பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு

Added : ஜூலை 14, 2018
Advertisement

சிங்கம்புணரி, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் நடத்தும் 45 வது ஜூனியர் கபடி போட்டி வரும் ஆக.3 முதல் 5ம் தேதி வரை திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் நடக்கிறது. இப்போட்டியில் அனைத்து மாவட்ட அணிகளும் பங்கேற்கின்றன. இதில் சிவகங்கை மாவட்ட அணி சார்பில் பங்கேற்க வீரர்கள் தேர்வு நடக்கிறது. திருப்புத்துார் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லுாரியில் ஜூலை 20 ம் தேதி காலை 10:00 மணிக்கு இத்தேர்வு நடக்கிறது. வீரர்கள் 70 கிலோ எடை கொண்டவராகவும், 1998ம் ஆண்டு செப்.15ம் தேதிக்கு பின்னர் பிறந்தவராகவும் இருக்கவேண்டும். தேர்வுக்கு வரும் போது ஆதார் அட்டையை கொண்டுசெல்லவேண்டும். இது குறித்த விபரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கபடி கழக செயலாளர் ஜோதிமணியை 81908 13031 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X