சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுக்குள் நடைபயணம் : 80 மாணவர்கள் பரிதாபம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (7)
Share
Advertisement
சிவகங்கை: சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் பஸ் வசதி இல்லாததால் 80 மாணவர்கள் தினமும் 4 கி.மீ., கருவேலம் காட்டுப்பகுதிக்குள் நடந்து, பள்ளிக்குச் செல்கின்றனர்.மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படிக்கின்றனர். எண்பது மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை
காட்டுக்குள் நடைபயணம் : 80 மாணவர்கள் பரிதாபம்

சிவகங்கை: சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் பஸ் வசதி இல்லாததால் 80 மாணவர்கள் தினமும் 4 கி.மீ., கருவேலம் காட்டுப்பகுதிக்குள் நடந்து, பள்ளிக்குச் செல்கின்றனர்.

மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படிக்கின்றனர். எண்பது மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். நான்கு கி.மீ., ல் உள்ள அக்கிராமத்திற்கு வலையராதினிப்பட்டியில் இருந்து சாலை மற்றும் பஸ் வசதி இல்லை. இதனால் தினமும் கண்மாய் கரை, கருவேலம் காட்டுப் பகுதியில் நடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து கிராம மக்கள் அமைச்சர், அதிகாரி என, மாறி, மாறி 100 மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அழகர் கூறியதாவது: பஸ் வசதி இல்லாததால் எங்கள் கிராமம் தனித்தீவாக உள்ளது. மாணவர்கள் காலை, மாலை தலா 4 கி.மீ., நடப்பதால் சோர்வடைகின்றனர். அருகே கீழப்பூங்குடி, திருமலைக்கு பஸ்கள் வருகின்றன. அவற்றை எங்கள் கிராமம் வரை நீட்டிக்கலாம். மாணவர்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் வெளியூர்களுக்கு வேலை செல்ல தினமும் நடக்க வேண்டியுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
15-ஜூலை-201800:03:49 IST Report Abuse
Mani . V இன்னும் கொஞ்ச காலம் பொறுத்துக் கொள்ளுங்கள் மாணவச் செல்வங்களே. சென்னை - சேலம் எட்டு வழிச் சாலைப் பணி முடிந்தவுடன் உங்கள் பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
15-ஜூலை-201806:51:08 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்அந்த எட்டு அழிச்சாலைக்காக ஊர் மக்கள் பத்து வருஷம் போராடி, அரும்பாடுபட்டு, மல்லுக்கட்டி கட்டி முடித்து புதுக்கருக்கு கலையாமல் இருக்கும் அரசு பள்ளிக்கூடத்தை திறக்கும் முன்பே இடிக்க போறாங்களே, அந்த பள்ளிக்கூடத்துக்கு போங்கன்னு சொல்லிடலாமா?...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201820:18:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பாருக்குள்ளே நல்ல நாடு.. எங்கள் பாரத நாடு.. பசுங்காட்டை அழிச்சு, விவசாய நிலத்தை அழிச்சி போடுவோம் 10,000 கோடியில் சாலை.. பள்ளிக்குழந்தைகள், முட்பாதை வழி செல்வதை கைகொட்டி பாப்போம் வேடிக்கை..
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-ஜூலை-201820:15:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் என்ன இது பஸ்சுக்காக எதுக்கு இவர்கள் அலையனும். ஒரு ஹெலிகாப்டரை எடுத்து சேலம் வந்துட்டோமுன்னா, எட்டு வழி சாலை வழியா சென்னைக்கே சென்று படிச்சிட்டு சாயந்தரம் வீட்டுக்கு வந்துடலாம். வளர்ச்சி பத்தி இன்னும் தெரியாத காட்டுப்பசங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X