சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரவு சோதனையில் சிக்கிய ஏழு பேர்

Added : ஜூலை 14, 2018
Advertisement

சிவகங்கை, சிவகங்கை மஜீத்ரோட்டைச் சேர்ந்தவர் மணி மகன் அஜித்குமார்,23. அவரை நேற்றுமுன்தினம் இரவு ஒரு கும்பல் கடத்தி வாணியங்குடி பகுதியில் தாக்கியது. தப்பிய அவர், சிவகங்கை போலீசாரிடம் 'தன்னை சிலர் கடத்தி சென்று தாக்கியதாக' அலைபேசியில் தெரிவித்தார். அப்போது இரவு சோதனையில் இருந்த ஜெயச்சந்திரன் எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் அழகர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கிருந்த சிவகங்கை பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி, சங்கர், சூர்யா, புவனேஸ்வர், சண்முகம், ராஜ்குமார், பால்பாண்டி ஆகிய 7 பேரை பிடித்தனர்.விசாரணையில், முன்விரோதத்தில் கடத்தி சென்று ஜாதியை சொல்லி தாக்கியது தெரியவந்தது. அவர்கள் ஏழு பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் தங்கப்பாண்டியனிடம் இருந்த 1.25 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X