காட்டுக்குள் நடைபயணம் : 80 மாணவர்கள் பரிதாபம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காட்டுக்குள் நடைபயணம் : 80 மாணவர்கள் பரிதாபம்

Added : ஜூலை 14, 2018 | கருத்துகள் (7)
Share
சிவகங்கை: சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் பஸ் வசதி இல்லாததால் 80 மாணவர்கள் தினமும் 4 கி.மீ., கருவேலம் காட்டுப்பகுதிக்குள் நடந்து, பள்ளிக்குச் செல்கின்றனர்.மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படிக்கின்றனர். எண்பது மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை
காட்டுக்குள் நடைபயணம் : 80 மாணவர்கள் பரிதாபம்

சிவகங்கை: சிவகங்கை அருகே மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் பஸ் வசதி இல்லாததால் 80 மாணவர்கள் தினமும் 4 கி.மீ., கருவேலம் காட்டுப்பகுதிக்குள் நடந்து, பள்ளிக்குச் செல்கின்றனர்.

மேலப்பூங்குடி ஊராட்சி வலையராதினிப்பட்டியில் 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 40 மாணவர்கள் படிக்கின்றனர். எண்பது மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். நான்கு கி.மீ., ல் உள்ள அக்கிராமத்திற்கு வலையராதினிப்பட்டியில் இருந்து சாலை மற்றும் பஸ் வசதி இல்லை. இதனால் தினமும் கண்மாய் கரை, கருவேலம் காட்டுப் பகுதியில் நடந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர். சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து கிராம மக்கள் அமைச்சர், அதிகாரி என, மாறி, மாறி 100 மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. அழகர் கூறியதாவது: பஸ் வசதி இல்லாததால் எங்கள் கிராமம் தனித்தீவாக உள்ளது. மாணவர்கள் காலை, மாலை தலா 4 கி.மீ., நடப்பதால் சோர்வடைகின்றனர். அருகே கீழப்பூங்குடி, திருமலைக்கு பஸ்கள் வருகின்றன. அவற்றை எங்கள் கிராமம் வரை நீட்டிக்கலாம். மாணவர்கள் மட்டுமின்றி தொழிலாளர்களும் வெளியூர்களுக்கு வேலை செல்ல தினமும் நடக்க வேண்டியுள்ளது, என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X