மராமத்து இல்லாமல் மரங்களால் சூழ்ந்த ஊரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மராமத்து இல்லாமல் மரங்களால் சூழ்ந்த ஊரணி

Added : ஜூலை 14, 2018

கமுதி, கமுதி அருகே பேரையூர் கொல்லங்குளம் விலக்கு ரோட்டில் குடிநீர் பயன்பாட்டிற்காக உள்ள ஊரணியில் 6 ஆண்டுகளாக தண்ணீர் வரத்து இல்லாததால், ஊரணி மராமத்து இல்லாமல் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, காடு போல் காட்சியளிக்கிறது.மழை பெய்தாலும் வரத்து கால்வாய் வழியாக தண்ணீர் வந்து, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஊரணியின் மைய பகுதியில் சாய்ந்து விழும் நிலையில் மின்கம்பம் உள்ளதால், ஊரணியில் தேங்கிய மழைநீரை பயன்படுத்த மக்களிடையே அச்சம் ஏற்பட்டுஉள்ளது. குடிநீர் ஊரணியை மராமத்து செய்துமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை தவிர்க்க மின்கம்பத்தை அகற்றிட மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X