இளையான்குடி, இளையான்குடி அருகே குமாரகுறிச்சியில் அனுமதியின்றி திடீரென திறக்கப்பட்ட தேவர் சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.இளையான்குடி-- பரமக்குடி மெயின் ரோட்டில் உள்ள குமாரகுறிச்சியில், கடந்த 1987ல் தேவர்சிலை வைக்கப்பட்டது.நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சிலையை வருவாய்த்துறையும், போலீசாரும் அனுமதி பெற்று வைக்க வேண்டும் என வலியுறுத்தி சிலையை அப்போதே மூடி வைத்தனர். பல ஆண்டுகளாக மூடிவைக்கப்பட்ட சிலையை நேற்று முன்தினம் நள்ளிரவு, புதிதாக பெயின்ட் அடித்து கிராமத்தினர் திறந்து வைத்தனர். அனுமதியின்றி சிலை திறக்கப்பட்டதால் குமாரகுறிச்சியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.தாசில்தார் கண்ணதாசன் தலைமையில், சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அனுமதி பெறும் வரையிலும், 24 மணிநேரத்தில் பழையபடி சிலையை மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE