பயிர் சாகுபடி அதிகரிப்பு ஆய்வு குழு அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர் சாகுபடி அதிகரிப்பு ஆய்வு குழு அமைப்பு

Added : ஜூலை 14, 2018
Share
பருவ மழையை பயன்படுத்தி, வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக, அதிகாரிகள் குழுவை, அரசு அமைத்துள்ளது.தமிழகத்தில், நெல் உள்ளிட்ட தண்ணீர் தேவை அதிகம் உள்ள பயிர்களுக்கு மாற்றாக, பருப்பு வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, மானாவாரி நிலங்களில், சாகுபடியை அதிகரிக்க, சிறப்பு திட்டத்தை, அரசு வகுத்துள்ளது.

பருவ மழையை பயன்படுத்தி, வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்காக, அதிகாரிகள் குழுவை, அரசு அமைத்துள்ளது.தமிழகத்தில், நெல் உள்ளிட்ட தண்ணீர் தேவை அதிகம் உள்ள பயிர்களுக்கு மாற்றாக, பருப்பு வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக, மானாவாரி நிலங்களில், சாகுபடியை அதிகரிக்க, சிறப்பு திட்டத்தை, அரசு வகுத்துள்ளது. இதேபோல, காய்கறிகள், பழங்கள், வாசனை பொருட்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர் சாகுபடியை அதிகரிக்கவும், சிறப்பு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது, பரவலாக மழை பெய்து வருகிறது. இதை பயன்படுத்தி, அரசின் உணவு தானிய உற்பத்தி இலக்கை எட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, வேளாண் இயக்குனர், தோட்டக்கலைத் துறை இயக்குனர் தலைமையில், சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர், பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, சாகுபடியை அதிகரிப்பதற்கான முயற்சி களை துவங்கி உள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X