பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி வளாகத்தில் மக்கள் தொடர்பு திட்டம்

Added : ஜூலை 14, 2018
Advertisement

உளுந்தை : உளுந்தை கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்ததால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது.கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சி ஒன்றிய அரசு உயர் நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம், நேற்று நடந்தது.தாசில்தார் தமிழ்செல்வன் முன்னிலை வகிக்க, ஆட்சியர் சுந்தரவல்லி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, ஊரக தொழில் துறை அமைச்சர், பெஞ்சமின் மற்றும் கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர், பாண்டியராஜன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில், 1,103 பேருக்கு, இலவச வீட்டுமனை பட்டாக்கள், 38 பழங்குடியினருக்கு ஜாதிச் சான்றிதழ்கள் என, மொத்தம், 1,228 பேருக்கு, நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.திருவள்ளூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வி.ஜி.ராஜேந்திரன், பொன்னேரி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., பலராமன், சார் ஆட்சியர் ரத்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சிக்கு முன் ஒலிபரப்பப்பட்ட, தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், பாதியில் துவங்கி, பாதியிலே முடிந்ததால், பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
மாணவர்கள் அவதிஅரசு பள்ளி மைதானத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றதால், ஒலிபெருக்கி ஒலியால், மாணவர்கள் கல்வி பாதிக்கப்பட்டது. முகாம் வந்தோரின் இரு சக்கர வாகனங்ஙகள், பெருமளவு மைதானத்தில் நிறுத்தப்பட்டதால், மாணவர்கள் சிரமம் அடைந்தனர். மக்கள் தொடர்பு திட்ட முகாமை பள்ளி விடுமுறை நாளில் நடத்தியிருக்கலாம் அல்லது ஊராட்சி பகுதியில் உள்ள காலி மைதானத்தில் நடத்தியிருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள்கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X