்.

Rate this:
raghavan - Srirangam, Trichy,இந்தியா
14-ஜூலை-201811:18:10 IST Report Abuse

raghavanஅறையை ஆராய்ந்து என்னத்த தெரிய போவுது, இதற்கு அந்த அறையை கூட்டி பெருக்கிய ஆயாவையாவது நாலு கேள்வி கேட்கலாம், இதுல சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் இருவர் கூடவே செல்வார்களாம். அடுத்து, போயஸ் தோட்டத்துக்குள், ராத்திரி பனிரெண்டு மணிக்கு ஒரு நாற்காலியில் உட்கார்ந்து அம்மாஜியின் ஆவியோடு பேச கூட முயல்வார்கள் போல் இருக்கிறது..

Rate this:
14-ஜூலை-201809:11:13 IST Report Abuse

ருத்ராகாமரா செயல்படாததாய் வைக்கப்பட்டதா வைக்கவே இல்லையா (சொல்படி)இதெல்லாம் எப்படி தெரிந்து கொள்ளமுடியும் தடயங்களை விட்டு செல்ல யாரும் ........இல்லையே. தாமதமாக எல்லாம் நடக்கிறதே . வேதனை.

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X