பொது செய்தி

தமிழ்நாடு

கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை 14 அடி உயர அலை எழும் என எச்சரிக்கை

Added : ஜூலை 14, 2018
Advertisement

சென்னை:வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. பருவ மழையின் தீவிரத்தால், ஒன்பது மாநில மீனவர்கள், கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், 'அரபி கடலை ஒட்டிய, கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, கோவா மற்றும் குஜராத் மாநிலங்களின் மீனவர்கள், கடலுக்குள் செல்ல வேண்டாம்' என, வானிலை மையம்எச்சரித்துள்ளது.வங்க கடலின் வட மேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், வடக்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.
அதனால், தமிழகம் மற்றும் ஆந்திரா மீனவர்கள், வங்க கடலின் ஆழ் கடல் பகுதிக்குள் செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தமான், நிகோபார் மற்றும் லட்சத்தீவுகளை சேர்ந்த மீனவர்களும், கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை, குளச்சல் மற்றும் தனுஷ்கோடி பகுதிகளில், 14 அடி வரை, கடல் அலைகள் கொந்தளிக்கும் என, கணிக்கப்பட்டுள்ளது.
'கோவை, நீலகிரி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், மிதமான மழை பெய்யும்.'சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்டம், தேவலாவில், 8 செ.மீ., மழை பெய்துஉள்ளது.வால்பாறை, 7; சின்ன கல்லார், 6; திருநெல்வேலி - பாபநாசம், பெரியாறு, 5; பொள்ளாச்சி, 4; செங்கோட்டை, தென்காசி, நாகர்கோவில், 2 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X