கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நிர்மலா வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Added : ஜூலை 14, 2018
Advertisement

விருதுநகர்:நிர்மலாதேவி வழக்கை விரைவுப்படுத்த, மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டதையடுத்து, 87 நாட்களுக்கு பின், நேற்று விருதுநகர், ஜே.எம்., 2 நீதிமன்றத்தில், 1,160 பக்க குற்றப்பத்திரிகையை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தாக்கல் செய்தனர்.
மாணவியர் சிலரை தவறான பாதைக்கு அழைத்ததாக, அருப்புக் கோட்டை தேவாங்கர் கல்லுாரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார்.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணையில் உதவிப்பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். மூவரின் ஜாமின் மனுக்களும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்ற கிளை, 'தடயவியல் துறையின் அறிக்கையை, 30 நாட்களுக்குள் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு வழங்க வேண்டும்.'முதலாவது குற்ற பத்திரிகையை, 16க்குள்ளும், துணை குற்றப்பத்திரிகையை செப்., 10க்குள்ளும் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். 'அதை அந் நீதிமன்றம் விசாரணை செய்து, ஆறு மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும்' என, உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., முத்துசங்கரலிங்கம் விருதுநகர், ஜே.எம்.2., நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் திலகேஸ்வரியிடம், 1160 பக்கங்களில், முதல் கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். இவ்வழக்கு ஏப்., 17ல் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்ட நிலையில், 87 நாட்களுக்கு பின், நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X