பொது செய்தி

தமிழ்நாடு

இன்ஜி., 2ம் கட்ட கவுன்சிலிங் காலியிட விபரம் வெளியீடு

Added : ஜூலை 14, 2018
Share
Advertisement
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்காக, கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, ஒற்றை சாளர முறை மற்றும் 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்போருக்காக, கல்லுாரிகளில் காலியாக உள்ள இடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, ஒற்றை சாளர முறை மற்றும் 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, விளையாட்டு பிரிவு மாணவர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளி மாணவர்களுக்கு, ஜூலை, 6 முதல், 8 வரையில், கவுன்சிலிங் நடத்தப்பட்டு, இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள இடங்களுக்கு, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 16, 17ம் தேதிகளில் நடத்தப்படுகிறது.இந்நிலையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீட்டில், எந்தெந்த கல்லுாரிகளில், காலியிடங்கள் உள்ளன என்ற பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டியின், https://tnea.ac.in/ என்ற இணையதளத்தில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.விளையாட்டு பிரிவினருக்கு, 76 கல்லுாரிகளில், தலா ஒரு இடம் என, பாடப்பிரிவு மற்றும் இன ரீதியான ஒதுக்கீடு வாரியாக, விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அதேபோல், விளையாட்டு பிரிவில், தலா ஒரு பாடப்பிரிவில் காலியிடம் உள்ள, 235 கல்லுாரிகளின் பெயர்களும், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
- -நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X