திருடிய நகைகளை திரும்ப கொடுத்த திருடன்

Added : ஜூலை 14, 2018
Advertisement

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில், திருடன் ஒருவன், தான் திருடிய நகைகளை, மன்னிப்பு கடிதத்துடன், உரிமையாளர் வீட்டு வாசலில் திரும்ப போட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில், இங்குள்ள தகழி கிராமத்தில் வசிக்கும் மதுகுமார், வீட்டை பூட்டிவிட்டு, உறவினரின் திருமணத்திற்காக, குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.அந்த சமயத்தில், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, வீட்டினுள் நுழைந்த திருடன், அலமாரியில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றான்.
வெளியூரில் இருந்து வீடு திரும்பிய குடும்பத்தினர், நகைகள் திருடப்பட்டது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு பின், மதுகுமாரின் வீட்டு வாசலில், ஒரு மன்னிப்பு கடிதத்துடன், திருடப்பட்ட நகைகள் அனைத்தும் ஒரு பார்சலில் கிடந்தன.அந்த கடிதத்தில், நகைகளை திருடியதற்காக மன்னிப்பு கேட்ட திருடன், தன் மீது புகார் கொடுக்க வேண்டாம் என்றும் எழுதியிருந்தான். 'நகைகளை திரும்ப ஒப்படைத்ததால், திருடன் மீது வழக்கு பதிவு செய்யவில்லை' என, போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X