போலீஸ் டைரி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஜூலை 14, 2018

பெண்ணை கொன்ற மேஸ்திரி கைதுஆந்திர மாநிலம், நகரி - புத்துார் புறவழிச் சாலை, மராட்டி ரயில்வே கேட் முட்புதரில், 4ம் தேதி, கை, கால்கள் கட்டியிருந்த நிலையில், பெண்ணின் சடலத்தை மீட்ட வடமால்பேட்டை போலீசார், கொலை வழக்காக பதிந்து, விசாரித்தனர்.கொலை செய்யப்பட்ட பெண், வடமால்பேட்டை அடுத்த, பங்காருரெட்டி கண்டிகையைச் சேர்ந்த செஞ்சம்மா, 45, என, தெரிந்தது. செஞ்சம்மா மொபைல் போனின் அழைப்புகளை வைத்து, அங்கைய்யா, 27, என்பவரை விசாரித்தனர். 60 ஆயிரம் ரூபாய் கடன் தகராறில், செஞ்சம்மாவை, கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததை, அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, மேஸ்திரியான அங்கைய்யாவை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

ஆந்திரா சரக்கு விற்றவர் கைதுபொதட்டூர்பேட்டை பகுதியில், ஆந்திர மாநில சரக்கு விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மாவட்ட, 'டாஸ்மாக்' மண்டல மேலாளர் முத்துகுமரன், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையத்தில், நேற்று சோதனை நடத்தினார்.அப்போது, ஆந்திர மாநில மதுபாட்டில்களை விற்ற ஒருவரை கண்காணித்து பிடித்தார்; 28 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். மேலும், ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசாரிடம், சரக்கு விற்ற நபரை ஒப்படைத்தார். கைது செய்து விசாரித்ததில், ஆந்திரா சரக்கு விற்றவர், பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி, 63, என, தெரிய வந்தது.

பெண் தற்கொலைகும்மிடிப்பூண்டி அருகே சிறுபுழல்பேட்டை கிராமம், எம்.ஜி.ஆர்., நகரில் வசித்தவர் மணி மனைவி அங்கம்மா, 35. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம், பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று இரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீராத வயிற்று வலி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

வேலைக்கு சென்ற பெண் மாயம்கும்மிடிப்பூண்டி அருகே பெரியவழுதலம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர், சோமு மகள் செல்வி, 18. அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். நேற்று, வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், வீடு திரும்பும் போது மாயமாகியுள்ளார். அவரது தந்தை சோமு புகாரை,கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

வாலிபர் துாக்கிட்டு தற்கொலைசெங்கல்பட்டு அடுத்த, வல்லம் கிராமத்தைச் சேர்ந்த, கூலி தொழிலாளியான டேனியேல், 37, குடிபோதையில், மனைவியிடம் தகராறு செய்தார். மனைவி திட்டியதால் மனமுடைந்த அவர், வீட்டில் துாக்கிட்டு, மயங்கிய நிலையில் இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி, நேற்று காலை, 9:30 மணிக்கு, டேனியேல் இறந்தார்.

இளம்பெண் மாயம்செங்கல்பட்டு அடுத்த, பரனுார் கிராமத்தைச் சேர்ந்த ராமசுப்ரமணி மனைவி பழனிமுத்து, 38. கணவனை பிரிந்து, தனியாக வசித்த வந்த இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 12ம் தேதி, வழக்கம் போல் வேலைக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. பழனிமுத்து அண்ணன் சக்திவேல் புகாரை, செங்கல்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X