வீணாகுது திடக்கழிவு மேலாண்மை  திட்ட நிதி அக்கறை இல்லையே பொது மக்களின் பொறுப்பின்மையால் தொய்வு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வீணாகுது திடக்கழிவு மேலாண்மை  திட்ட நிதி அக்கறை இல்லையே பொது மக்களின் பொறுப்பின்மையால் தொய்வு

Added : ஜூலை 14, 2018

ராஜபாளையம், குப்பையை தரம் பிரிக்க ரூ. கோடிக்கணக்கில் செலவழித்தும் வீடு வீடாக சேகரித்த குப்பையை தரம் பிரித்து கிடங்கிற்குஎடுத்து செல்ல முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.பெருகி வரும் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்தி தீர்வு காண 2015ல் 'துாய்மை பாரதம்' திட்டத்தை மத்திய அரசு அறிமுக படுத்தி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கழிவுப்பொருட்களை தரம் பிரித்து உரம்தயாரித்தல், மறு சுழற்சிக்கு பயன்படுத்தலாம். இதற்காக வீடு வீடாக சென்று குப்பைசேகரிக்கப்பட்டு கிடங்கில் தரம் பிரிக்கப்படுகின்றன.இப்பணிகளை கண்காணிப்பதற்காக துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொது மக்கள் ஒத்துழைப்பின்மையால் பிரித்தெடுக்கும் பணியில் தொய்வு ஏற்படுகிறது.பொது மக்களும் போதிய விழிப்புணர்வு இன்றி அனைத்து கழிவுகளையும்ஒரு சேர கலந்து குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்களிடம் தருகின்றனர்.இதனால் இவர்களின் பணி தாமதமாகி வருவதுடன் ஒதுக்கப்பட்டரூ.கோடிக்கணக்கான நிதியும் வீணாகி வருகிறது.
ஒத்துழைத்தால் வெற்றிசிவப்பு,பச்சை என குப்பை கூடைகள் பிரித்து கொடுத்தும் பெரும்பாலோனோர் மொத்தமாக கொடுக்கின்றனர். இதனால் ஆர்வமுள்ளசிலரின் பணியும், சுகாதார பணியாளர்களின் நேரமும் வீணாகிறது. அரசிற்கு மக்களும் ஒத்துழைப்பு தந்தால் மட்டுமே நுாறுசதவீதம் வெற்றி அடையமுடியும்.- வேல்முருகன், சமூக ஆர்வலர், செட்டியார்பட்டி.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X